Featured Posts

Tag Archives: உரிமைகள்

கால்நடை உரிமையாளர் அனுமதியின்றி பால்கறக்காதே.

1125. ஒருவரின் கால்நடையிடம் அவரின் அனுமதியின்றி எவரும் பால் கறக்க வேண்டாம். உங்களில் எவரும் அவரின் சரக்கு அறைக்கு ஒருவர் வந்து, அவரின் உணவுக் கருவூலத்தை உடைத்து, அவரின் உணவை எடுத்துச் சென்று விடுவதை விரும்புவாரா? இவ்வாறே, அவர்களின் (கால்நடை உரிமையாளர்களின்) கால் நடைகளுடைய மடிகள் அவர்களின் உணவையே சேகரித்துப் பாதுகாத்து வைத்திருக்கின்றன. எனவே, எவரும் ஒருவரின் கால்நடையிடம் அவரின் அனுமதியின்றிப் பால் கறக்க வேண்டாம் என நபி (ஸல்)அவர்கள் …

Read More »

காணாமல் போன பொருட்கள்.

1123. ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து பாதையில் கண்டெடுக்கப்பட்ட (பிறர் தவறவிட்ட) பொருளைப் பற்றி கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அதனுடைய பையையும் (அதன் சுருக்குக்) கயிற்றையும் அறிந்து (பாதுகாத்து) வைத்துக் கொள். பிறகு ஓராண்டுக் காலம் அதைப் பற்றி விளம்பரப்படுத்து. அதன் உரிமையாளர் வந்து (அதை அடையாளம் சொல்லக் கேட்டு)விட்டால் (அவரிடம் கொடுத்து விடு.) இல்லையென்றால் நீ விரும்பியவாறு அதைப் பயன்படுத்திக் கொள்” என்று கூறினார்கள். அதற்கு அவர், …

Read More »

அளவுக்கதிகமான கேள்விகளைத் தவிர்.

1117. (பெற்றெடுத்த) தாய்மார்களுக்குத் துன்பம் தருவதையும், பெண் குழந்தைகளை உயிருடன் புதைப்பதையும் (நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ள பிற மனிதர்களின் உரிமைகளை) நிறைவேற்றாமலிருப்பதையும் பிறரின் செல்வத்தை (அநியாயமாக) அபகரித்துக் கொள்வதையும் தேவையற்ற வீண் பேச்சகள் பேசுவதையும் அதிகமாக கேள்விகள் கேட்பதையும், செல்வத்தை வீணாக்குவதையும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு ஹராமாக (விலக்கப்பட்டதாக) ஆக்கியுள்ளான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 2408 முகீரா இப்னு ஷுஅபா (ரலி).

Read More »

மறுமை நாளையின் பரிந்துரைகள் (ஷபாஅத்துகள்)

இறுதி நாளில் பரிந்துரை செய்வது பற்றி ஸஹீஹான சில ஹதீஸ்கள் காணப்படுகின்றன. அன்று மக்கள் அனைவரும் ஆதம் நபி அவர்களிடமும், (உலுல் அஸ்ம்) திடகாத்திர, உறுதிபாடுள்ள நபிமார்களான நூஹ், இப்றாஹீம், மூஸா, ஈஸா (அலை) ஆகியோரிடமும் வந்து தமக்காக ஷபாஅத் செய்ய வேண்டுமென்று கெஞ்சுவார்கள். அந்த நபிமார்களில் ஒவ்வொருவரும் மற்றவரிடம் மக்களைத் திருப்பி அனுப்பி வைப்பார்கள். இறுதியில் நபி ஈஸா (அலை) அவர்களிடம் மக்கள் திரண்டெழுவார்கள். அப்போது ஈஸா (அலை) …

Read More »

வஸீலா ஷபாஅத் என்னும் வார்த்தைகளில் ஏற்பட்ட சந்தேகங்கள்

வார்த்தைகளைப் பற்பல கருத்துக்களுக்குப் பிரயோகிப்பதை அறியாதவர்களும், புரட்டியும், திருப்பியும் சொற்களைக் கூறக் கூடியவர்களுமான சிலரிடத்தில் வஸீலா, தவஸ்ஸுல், ஷபாஅத் போன்ற சில வார்த்தைகள் கிடைத்தபோது அவற்றிற்கு அல்லாஹ்வும், ரஸூலும், ஸஹாபாக்களும், தாபியீன்களும், இமாம்கள் ஆகியோரெல்லாம் விலக்கியிருந்ததற்கு மாற்றமான கருத்துக்களைக் கொடுத்து மக்களை தவறின்பால் திருப்பி விட்டார்கள். இதனால் பலர் தவறினார்கள். இவ்வார்த்தையின் உட்கருத்தைப் புரிந்து கொண்டவர்கள் மிகச் சிலரே. பொதுவாக கல்வி என்பது நன்றாக ஆராய்ந்து கற்று அறிந்து கொள்வதாகும். …

Read More »