Featured Posts
Home » 2008 » February

Monthly Archives: February 2008

ஹூதைபிய்யா உடன்படிக்கை பற்றி….

1167. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யாக்காரர்களிடம் (மக்காவாசிகளான குறைஷிகளிடம் ஹுதைபிய்யா எனுமிடத்தில்) சமாதான ஒப்பந்தம் செய்தபோது அலீ இப்னு அபீ தாலிப் (ரலி), அவர்களிடையிலான ஒப்பந்தப் பத்திரத்தை எழுதினார்கள். அப்போது, ‘அல்லாஹ்வின் தூதரான முஹம்மத்’ என்று அவர்கள் எழுத, இணைவைப்பவர்கள், ‘அல்லாஹ்வின் தூதரான முஹம்மத்’ என்று எழுதாதீர்கள்” (என்று சொல்லிவிட்டு) முஹம்மத் (ஸல்) அவர்களை நோக்கி), ‘நீர் அல்லாஹ்வின் தூதராக இருந்திருந்தால் நாங்கள் உம்முடன் போரிட்டிருக்க மாட்டோம்” என்று கூறினர். …

Read More »

கஃபாவிலிருந்து சிலைகளை அகற்றுதல்.

1166. நபி (ஸல்) அவர்கள் கஅபாவைச் சுற்றிலும் முந்நூற்று அறுபது சிலைகள் இருக்க, மக்கா நகருக்குள் நுழைந்தார்கள். அப்போது அவர்கள், தம் கையிலிருந்த குச்சியால் அவற்றை (குத்தி) அடிக்கத் தொடங்கினார்கள். ‘சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்துவிட்டது” (திருக்குர்ஆன்- 17-81) என்னும் வசனத்தை கூறத் தொடங்கினார்கள். புஹாரி :2478 இப்னு மஸ்ஊத் (ரலி).

Read More »

அறிவும் சுதந்திரமும்!

அல்லாஹ்வின் ஓர் உயர் படைப்பான மனிதன் நல்வாழ்வு பெறுவதற்கு, இஸ்லாம் எனும் வாழ்க்கை முறையைக் கொடுத்தான் என்பதை நாம் முன்னர் விளக்கமாகப் பார்த்தோம். எனினும், மனிதன் இஸ்லாத்தை ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்று அல்லாஹ் பலவந்தப்படுத்தவில்லை. மாறாக மனிதனுக்கு – சிந்திக்கக் கூடிய ஆற்றலைக் கொடுத்தான் – நல்லது கெட்டதைப் புரிந்துக் கொள்ளக்கூடிய திறமையைக் கொடுத்தான். அத்துடன், – இவற்றைத் தான் விரும்பியவாறு பயன்படுத்தும் சுதந்திரத்தையும் கொடுத்தான். அல்லாஹ்வின் இவ்வேற்பாடு …

Read More »

தாயிஃப் யுத்தம்.

1165. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தாயிஃப் நகரத்தை முற்றுகையிட்டபோது அவர்களால் அம்மக்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே, ‘இறைவன் நாடினால் நாம் (நாளை மதீனாவுக்குத்) திரும்பிச் செல்வோம்” என்று அவர்கள் கூறினார்கள். அவர்கள் இப்படிச் சொன்னது நபித்தோழர்களுக்கு வருத்தமளித்தது. அவர்கள், ‘இதை வெற்றி கொள்ளாமல் நாம் திரும்பிச் செல்வதா?’ என்று பேசிக்கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் (மீண்டும்) ஒரு முறை, ‘நாம் திரும்பிச் செல்வோம்” என்று கூறினார்கள். பிறகு (தோழர்களின் …

Read More »

ஹூனைன் போர் பற்றி….

