பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7268 தாரிக் இப்னு ஷிஹாப்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். யூதர்களில் ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம், ‘இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! ‘இன்று உங்களின் மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன். என்னுடைய அருட்கொடையையும் உங்களின் மீது நான் நிறைவு செய்து விட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக அங்கீகரித்து விட்டேன்’ எனும் இந்த (திருக்குர்ஆன் 05:3 வது) இறைவசனம் எங்களுக்கு அருளப்பட்டிருந்தால் நாங்கள் (வசனம் அருளப்பட்ட) …
Read More »Tag Archives: சொர்க்கம்
91. கனவுக்கு விளக்கமளித்தல்
பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6982 ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த இறை அறிவிப்பானது தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று (தெளிவானதாகவே) இருந்தது. பிறகு அவர்கள் ஹிரா (மலைக்) குகைக்குச் சென்று அங்கே பல நாள்கள் (தனிமையில் தங்கியிருந்து) வணக்க வழிபாடுகளில் ஈடுபடலானார்கள். அந்த நாள்களுக்கான உணவைத் தம்முடன் எடுத்துச் …
Read More »83. சத்தியங்களும் நேர்த்திக்கடன்களும்
பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6521 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (உமியோ தவிடோ கலக்காத) சுத்தமான மாவினாலான ரொட்டியைப் போன்று தூய வெண்மையான (சம) தளத்தின் மீது மறுமை நாளில் மனிதர்கள் ஒன்று திரட்டப்படுவார்கள். இதன் அறிவிப்பாளரான ஸஹ்ல்(ரலி) அவர்கள், அல்லது மற்றொருவர் ‘அந்த பூமியில் (மலை, மடுவு, காடு, வீடு என) எந்த அடையாளமும் யாருக்கும் இருக்காது’ என்று (கூடுதலாக) அறிவித்தார்கள். பாகம் 7, அத்தியாயம் 83, …
Read More »80. பிரார்த்தனைகள்
பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6304 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒவ்வோர் இறைத்தூதருக்கும் அவர் (தம் சமுதாயத்தாருக்காகப்) பிரார்த்தித்துக்கொள்ள அங்கீகரிக்கப்பட்ட பிரார்த்தனை ஒன்று (வழங்கப்பட்டு) உள்ளது. நான் என்னுடைய பிரார்த்தனையை, மறுமையில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகப் பத்திரப்படுத்தவே விரும்புகிறேன் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6305 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘ஒவ்வோர் இறைத்தூதரும் ஒரு (பிரத்தியேக) வேண்டுதல் செய்து விட்டனர்’ …
Read More »65 (2). திருக்குர்ஆன் விளக்கவுரை
பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4701 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் ஒரு விஷயத்தை வானத்தில் தீர்மானித்துவிட்டால், வானவர்கள் தம் சிறகுகளை இறைக்கட்டளைக்குப் பணிந்தவர்களாக அடித்துக் கொள்வார்கள். (அல்லாஹ்வின் அந்தக் கட்டளையை) பாறையின் மீது சங்கிலியை அடிப்பதால் எழும் ஓசையைப் போல் (வானவர்கள் கேட்பார்கள்.) என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அலீ இப்னு அப்தில்லாஹ் அல்மதீனி(ரஹ்) கூறினார்: (சுஃப்யான்(ரஹ்) அல்லாத) மற்றவர்களின் அறிவிப்பில், ‘(அந்த …
Read More »[பாகம்-2] முஸ்லிமின் வழிமுறை.
நபித்தோழர்களை நேசிப்பது. நபித்தோழர்களையும், நபியின் குடும்பத்தார்களையும் நேசிப்பது கடமை என்றும், அவர்கள் மற்ற முஃமின்கள், முஸ்லிம்களை விட சிறந்தவர்கள் என்றும் ஒரு முஸ்லிம் நம்ப வேண்டும். சிறப்பில் அவர்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வு உண்டு. இஸ்லாத்தை முதன் முதலில் ஏற்றுக் கொண்டதைப் பொருத்துத்தான் அவர்களுடைய உயர் அந்தஸ்து இருக்கும். அவர்களில் சிறந்தவர்கள் நேர்வழி பெற்ற கலீஃபாக்கள். அடுத்து சொர்க்கம் குறித்து நற்செய்தி கூறப்பட்ட பத்து பேர்கள். அவர்கள் நேர்வழி பெற்ற நான்கு கலீஃபாக்கள், …
Read More »அக்கிரமக்காரர்கள் பெருமையடிப்போர் நரகில்.
1809. சொர்க்கமும் நரகமும் வாக்குவாதம் செய்து கொண்டன. அப்போது நரகம், பெருமையடிப்பவர்களுக்காகவும் அக்கிரமக்காரர்களுக்காகவும் நான் சொந்தமாக்கப்பட்டுள்ளேன்” என்று சொன்னது. சொர்க்கம், ‘எனக்கு என்ன நேர்ந்ததோ! மக்களில் பலவீனர்களும் அவர்களில் கீழ்நிலையினருமே (அதிகமாக) என்னுள் நுழைவார்கள்” என்று கூறியது. அல்லாஹ் சொர்க்கத்திடம், ‘நீ என்னுடைய அருள். உன் மூலமே என் அடியார்களில் நான் நாடிய சிலருக்கு அருள் புரிகிறேன்” என்று கூறினான். நரகத்திடம் ‘நீ வேதனை(க்காகத்)தான். உன்மூலமே என் அடியார்களில் நான் …
Read More »அல்லாஹ் மீது தவக்குல் வைத்தோர் சிறப்பு.
1807. அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்களை (களி மண்ணிலிருந்து) படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு, ‘நீங்கள் சென்று அந்த வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதுதான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்” என்று சொன்னான். அவ்வாறே ஆதம் (அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), ‘அஸ்ஸலாமு அலைக்கும் – உங்களின் …
Read More »சுவன வாசிகளின் மனைவிமார்களின் கூடாரங்கள்.
1806. (சொர்க்கத்திலுள்ள) கூடாரம் என்பது நடுவில் துளையுள்ள ஒரு முத்தாகும். அது வானத்தில் முப்பது மைல் தொலைவுக்கு உயர்ந்திருக்கும். அதன் ஒவ்வொரு மூலையிலும் இறை நம்பிக்கையாளனுக்குத் துணைவியர் இருப்பர். அவர்களை மற்றவர்கள் பார்க்க முடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 3243 (அபூ மூஸா) அப்துல்லாஹ் இப்னு கைஸ் அல் அஷ்அரீ (ரலி).
Read More »சுவனத்தில் புகும் முதல் அணியினர் பற்றி….
1805. ‘சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினர் பௌர்ணமி இரவில் (ஒளிவீசும்) சந்திரனைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) தோற்றமளிப்பார்கள். பிறகு, அவர்களுக்கு அடுத்து வருபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்கள் மலஜலம் கழிக்கவும் மாட்டார்கள்; எச்சில் துப்பவும் மாட்டார்கள்; மூக்கு சிந்தவும் மாட்டார்கள். அவர்களின் சீப்புகள் தங்கத்தாலானவை. அவர்களின் மனைவிமார்கள் அகன்ற விழிகளையுடைய கன்னியராவர். (சொர்க்க வாசிகளான) அவர்கள் ஒரே மனிதனின் அமைப்பில் படைக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் தங்களின் …
Read More »