Featured Posts

உலகத்தை அறிந்து, மறுமையை மறந்து வாழும் மனிதர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 061]

“அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் வெளிப்படையாகத் தெரிபவற்றை அறிகின்றார்கள். ஆனால், மறுமை பற்றி அலட்சியமானவர்களாகவே அவர்கள் இருக்கின்றார்கள்!”. (அல்குர்ஆன், 30:07)

என்ற இவ்வசனத்திற்கு பிரபல அல்குர்ஆன் விரிவுரையாளரும், பன்னூலாசிரியருமான அல்லாமா இப்னு கஸீர் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இவ்வாறு விளக்கம் கூறுகின்றார்கள்:-

“மனிதர்களில் அதிகமானோரிடம் இவ்வுலகம், அதன் சம்பாத்தியங்கள், அதன் விவகாரங்கள், அதிலுள்ளவைகள் குறித்த அறிவைத் தவிர வேறெதுவுமே இல்லாதிருக்கின்றது. உலக நன்மைகளைப் பெற்றுக்கொள்வதிலும், அதன் இலாபங்கள் மற்றும் பயன்களைப் பெறுவதற்கான வழிமுறைகளைத் தெரிந்திருப்பதிலும் திறமைமிக்க புத்திசாலிகளாக அவர்கள் இருக்கின்றனர். ஆனால், அவர்களுக்குப் பயனளிக்கும் மறுமை வாழ்வு விடயங்களில் அலட்சியமானவர்களாக இருக்கின்றார்கள். அவர்களில் ஒருவன், நல்ல புத்தியும் சிந்தனையும் இல்லாதவனாக இருந்து மோசடிக்குள்ளாக்கப்பட்டு இலகுவாக ஏமாற்றப்படும் மந்த புத்தியுடையவன் போல இருக்கின்றான்!”

{ நூல்: ‘தப்ஸீர் இப்னு கஸீர்’, அர்ரூம் எனும் 30 -ஆம் அத்தியாயத்தின் 07 – ஆம் வசனத்திற்கான விளக்கத்தில்.. }

 قال الله تعالى: { يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون } (سورة الروم، الآية – ٧ )
قال المفسر العلّامة إبن كثير رحمه الله تعالى: [ أي: أكثر الناس ليس لهم علم إلا بالدنيا وأكسابها وشؤونها وما فيها، فهم حذاق أذكياء في تحصيلها ووجوه مكاسبها، وهم غافلون عمّا ينفعهم في الدار الآخرة! كأن أحدهم مغفّل لا ذهن له ولا فكرة ]
{ تفسير إبن كثير، سورة الروم : الآية – ٧ }

தமிழில்…
அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *