Featured Posts

ரமழானுக்குப் பின் நாம்..

தொகுப்பு: மௌலவி S.யாஸிர் ஃபிர்தவ்ஸி ரமழான் மாதத்தில் நோன்பை நல்ல முறையில் நிறைவேற்றவும், தொழுகை, குர்ஆன் ஓதுதல், பிரார்த்தனை, திக்ரு, தர்மம்.. போன்ற ஸாலிஹான அமல்களை செய்யவும் வாய்ப்பளித்த அல்லாஹ்விற்க்கே எல்லா புகழும். அவனது அருளும் சாந்தியும் நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தினர்கள், தோழர்கள், அவர்களை வாய்மையுடன் பின்பற்றி வந்தவர்கள் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-30)

30. இறைநம்பிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சோதனை! ஹதீஸ் 30. ஸுஹைப்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன் வாழ்ந்து சென்ற சமுதாயத்தில் ஒரு மன்னன் இருந்தான். அவனுக்கு ஒரு சூனியக்காரர் (ஆலோசகராக) இருந்தார். அவர் முதுமை அடைந்தபோது மன்னனிடம் சொன்னார்: ‘நான் முதுமை அடைந்து விட்டேன். எனவே ஒரு சிறுவனை என்னிடம் அனுப்பி வை. நான் அவனுக்குச் சூனியம் கற்றுக் கொடுக்கிறேன். அதன்படி சிறுவனொருவனை அவரிடம் அனுப்பி வைத்தான் …

Read More »

ரஹீக் – முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

அர்ரஹீக்குல் மக்தூம் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு உலகளாவிய போட்டியில் முதல் பரிசு பெற்ற நூல் ஆசிரியர்: இஸ்லாமியப் பேரறிஞர் ஸஃபிய்யுர் ரஹ்மான் முபாரக்பூரி தமிழில்: மௌலவி முஃப்தி உமர் ஷரீஃப் காசிமி தமிழ் வெளியீடு: தாருல் ஹுதா புத்தக வடிவம் (eBook):  Size: 1.74 MB முழு புத்தகத்தையும் படிக்க Read in PDF முழு புத்தகத்தையும் பதிவிறக்கம் செய்ய Download ஆடியோ வடிவம் (MP3): Download …

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்3-29)

29. ஆறுதல் சொல்வது, யாருக்கு? எப்படி? ஹதீஸ் எண்: 29. உஸாமா(ரலி) அவர்கள், (நபியவர்களால் விடுதலை செய்யப்பட்ட ஜைத் பின் ஹாரிஸா(ரலி) அவர்களின் மகன். இவரும் இவருடைய தந்தை ஜைத் அவர்களும் நபியவர்களின் பிரத்தியேக அன்புக்குரியவர் ஆவர்.) கூறுகிறார்கள்: நபியவர்களின் மகளார்- என் மகன் உயிர் பிரியும் நெருக்கடியான நிலையில் இருக்கிறான். எனவே நீங்கள் எங்களிடம் அவசியம் வரவேண்டும் என்று நபியவர்களுக்குத் தூது அனுப்பினார்கள். அதற்கு நபியவர்கள் ஓர் ஆள் …

Read More »

கர்கரே -ஐ கொலை செய்தது யார்? (Who killed Karkare?) – புத்தகத்தின் தமிழ் மொழிப்பெயர்ப்பு வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம்

S.M.முஷ்ரீஃப் I.P.S. (முன்னால் மகாராட்டிர மாநிலத்தின் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அவர்கள் எழுதிய ஹேமந்த் கர்கரே -ஐ கொலை செய்தது யார்? என்ற புத்தகத்தின் தமிழ் மொழிப்பெயர்ப்பு வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம். வழங்குபவர்கள்: M. குலாம் முஹம்மது (எழுத்தாளர், வேர்கள் வெளியீட்டகம்), தீரு அருணன் (எழுத்தாளர்), T. லஜபதிராய் (அட்வகேட், வைகை சட்ட அலுவலகம்), S.M.முஷ்ரீஃப் I.P.S. (மகாராட்டிர மாநிலத்தின் முன்னால் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல்). நாள்: 14-03-2010 …

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-28)

28. இப்படிச் செய்வதற்கு எப்படி மனம் வந்தது? ஹதீஸ் 28: அனஸ்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நபி(ஸல்)அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டபொழுது கடும் துன்பத்திற்கு உள்ளானார்கள். அப்போது ஃபாத்திமா(ரலி) அவர்கள் சொன்னார்கள்: ஆஹ்! என் அன்புத் தந்தைக்கு ஏற்பட்ட துன்பமே! – இதனைச் செவியுற்ற நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: இந்நாளுக்குப் பிறகு உன் தந்தைக்கு துன்பம் என்பதே இல்லை, என்று! – நபியவர்கள் மரணம் அடைந்தபோது ஃபாத்திமா(ரலி) அவர்கள் சொன்னார்கள்: என் அன்புத் தந்தையே! …

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-27)

27. இன்பமும் துன்பமும் நன்மையாய் அமைந்திட..! ஹதீஸ் 27: ஸுஹைப் பின் ஸினான்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்: ‘ ஓர் இறை நம்பிக்கையாளனின் விவகாரம் குறித்து நான் ஆச்சரியம் அடைகிறேன். அவனுடைய ஒவ்வொரு விஷயமும் அவனுக்கு நன்மையாகவே அமைகிறது. இது ஒரு நம்பிக்கையாளனுக்கே அன்றி வேறெவருக்கும் வாய்க்கப் பெறவில்லை! அவனுக்கு மகிழ்வு நிலை வந்தால் நன்றி செலுத்துகிறான். அது அவனுக்கு நன்மையாக அமைகிறது. அவனுக்கு கஷ்ட நிலை …

Read More »

அழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-1)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) மனிதன் இயல்பிலேயே தவறு செய்யக் கூடியவனாகப் படைக்கப்பட்டுள்ளான். பெரும் பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் நபிமார்கள் மட்டுமே! எனவே, தவறு செய்யும் இயல்புடைய மனிதனுக்கு நன்மையை ஏவுவதும், தீமை குறித்து எச்சரிக்கை செய்வதும் அவசியமாகும்.

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-26)

26. பொறுமையே சிறந்த செல்வம் ஹதீஸ் 26: அபூ ஸயீத் – அல்குத்ரி(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்: அன்ஸாரிகளில் சிலபேர் நபி(ஸல்) அவர்களிடம் பொருளுதவி கேட்டார்கள். நபியவர்களும் வழங்கினார்கள். மீண்டும் கேட்டார்கள். நபியவர்கள் மீண்டும் வழங்கினார்கள். இறுதியில் நபியவர்களிடம் இருந்த அனைத்தும் தீர்ந்து விட்டன. இவ்வாறாக தங்கள் கைவசம் இருந்த அனைத்தையும் (இறைவழியில்) நபியவர்கள் செலவு செய்து விட்டபொழுது அந்த அன்ஸாரிகளிடம் சொன்னார்கள்: ஏதேனும் செல்வம் என்னிடம் வந்தால் நான் அதை உங்களுக்குத் …

Read More »