1163. பராஉ (ரலி) அவர்களிடம் ஒருவர், ‘அபூ உமாராவே! நீங்கள் ஹுனைன் போரின்போது பின்வாங்கி ஓடினீர்களா?’ என்று கேட்க, அதற்கு அவர்கள், ‘இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் புறமுதுகிட்டுச் செல்லவில்லை. ஆயினும், அவர்களின் தோழர்களில் வாலிபர்களும் ஆயுதபலமில்லாதவர்களும் களைத்துப் போய் நிராயுதபாணிகளாக வெளியேறினர். அவர்கள் ஹவாஸின் மற்றும் பனூ நஸ்ர் சமுதாயத்தாரின் வில் வீரர்களைக் கடந்து சென்றனர். அவர்களின் எந்த அம்பும் இலக்கு தவறி விழுவதில்லை. அவர்கள் …

Read More »

ஹெர்குலிஸூக்கு இஸ்லாத்தைத் தழுவ நபி (ஸல்) அவர்கள் எழுதிய கடிதம்.

1162. அபூ சுஃப்யான்(ரலி) தம் வாய்ப்பட எனக்கு அறிவித்தாவது: (குறைஷியரின் முக்கிய தலைவராயிருந்த) எனக்கும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குமிடையிலான (ஹுதைபிய்யா சமாதான ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த) காலகட்டத்தில் நான் (வியாபாரத்திற்காக வாணிபக் குழுவினருடன் ஷாம் நாட்டிற்குச்) சென்றிருந்தேன். நான் ஷாம் நாட்டில் இருந்துகொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்களிடமிருந்து (ரோம பைஸாந்தியப் பேரரசர் சீசர்) ஹெராக்ளியஸிற்கு நிருபமொன்று கொண்டுவரப்பட்டது. அதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து ‘திஹ்யா அல் கல்பீ’ அவர்கள் கொண்டு …

Read More »

எதிரி நிலத்திலிருந்து உணவைப் பெறுதல்.

1161. நாங்கள் கைபர் கோட்டையை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது ஒருவர், கொழுப்பு அடங்கிய தோல்பை ஒன்றை எறிந்தார். நான் அதை எடுக்க விரைந்து சென்றேன். பிறகு திரும்பிப் பார்த்தேன். அங்கே நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அவர்களைக் கண்டு நான் வெட்கமடைந்தேன். புஹாரி 3153 அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி).

Read More »

அன்ஸாரிகளின் உடமைகளை முஹாஜிர்கள் திருப்பியளித்தல்.

1159. முஹாஜிர்கள் (மக்காவிலிருந்து) மதீனாவுக்கு வந்தபோது அவர்களின் கையில் (செல்வம்) எதுவும் இருக்கவில்லை. அன்சாரிகள் நிலங்களையும் (பிற) அசையாச் சொத்துக்களையும் வைத்திருந்தார்கள். ஒவ்வோர் ஆண்டும் தங்கள் சொத்துக்களின் விளைச்சல்களை அவர்களுக்கு (குறிப்பிட்ட விகிதத்தில்) கொடுப்பதாகவும் ‘எங்களுக்கு பதிலாக நீங்கள் அதில் சிரமப்பட்டு உழைக்க வேண்டும்’ என்ற நிபந்தனையின் பேரிலும் அவற்றை முஹாஜிர்களுக்கு (குத்தகை நிலங்களாகப்) பங்கிட்டுக் கொடுத்தார்கள். என்னுடைய தாயார் உம்மு சுலைம் அவர்கள் (என் தாய்வழிச் சகோதரர்) அப்துல்லாஹ் …

Read More »

சில காரியங்களில் துரிதம் காட்டுதல்.

1158. அஹ்ஸாப் யுத்தத்திலிருந்து திரும்பியபோது எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் ‘பனு குரைலாக் கூட்டத்தினர் வசிக்கும் இடத்தை நீங்கள் அடையும் வரை அஸர் தொழ வேண்டாம்” என்று கூறினார்கள். வழியிலேயே அஸர் நேரத்தை அடைந்தோம். ‘பனூ குரைலாக் கூட்டத்தினர் வசிக்கும் இடத்தை அடையும் வரை நாம் அஸர் தொழவேண்டாம்’ என்று சிலர் கூறினர். வேறு சிலர் ‘இந்த அர்த்தத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை; எனவே நாம் தொழுவோம்’ என்றனர். …

Read More »