Featured Posts

A.R.ரஹ்மானின் பிறந்தநாள் பரிசு

திலீப் குமாராக இருந்து இசைப்புயல் A.R.ரஹ்மானாக மாறியவரின் வாழ்க்கைப் பயணத்தில் இஸ்லாமியத் “தென்றல்” வீசிய அனுபவங்களையும், இன்றைய முஸ்லிம்களின் நிலையையும் பிரபல அரப் நியூஸ் பத்திரிக்கையாளருடன் பகிர்ந்து கொண்டதை மொழியாக்கம் செய்து நாமும் பகிர்ந்து கொள்வோம். A.R.ரஹ்மான் சமீபத்தில் ஹஜ் யாத்திரை மேற்கொண்டார். மனதை மயக்கி இறை வழிபாட்டிலிருந்து தன்னியல்பை மறக்கச் செய்யும் எதையும், அது கலை என்ற பெயரில் சொல்லப்படும் இசையாகவே இருந்தாலும் இஸ்லாம் விரும்பவில்லை. (இதுபற்றி பிறகு …

Read More »

இந்தியாவில் இஸ்லாம்-12

தொடர்-12: தோப்பில் முஹம்மது மீரான் 9-ம் நூற்றாண்டில் அல்லது அதற்குப் பிறகுதான் இங்கு இஸ்லாத்தின் வருகை என காட்டுவதற்கு சில வரலாற்று ஆசிரியர்கள் “துஹ்பத்துல் முஜாஹிதீன்” என்ற அரபி நூலின் கீழே கொடுக்கப்பட்ட பகுதியை மேற்கோள் காட்டுகின்றனர். “……மலபாரில் முதல்முதலாக இஸ்லாம் மார்க்கம் பிரச்சாரத்தில் வந்த வரலாறு இதுவாகும். எந்த ஆண்டில் நடந்தது என்று திட்டவட்டமாகக் கூறுவதற்கு தகுந்த ஆதாரம் எதுவும் இல்லை. ஹிஜிரி 200க்குப் பிறகுதான் (நடந்து) இருக்க …

Read More »

வல்லரசுகளின் பிடியில் பாலஸ்தீனம்

உலகமெங்கும் அலைக்கழிக்கப்பட்டு சுற்றித் திரிந்த யூதர்கள், சுமார் 2000 ஆண்டுகள் வரை கிறிஸ்தவரின் கொடுமைகளுக்கு ஆளாகி வந்துள்ளனர். ஜெர்மனியில் 1933 – 1945 காலப் பகுதியில் ஹிட்லரின் கொடுமைகளுக்கு ஆளான யூதர்களுள் சுமார் 60 லட்சம் பேர் சித்திரவதை செய்யப்பட்டு இறந்துள்ளனர். இது மட்டுமல்ல, உலகில் சிதறி வாழ்ந்த அவர்களுக்கு எம் நாட்டில் இடமளித்து வாழச் செய்வோம் என எந்த மேற்கத்திய நாடும் முன்வரவில்லை. இதற்கு யூதர்களின் இயற்கையான போக்கும் …

Read More »

தீயவர்களிடம் அமர்தல்

நயவஞ்சகர்கள், தீயவர்களிடம் அமர்தல் அதாவது நயவஞ்சகர்கள் மற்றும் தீயவர்களிடம் என்பது மகிழ்வுடன் அல்லது அவர்களுக்கு மகிழ்வூட்டுவதற்காகவாகும். உறுதியான ஈமான் இல்லாத பெரும்பாலோர் கெட்டவர்களுடன், தீயவர்களுடன் அமர்ந்து கலந்துறவாட விரும்புகிறார்கள். ஏன் அல்லாஹ்வின் மார்க்கத்தையும் அதைப் பின்பற்றி நடக்கக் கூடியவர்களையும் குறை கூறக்கூடியவர்களுடனும், கேலி செய்யக் கூடியவர்களுடனும் கலந்துறவாடுகின்றனர். இத்தகைய செயல் சந்தேகமில்லாமல் விலக்கப்பட்டதும் ஈமானை மாசுபடுத்தக்கூடியது ஆகும். அல்லாஹ் கூறுகிறான்: “(நபியே!) நம் வசனங்கள் பற்றிக் குறை கூறிக் கொண்டிருப்போரை …

Read More »

இறைவன் தன் சிருஷ்டிகளைக் கொண்டு ஏன் சத்தியம் செய்ய வேண்டும்

அல்லாஹ் தன் சிருஷ்டிகளில் விரும்பியவற்றைக் கொண்டு மனிதர்களிடம் சத்தியம் செய்கிறான். மனிதர்களைப் பொறுத்தவரை சிருஷ்டிகளைக் கொண்டு மற்றொரு சிருஷ்டியிடம் அனுமதிக்கப்படாதது போல அவற்றைக் கொண்டு இறைவனிடத்திலும் சத்தியம் செய்வதில் ஷிர்க் நுழைந்து விடுகிறது. அல்லாஹ் தன் சிருஷ்டிகளைப் பாராட்டி அவற்றின் கௌரவத்தையும், அமைப்பையும், அவற்றைப் படைத்தல் இலேசான காரியமல்ல என்பவற்றையெல்லாம் எடுத்துக் கூறி அதன் காரணத்தினால் தன் ஏகத்துவத்தை உறுதிப் படுத்துகிறான். இவையனைத்தையும் ஏகத்துவத்தின் அத்தாட்சிகள் என்று தெரிவிப்பதற்காகவும் அவற்றைக் …

Read More »

கார்ட்டூன் விவகாரம்: இழிவுபடுத்தும் உரிமை?

இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை கேவலமாகச் சித்தரித்து டென்மார்க் பத்திரிக்கை (Jyllands-Posten) கார்ட்டூன் வெளியிட்டதையும் அதனை நார்வே கிறிஸ்தவப் பத்திரிக்கை மறுபதிப்புச் செய்து மேலும் அவமதித்ததையும் எதிர்த்து உலக முஸ்லிம்கள் கொதித்தெழுந்துள்ளார்கள். இதன் பிரதிபலிப்பாக பெரும்பாலான முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் டென்மார்க் மற்றும் நார்வேயின் பொருட்களை புறக்கணிப்பு செய்வது என்று முடிவு செய்துள்ளன. இஸ்லாம் உருவ வழிபாட்டையும் அதற்குக் காரணமாக இருக்கும் அநாவசிய சித்திரங்கள் தீட்டுவதையும் தடுக்கிறது. இறைவனைத்தவிர …

Read More »

அமெரிக்காவின் கள்ளப்பிள்ளை

உலக நாடுகளில் நடைபெறும் தீவிரவாதத்தை நிர்ணயிக்கும் ஏகபோக உரிமையை யாரும் கொடுக்காமலேயே அமெரிக்கா அடாவடியாக எடுத்துக் கொண்டுள்ளது. சர்வ வல்லமை கொண்ட ஒருநாடு தீவிரவாதத்திற்கு எதிராக தலை தாங்கினால் என்ன தவறு? என அப்பாவியாகக் கேட்பவர்கள் கவனிக்க: அமெரிக்கா, பிரிட்டனிடமிருந்து விடுதலையடைந்த 1945 ஆம் ஆண்டு முதல் இன்று வரை கிட்டத்தட்ட 216 தடவை வெளிநாட்டு விவகாரங்களில் இராணுவ ரீதியாகத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. 1945 முதல் தன்னுடைய சுயநலத்திற்காக இருபதுக்கும் …

Read More »

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (9)

பிளவுபட்ட தலைமை முடியாட்சி தாபிக்கப்பட்டதினால் விளைந்த முதல் கேடு தலைமை இருகூறாகப் பிளவுபட்டமையாகும். அண்ணலாரதும் தொடக்க காலக் கலீபாக்களதும் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் சமுதாயம் ஒரே தலைமையின் கீழ் இருந்தது. மத்திய அதிகாரபீடமே யாவற்றுக்கும் மேலானதாகத் திகழ்ந்தது. ஒழுக்கம், அறிவு, சமூகம், அரசியல் முதலிய அத்தனை வாழ்க்கைத் துறைகளும் அம்மத்திய அதிகார பீடத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் இருந்தன. மக்களால் தெரிவு செய்யப்பட்டவரான கலீபாவே மதத் தலைவராகவும், ஆட்சியாளராகவும் விளங்கினார். அவர் …

Read More »

சத்தியம் செய்தல்

அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்தல் அல்லாஹ் தன்னுடைய படைப்பினங்களில் தான் நாடியதைக் கொண்டு சத்தியம் செய்கிறான். ஆனால் மனிதர்களைப் பொருத்தவரையில் அல்லாஹ்வை விடுத்து மற்றவற்றைக் கொண்டு சத்தியம் செய்வது கூடாது. என்றாலும் பெரும்பாலான மக்களுடைய பேச்சுகளில் அல்லாஹ் அல்லாததைக் கொண்டு சத்தியம் செய்யும் வழக்கம் இருந்து வருகின்றது. எந்த மகத்துவம் அல்லாஹ்வுக்கே தவிர வேறு எவருக்கும் பொருந்தாதோ அத்தகைய மகத்துவம் சத்தியத்தில் உள்ளது. இப்னு உமர் (ரலி) அறிவிப்பதாவது: …

Read More »

ஸ்ரீஸ்ரீரவிசங்கர் Vs Dr. ஜாகிர் நாயக் (Debate)

புனித வேதங்களின் வெளிச்சத்தில் கடவுள் கொள்கை ஸ்ரீஸ்ரீரவிசங்கர் Vs Dr. ஜாகிர் நாயக் நன்றி: மக்கள் உரிமை வார இதழ் பெங்களூல் கடந்த சனிக்கிழமை (21-01-2006) அன்று Islamic Research Foundation இயக்குனரும், இஸ்லாமிய பிரச்சாரகருமான டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் “Art of Living” என்ற அமைப்பின் நிறுவனரும் இந்துமத விற்பன்னருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோர் பங்குகொண்ட கருத்துப் பரிமாற்ற அரங்கம் நடைபெற்றது. புனித வேதங்களின் வெளிச்சத்தில் …

Read More »