Featured Posts
Home » 2008 » June (page 4)

Monthly Archives: June 2008

அரைகுறை தலை மழித்தலுக்குத் தடை.

1373. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டு விடுவதைத் தடை செய்தார்கள். புஹாரி : 5921 இப்னு உமர் (ரலி).

Read More »

கால் நடைகள் முகத்தில் அடையாளமிடாதே.

1372. (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்குக் குழந்தை பிறந்தபோது என்னிடம் அவர்கள் ‘அனஸே! இந்தக் குழந்தையை நன்கு கவனித்துக்கொள். நபி (ஸல்) அவர்கள் (இனிப்புப் பொருளை) மென்று இவனுடைய வாயிலிடுவதற்காக இவனை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துச் செல்லும்வரை இவன் எதையும் சாப்பிட்டுவிட வேண்டாம்” என்றார்கள். அவ்வாறே நான் அவனை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துச் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்தில் ‘ஹுரைஸ்’ …

Read More »

கண் திருஷ்டிக்கு ஒட்டகக் கழுத்தில் எதையும் கட்டாதே.

1371. நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பயணம் ஒன்றில் அவர்களுடன் இருந்தேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தூதுவர் ஒருவரை அனுப்பி, ‘எந்த ஒட்டகத்தின் கழுத்திலும் (ஒட்டக வாரினால் ஆன, கண் திருஷ்டி கழிவதற்காகக் கட்டப்படுகிற) கயிற்று மாலையோ அல்லது (காற்று, கருப்பு விரட்டுவதற்காகக் கட்டப்படுகிற) வேறெந்த மாலையோ இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் கட்டாயம் அதைத் துண்டித்து விட வேண்டும்” என்று (பொது மக்களிடையே) அறிவிக்கச் செய்தார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் …

Read More »

நாய் உள்ள வீட்டில் அருள் மலக்குகள் நுழைய மாட்டார்கள்.

1363. நாயும் (உயிரினங்களின் சிலைகள் அல்லது) உருவப் படங்களும் உள்ள வீட்டினுள் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 3225 அபூ தல்ஹா (ரலி). 1364. ”(உயிரினங்களின்) உருவப் படமுள்ள வீட்டில் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என என்னிடம் அபூ தல்ஹா (ரலி) தெரிவித்தார்கள். …

Read More »

இஸ்லாம் முழங்குவது எதனை?

வணக்கத்துக்குரிய ஏக இறைவன் ஒருவனை மட்டுமே வணங்கும்படி இஸ்லாம் அழைக்கின்றது. மேலும், தன்னுடைய அறிவு ஞானத்தைக் கொண்டு சிந்தித்து உணருமாறு மனிதனுக்கு திரும்ப திரும்ப கட்டளையிடுகின்றது. இஸ்லாம் பரவிய ஒரு சில வருடங்களுக்குள்ளாகவே உலகின் மாபெரும் நாகரிகங்களும், பல்கலைக்கழகங்களும் வளமானதொரு வாழ்வை நோக்கி நடைபோடத் துவங்கின. “அறிவைத் தேடிப்பெறுவது ஒவ்வொரு முஸ்லிம் ஆண்-பெண் மீதும் கடமை” – எனும் முஹம்மத் (ஸல்) அவர்களின் அமுதமொழி இம்மாபெரும் புரட்சிக்கு அடிகோலியது! இதன் …

Read More »

யூத கிறிஸ்தவர்களுக்கு மாறுசெய்தல்.

1362. யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலைமுடிக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. எனவே, நீங்கள் (அவற்றிற்குக் கருப்பு அல்லாத சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 3462 அபூஹுரைரா (ரலி).

Read More »

ஆண்கள் குங்குமப் பூ சாயமிடத் தடை.

1361. ஆண்கள் (தங்களின் மேனியில்) குங்குமப் பூச் சாயமிட்டுக் கொள்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். புஹாரி : 5846 அனஸ் (ரலி).

Read More »

[ரஹீக் 004] – ஆசிரியர் முன்னுரை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவன் தனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நேர்வழி மற்றும் சத்திய மார்க்கத்தை வழங்கி, உலகிலுள்ள அனைத்து மார்க்கங்களையும் வெற்றி கொள்ளும்படி செய்தான். மேலும், சாட்சியாளராகவும், நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவும், அல்லாஹ்வின் பக்கம் அவனது கட்டளையைக் கொண்டு அழைக்கும் அழைப்பாளராகவும், பிரகாசிக்கும் கலங்கரை விளக்காகவும் அவரை ஆக்கினான். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் அஞ்சி …

Read More »

[ரஹீக் 003] – ஆசிரியரின் வாழ்க்கைக் குறிப்பு

பெயர்: ஸஃபியுர்ரஹ்மான் இப்னு அப்துல்லாஹ் இப்னு முஹம்மது அக்பர். உத்தர பிரதேச மாநிலம் ஆஜம் கட் மாவட்டத்திலுள்ள ‘முபாரக்பூர்’ எனும் நகரத்திலிருந்து ஒரு மைல் தொலைவிலுள்ள ‘ஹுஸைனாபாத்’ எனும் கிராமத்தில் 1942 ஆம் ஆண்டு ஆசிரியர் பிறந்தார். 1948ஆம் ஆண்டு ‘தாருத்தஃலீம்’ (முபாரக்பூர்) என்ற இஸ்லாமிய மத்ரஸாவில் அடிப்படை மற்றும் தொடக்கக் கல்வி கற்க சேர்ந்தார். 1954ஆம் ஆண்டு ‘இஹ்யாவுல் உலூம்’ (முபாரக்பூர்) என்ற இஸ்லாமிய மத்ரஸாவில் நடுநிலைக் கல்வி …

Read More »

[ரஹீக் 002] – தாருல் ஹுதாவின் அறிமுகம்

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! இறையருளும் ஈடேற்றமும் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தார், தோழர்கள், அவர்களைப் பின்பற்றும் அனைவருக்கும் மறுமை நாள் வரை தொடரட்டும். அஸ்ஸலாமு அலைக்கும்.. சமுதாயம் என்பது பல தனி மனிதர்கள் சேர்ந்த ஒரு கூட்டமைப்பு. முழுமையாக சீர்திருத்தம் பெற்ற மக்களை உயர் சமுதாயமாகவும், சீர்திருத்தம் பெறாதவர்களை தாழ்ந்த சமுதாயமாகவும் கருதுவது இயற்கை. ஆகவே, சமுதாயம் மேம்பட ஒவ்வொருவரும் தம்மை முழுமையாக சீர்திருத்திக் கொள்வதும், …

Read More »