மனிதன் உலகத்தில் சுதந்திரமாக வாழ்வதற்கு, சில நிபந்தனைகளுடன் இஸ்லாம் முழு அனுமதியையும் வழங்கி இருக்கின்றது. அதில் ஒன்றுதான் பாடல்களை கேட்டு ரசிப்பது. இஸ்லாத்தில் பாடல்கள் கேட்பதற்கு எந்த தடையுமில்லை, ஆனால் பாடல்கள் மூன்று நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ஒன்று ஷிர்க்கில்லாத பாடலாக இருக்க வேண்டும், இரண்டாவது தவறான கருத்துக்களில்லாத பாடலாக இருக்க வேண்டும். மூன்றாவது இசை இல்லாத பாடலாக இருக்க வேண்டும்.
Read More »ஷைய்க் K.L.M.இப்ராஹீம் மதனீ
ஹஜ் பயிற்சி முகாம் – (08-12-2006)
வழங்குபவர்: மௌலவி K.L. முஹம்மத் இப்ராஹீம் மதனீ வெளியீடு: ஸனாய்யியா இஸ்லாமிய வழிகாட்டி மையம், ஜித்தா (சவுதி அரேபியா) Part-1 Part-2 (Video long altered, due to copyrights clips were removed) Download Video Download Part 1 MP4 video (Size – 477 MB) Download Part 2 MP4 video (Size – 478 MB)
Read More »ஹஜ் உம்ரா வழிகாட்டி (ebook)
Donwload PDF Book
Read More »குற்றப்பரிகாரம் (கஃப்ஃபாரா)
இஸ்லாம் நல்ல காரியத்தின் பக்கம் மக்களை நேர்வழி காட்டுகின்றது, தவறுகளிலிருந்து தடுக்கின்றது. அதிலும் பெரும்பாவங்களிலிருந்து முற்றாக தடுக்கின்றது. ஒருவர் தடுக்கப்பட்ட பாவங்களை செய்துவிட்டால், அல்லாஹுவிடத்தில் உண்மையான தவ்பா செய்வதுடன், சில பாவங்களுக்கு குற்றப்பரிகாரத்தையும் வழங்க வேண்டும்.
Read More »முஸ்லிம்களும் சுன்னாவின் அவசியமும்
வழங்குபவர்: மௌலவி K.L.M. இப்ராஹீம் மதனீ மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நாள்: 15-05-2009 இடம்: ஜி.சி.டி.கேம்ப், துறைமுகம், ஜித்தா, சவூதி அரேபியா நிகழ்ச்சி ஏற்பாடு: துறைமுக அழைப்பகம், துறைமுகம், ஜித்தா, சவூதி அரேபியா VCD available at “Sea Port Dawah Center, Jeddah islamic port, Jeddah, K.S.A.”
Read More »[31] ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பின் சிறப்புகள்
”யார் ரமளான் மாதத்தின் நோன்பை நோற்று பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றாரோ (அவர்) வருடமெல்லாம் நோன்பு நோற்றதற்குச்சமம்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
Read More »[30] நோன்பின் ஒழுக்கங்கள்
1) பஜ்ருக்கு சற்று முன்பு ஸஹர் உணவு உண்பதும், சூரியன் மறைந்தவுடனேயே தாமதப்படுத்தாது நோன்பு திறப்பதும் சுன்னத்தாகும். 2) பேரீத்தம்பழத்தைக் கொண்டு நோன்பு திறப்பது, அது கிடைக்கவில்லையெனில் தண்ணீரைக் கொண்டு நோன்பு திறப்பது சுன்னத்தாகும்.
Read More »[29] நோன்பின் அனுமதிகள்
1) நோன்பின் போது காயங்களுக்கு மருந்து போடுதல், பல் பிடுங்குதல், கண், காதுகளுக்கு சொட்டு மருந்திடுதல் போன்றவற்றிற்கு அனுமதியுள்ளது. 2) நோன்பு நாட்களின் பகற்பொழுதில் பல்துலக்குவதில் தவறில்லை. அது நோன்பல்லாத நாட்களில் சுன்னத்தாக இருப்பது போன்றே, நோன்பு நாட்களிலும் சுன்னத்தாகும்.
Read More »[28] நோன்பை முறிக்கும் செயல்கள்
1) சாப்பிடுதல், குடித்தல், புகைபிடித்தல் போன்றவற்றால் நோன்பு முறிந்துவிடும். 2) முத்தமிடுதல், அணைத்தல், சுய இன்பம் போன்றவற்றால் இந்திரியம் வெளியானால் நோன்பு முறிந்துவிடும். தூக்கத்தில் தானாகவே இத்திரியம் வெளியானால் நோன்பு முறியாது. 3) உணவைப் போன்று சக்தியூட்டக்கூடிய பொருட்களை (மருந்து, குளுக்கோஸ் போன்றவைகளை) ஊசி போன்றவற்றின் மூலம் உடம்பிற்குள் செலுத்தினால் நோன்பு முறிந்துவிடும். 4) மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு முறிந்துவிடும்.
Read More »[27] நோன்பின் கடமைகள் (பர்ளுகள்)
1) பருவமடைந்த முஸ்லிமான ஆண், பெண் அனைவரின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும். பருவமடையாதவர்களின் மீது நோன்பு நோற்பது கடமையில்லை என்றாலும், பழக்கப்படுத்துவதற்காக நோன்பு நோற்குமாறு ஏவலாம். 2) பைத்தியக்காரர்கள், நன்மை, தீமையை பிரித்தறிய முடியாத மூளை வளர்ச்சி குன்றியவர்கள், வயோதிகத்தால் புத்தி பேதலித்தவர்கள் ஆகியோர் மீது நோன்பு நோற்பது கடமையில்லை. நோன்பிற்குப் பகரமாக ஏழைகளுக்கு உணவு கொடுக்க வேண்டியதுமில்லை.
Read More »