Featured Posts
Home » 2008 » June (page 5)

Monthly Archives: June 2008

காலின் மேல் காலைப்போட்டு மல்லாக்கப் படுத்தல்.

1360. நபி (ஸல்) அவர்கள் ஒரு காலின் மேல் இன்னொரு காலைப் போட்டுக் கொண்டு பள்ளிவாசலில் மல்லாந்து படுத்திருந்ததை கண்டேன். புஹாரி :475 அப்பாஸ் பின் தமீம் (ரலி).

Read More »

[ரஹீக் 001] – அர்ரஹீக்குல் மக்தூம் – பதிப்புரை

அர்ரஹீக்குல் மக்தூம் ஆசிரியர்: அஷ்ஷைக் ஸஃபிய்யுர் ரஹ்மான், உ.பி., இந்தியா தமிழில் வெளியீடு: தாருல் ஹுதா பதிப்புரை தொடக்கத்திலும் இறுதியிலும் அகிலத்தாரின் இறைவன் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! அகிலத்தாருக்கு ஓர் அருட்கொடையாக வந்த இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தார், தோழர்கள், உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் இறையருளும் ஈடேற்றமும் உண்டாகுக! உங்கள் கைகளில் தவழும் – இந்நூல் பற்றிய சுருக்கமான ஓர் அறிமுகத்தை தங்களுக்கு முன் சமர்ப்பிக்கின்றோம்

Read More »

காலணி அணியும்போது முதலில் வலதுகாலை முற்படுத்துதல்.

1358. நீங்கள் காலணி அணியும்போது முதலில் வலது காலில் அணியுங்கள்; அதைக் கழற்றும்போது முதலில் இடது காலில் இருந்து கழற்றுங்கள். வலது காலே அணிவதில் முதலாவதாகவும், கழற்றுவதில் இறுதியாகவும் இருக்கட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 5855 அபூஹுரைரா (ரலி). 1359. நீங்கள் ஒரேயொரு காலணியில் நடக்க வேண்டாம். ஒன்று, இரண்டு காலணிகளையும் ஒரு சேரக் கழற்றிவிடுங்கள்; அல்லது இரண்டையும் ஒரு சேர அணிந்து கொள்ளுங்கள் …

Read More »

மோதிரத்தில் இலச்சினை.

1356. நபி (ஸல்) அவர்கள் ஒரு மடல் எழுதிடும்படிக் கூறினார்கள். அல்லது எழுதிட நாடினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் ‘அவர்கள் எந்த மடலையும் முத்திரையிடப்படாமல் படிக்க மாட்டார்கள்’ என்றும் சொல்லப்பட்டது. உடனே வெள்ளியில் ஒரு மோதிரம் செய்தார்கள். அதில் பொறிக்கப்பட்டிருந்த வாக்கியம் ‘முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்” என்பதாகும். நபி (ஸல்) அவர்களின் கையில் அம்மோதிரம் இருக்கும் நிலையில் அதன் (பளிச்சிடும்) வெண்மையை (இப்போதும் நேரில்) நான் பார்த்துக் கொண்டிருப்பது போலிருக்கிறது” …

Read More »