Featured Posts

Tag Archives: அல்லுஃலுவு வல்மர்ஜான்

கனவில் என்னைக் (நபியை) கண்டவர்….

1461. ‘கனவில் என்னை காண்கிறவர் விழிப்பிலும் என்னைக் காண்பார். (ஏனெனில்) ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்க மாட்டான் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. புஹாரி :6993 என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். (அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:”நபி (ஸல்) அவர்களுக்குரிய தோற்றத்தில் (அவர்களின் அங்க லட்சணங்களுடன்) அவர்களைக் கண்டால்தான் (நபி (ஸல்) அவர்களைக் கனவு கண்டதாகக் கருதப்படும்)” என்று இப்னு சீரின் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.)

Read More »

நல்ல, தீய கனவுகள் பற்றி….

கனவுகள். 1456. ”(நல்ல) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். (கெட்ட) கனவு ஷைத்தான் இடமிருந்து வருவதாகும். எனவே நீங்கள் வெறுக்கிற ஒரு விஷயத்தைக்(கனவில்)கண்டால் கண் விழிக்கும்போது மூன்று முறை (இடப் பக்கமாகத்) துப்பி, அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரினால் அது அவருக்கு தீங்கிழைக்காது’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :5747 அபூ கத்தாதா (ரலி) . 1457. (மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகக்) காலம் சுருங்கும்போது இறை நம்பிக்கையாளர் …

Read More »

கவிதை குறித்து….

கவிதை. 1454. கவிஞர் சொன்ன சொற்களிலேயே மிக உண்மையான சொல், (கவிஞர்) லபீத் இப்னு ரபீஆ சொன்ன (”அறிக! அல்லாஹ்வைத் தவிர உள்ள பொருள்கள் அனைத்துமே அழியக் கூடியவையே” எனும் சொல்தான். (கவிஞர்) உமய்யா இப்னு அபிஸ் ஸல்த் (தம் கவிதையின் கருத்துகளால்) இஸ்லாத்தை ஏற்கும் அளவிற்கு வந்துவிட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 6147 அபூ ஹுரைரா (ரலி). 1455. ஒரு மனிதரின் வயிற்றில் …

Read More »

மனம் பற்றிக் கூறுதல்.

1452. உங்களில் (மனக் குழப்பத்திலிருக்கும்) யாரும் (‘என் மனம் அசுத்தமாகிவிட்டது’ எனும் பொருள் பொதிந்த) ‘கபுஸத் நஃப்ஸீ’ எனும் சொல்லைக் கூற வேண்டாம். மாறாக, (‘என் மனம் கனத்துவிட்டது’ எனும் பொருள் கொண்ட) ‘லம்சத் நஃப்ஸீ’ எனும் சொல்லையே கூறட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 6179 ஆயிஷா (ரலி) . 1453. உங்களில் (மனக் குழப்பத்திலிருக்கும்) யாரும் (‘என் மனம் அசுத்தமாகிவிட்டது’ எனும் பொருள் …

Read More »

காலத்தைத் திட்டாதே.

இனிய சொற்கள் கூறுதல். 1449. வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் சொன்னான்: ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகிறான். அவன் காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்); என் கையிலேயே அதிகாரம் உள்ளது; நானே இரவு பகலை மாறி மாறி வரச் செய்கிறேன். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :4826 அபூ ஹுரைரா (ரலி). 1450. திராட்சையை (‘கண்ணியமானது’ எனும் பொருள் கொண்ட) ‘அல்கர்ம்’ என்று பெயரிட்டழைக்காதீர்கள். ‘மோசமான …

Read More »

விலங்குகளுக்கு நீர் புகட்டுதல்.

1447. ஒருவர் (ஒரு பாதையில்) நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு, (கிணற்றிலிருந்து) அவர் வெளியே வந்தபோது, நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்கவிட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனத்திற்குள்) ‘எனக்கு ஏற்பட்டதைப் போன்ற(அ)தே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கிறது போலும்’ என்று …

Read More »

பூனைகளைக் கொல்லத் தடை.

1446. ஒரு பூனையை, அது சாகும் வரை (பட்டினி போட்டு) கட்டி வைத்த காரணத்தால் பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள். அதை அடைத்து வைத்தபோது அவள் அதற்குத் தீனியும் போடவில்லை அதற்கு (குடிக்கத்) தண்ணீரும் கொடுக்கவில்லை; அவள் அதை பூமியின் புழு பூச்சிகளைத் தின்ன (அவிழ்த்து) விடவுமில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 3482 இப்னு உமர்(ரலி) .

Read More »

எறும்புகளைக் கொல்லத் தடை.

1445. இறைத்தூதர்களில் ஒருவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே, அந்த எறும்புப் புற்றையே எரித்து விடும்படி அவர் கட்டளையிட்டார். அவ்வாறே அது எரிக்கப்பட்டுவிட்டது. (இதைக் கண்ட) அல்லாஹ், ‘ஓர் எறும்பு உங்களைக் கடித்துவிட்ட காரணத்தால் அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருந்த சமுதாயங்களில் ஒன்றையே நீங்கள் எரித்து விட்டீர்களே” என்று (அவரைக் கண்டிக்கும் விதத்தில்) அவருக்கு அறிவித்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :3019 அபூ ஹுரைரா (ரலி) …

Read More »

பல்லிகளைக் கொல்ல அனுமதி.

1443. நபி (ஸல்) அவர்கள் பல்லிகளைக் கொல்லும் படி தமக்கு உத்தரவிட்டதாக உம்மு ஷரீக் (ரலி) என்னிடம் தெரிவித்தார்கள். புஹாரி : 3307 உம்மு ஷரீக் (ரலி). 1444. ”பல்லி தீங்கிழைக்கக் கூடியது!”ஆனால், ‘அதைக் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதை நான் செவியுறவில்லை!” என்றும் ஆயிஷா (ரலி) கூறினார். புஹாரி : 1831 ஆயிஷா (ரலி).

Read More »

பாம்புகளைக் கொல்லுதல் வேண்டும்.

1441. நபி(ஸல்) அவர்கள் மிம்பரின் மீதிருந்து உரையாற்றியபடி, பாம்புகளைக் கொல்லுங்கள். முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் கொண்ட (‘தாத் துஃப்யத்தைன்’ என்னும்) பாம்பையும் குட்டையான – அல்லது – சிதைந்த வால் கொண்ட (‘அப்தர்’ எனும்) பாம்பையும் கொல்லுங்கள். ஏனெனில், அவையிரண்டும் (கண்) பார்வையை அவித்து விடும்; கருவைக் கலைத்து விடும்” என்று சொல்ல கேட்டேன். அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்: நான் (ஒரு முறை) ஒரு பாம்பைக் …

Read More »