Featured Posts

Tag Archives: அல்லுஃலுவு வல்மர்ஜான்

கண் திருஷ்டிக்கு ஒட்டகக் கழுத்தில் எதையும் கட்டாதே.

1371. நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பயணம் ஒன்றில் அவர்களுடன் இருந்தேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தூதுவர் ஒருவரை அனுப்பி, ‘எந்த ஒட்டகத்தின் கழுத்திலும் (ஒட்டக வாரினால் ஆன, கண் திருஷ்டி கழிவதற்காகக் கட்டப்படுகிற) கயிற்று மாலையோ அல்லது (காற்று, கருப்பு விரட்டுவதற்காகக் கட்டப்படுகிற) வேறெந்த மாலையோ இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் கட்டாயம் அதைத் துண்டித்து விட வேண்டும்” என்று (பொது மக்களிடையே) அறிவிக்கச் செய்தார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் …

Read More »

நாய் உள்ள வீட்டில் அருள் மலக்குகள் நுழைய மாட்டார்கள்.

1363. நாயும் (உயிரினங்களின் சிலைகள் அல்லது) உருவப் படங்களும் உள்ள வீட்டினுள் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 3225 அபூ தல்ஹா (ரலி). 1364. ”(உயிரினங்களின்) உருவப் படமுள்ள வீட்டில் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என என்னிடம் அபூ தல்ஹா (ரலி) தெரிவித்தார்கள். …

Read More »

யூத கிறிஸ்தவர்களுக்கு மாறுசெய்தல்.

1362. யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலைமுடிக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. எனவே, நீங்கள் (அவற்றிற்குக் கருப்பு அல்லாத சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 3462 அபூஹுரைரா (ரலி).

Read More »

ஆண்கள் குங்குமப் பூ சாயமிடத் தடை.

1361. ஆண்கள் (தங்களின் மேனியில்) குங்குமப் பூச் சாயமிட்டுக் கொள்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். புஹாரி : 5846 அனஸ் (ரலி).

Read More »

காலின் மேல் காலைப்போட்டு மல்லாக்கப் படுத்தல்.

1360. நபி (ஸல்) அவர்கள் ஒரு காலின் மேல் இன்னொரு காலைப் போட்டுக் கொண்டு பள்ளிவாசலில் மல்லாந்து படுத்திருந்ததை கண்டேன். புஹாரி :475 அப்பாஸ் பின் தமீம் (ரலி).

Read More »

காலணி அணியும்போது முதலில் வலதுகாலை முற்படுத்துதல்.

1358. நீங்கள் காலணி அணியும்போது முதலில் வலது காலில் அணியுங்கள்; அதைக் கழற்றும்போது முதலில் இடது காலில் இருந்து கழற்றுங்கள். வலது காலே அணிவதில் முதலாவதாகவும், கழற்றுவதில் இறுதியாகவும் இருக்கட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 5855 அபூஹுரைரா (ரலி). 1359. நீங்கள் ஒரேயொரு காலணியில் நடக்க வேண்டாம். ஒன்று, இரண்டு காலணிகளையும் ஒரு சேரக் கழற்றிவிடுங்கள்; அல்லது இரண்டையும் ஒரு சேர அணிந்து கொள்ளுங்கள் …

Read More »

மோதிரத்தில் இலச்சினை.

1356. நபி (ஸல்) அவர்கள் ஒரு மடல் எழுதிடும்படிக் கூறினார்கள். அல்லது எழுதிட நாடினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் ‘அவர்கள் எந்த மடலையும் முத்திரையிடப்படாமல் படிக்க மாட்டார்கள்’ என்றும் சொல்லப்பட்டது. உடனே வெள்ளியில் ஒரு மோதிரம் செய்தார்கள். அதில் பொறிக்கப்பட்டிருந்த வாக்கியம் ‘முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்” என்பதாகும். நபி (ஸல்) அவர்களின் கையில் அம்மோதிரம் இருக்கும் நிலையில் அதன் (பளிச்சிடும்) வெண்மையை (இப்போதும் நேரில்) நான் பார்த்துக் கொண்டிருப்பது போலிருக்கிறது” …

Read More »

வெள்ளி மோதிரம் அணிய அனுமதி.

1354. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து) கொண்டார்கள். அது (அவர்களின் வாழ்நாளில்) அவர்களின் கையில் இருந்தது. பிறகு, அபூ பக்ர் (ரலி) அவர்களின் கையில் இருந்தது. பிறகு, உமர் (ரலி) அவர்களின் கையில் இருந்தது. பிறகு, உஸ்மான் (ரலி) அவர்களின் கையில் இருந்தது. இறுதியில் அது ‘அரீஸ்’ எனும் கிணற்றில் (தவறி) விழுந்துவிட்டது. அதில் பொறிக்கப்பட்டிருந்த இலச்சினை ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ (இறைத்தூதர் முஹம்மது) என்றிருந்தது. …

Read More »

தங்க மோதிரம் அணியத் தடை.

1352. நபி (ஸல்) அவர்கள் தங்க மோதிரத்தை அணியவேண்டாமென்று (ஆண்களுக்குத்) தடைவிதித்தார்கள். புஹாரி : 5864 அபூஹூரைரா (ரலி). 1353. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்க மோதிரம் ஒன்றைத் தயாரித்து அணிந்து கொண்டிருந்தார்கள். அதன் குமிழைத் தம் உள்ளங்கை பக்கமாக அமையும்படி வைத்தார்கள். (இதைக் கண்ட) மக்களும் (அதைப் போன்ற) மோதிரங்களைத் தயார் செய்தனர். பிறகு நபி (ஸல்) அவர்கள், சொற்பொழிவு மேடையில் (மிம்பரில்) அமர்ந்து அந்த மோதிரத்தைக் கழறறிவிட்டு, …

Read More »

தற்பெருமையுடன் நடக்காதே.

1351. (முற்காலத்தில்) ஒரு மனிதன் (தனக்குப் பிடித்த) ஓர் ஆடையை அணிந்துகொண்டு நன்கு தலைவாரிக் கொண்டு தற்பெருமையுடன் நடந்து சென்று கொண்டிருந்தான். திடீரென அவனை அல்லாஹ் பூமிக்குள் புதையச் செய்துவிட்டான். அவன் மறுமை நாள் வரை (அவ்வாறே பூமிக்குள்) குலுங்கிய படி அழுந்திச் சென்று கொண்டேயிருப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 5789 அபூஹுரைரா (ரலி).

Read More »