அல்லாஹ் மனிதர்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்ற இயற்கை சுபாவம் என்னவெனில் ஒரு ஆண், எந்த ஆண்மையின் மீது அல்லாஹ் அவனைப் படைத்தானோ அந்த ஆண்மையையும் ஒரு பெண், எந்தப் பெண்மையின் மீது அல்லாஹ் அவளைப் படைத்தானோ அந்தப் பெண்மையையும் பேணி பாதுகாப்பதாகும். இது, மனிதர்களின் வாழ்க்கை எந்தக் காரண காரியங்களைக் கொண்டல்லாமல் சீர் பெற முடியாதோ அந்தக் காரணக் காரியங்களில் ஒன்றாகும். எனவே ஆண்கள் பெண்களுக்கும் பெண்கள் ஆண்களுக்கும் ஒப்பாக பாவித்து நடப்பது …
Read More »Tag Archives: தடை
ஒட்டு முடி வைத்தல்
அபூபக்ருடைய மகள் அஸ்மா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: ‘ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய மகள் புதிதாக மணமுடிக்கப் பட்டிருக்கிறாள். அவளது தலையில் புண் ஏற்பட்டு முடி கொட்டுகிறது. நான் அவளுக்கு ஒட்டு முடி வைக்கலாமா? எனக் கேட்டாள். அதற்கவர்கள், ஒட்டு முடி வைப்பவளையும், வைத்து விடுபவளையும் அல்லாஹ் சபிப்பானாக! எனக் கூறினார்கள்’ (முஸ்லிம்) நபி (ஸல்) அவர்கள் ஒரு பெண் தனது தலை …
Read More »ஆண்கள் தங்கம் அணிதல்
‘பட்டும் தங்கமும் என் சமுதாயத்தில் பெண்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளன. ஆண்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளன’ நபிமொழி. அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி), நூல்: அஹ்மத். இன்று கடைவீதிகளில் ஆண்களுக்கென்று தங்கத்தால் – பல்வேறு காரட்களில் – தயாரிக்கப்பட்ட அல்லது முழுமையாக தங்க முலாம் பூசப்பட்ட கைக்கடிகாரங்கள், முக்குக் கண்ணாடிகள், பட்டன்கள், பேனாக்கள், செயின்கள், சாவிக்கொத்துகள் இன்னும் பல உள்ளன. சில போட்டிகளில் ஆண்கள் அணியும் தங்கக் கைக்கடிகாரம் பரிசாக அறிவிக்கப்படுகின்றன. இதுவும் தடை செய்யப்பட்டதாகும். …
Read More »பூனைகளைக் கொல்லத் தடை.
1446. ஒரு பூனையை, அது சாகும் வரை (பட்டினி போட்டு) கட்டி வைத்த காரணத்தால் பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள். அதை அடைத்து வைத்தபோது அவள் அதற்குத் தீனியும் போடவில்லை அதற்கு (குடிக்கத்) தண்ணீரும் கொடுக்கவில்லை; அவள் அதை பூமியின் புழு பூச்சிகளைத் தின்ன (அவிழ்த்து) விடவுமில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 3482 இப்னு உமர்(ரலி) .
Read More »எறும்புகளைக் கொல்லத் தடை.
1445. இறைத்தூதர்களில் ஒருவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே, அந்த எறும்புப் புற்றையே எரித்து விடும்படி அவர் கட்டளையிட்டார். அவ்வாறே அது எரிக்கப்பட்டுவிட்டது. (இதைக் கண்ட) அல்லாஹ், ‘ஓர் எறும்பு உங்களைக் கடித்துவிட்ட காரணத்தால் அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருந்த சமுதாயங்களில் ஒன்றையே நீங்கள் எரித்து விட்டீர்களே” என்று (அவரைக் கண்டிக்கும் விதத்தில்) அவருக்கு அறிவித்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :3019 அபூ ஹுரைரா (ரலி) …
Read More »மூவரில் இருவர் ரகசியம் பேசுதல் கூடாது.
1409. நீங்கள் மூவர் இருக்கும்போது மூன்றாமவரை விட்டுவிட்டு இருவர் மட்டும் இரகசியம் பேசவேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :6288 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) . 1410. நீங்கள் மூன்று பேர் இருக்கும்போது மூன்றாமவரை விட்டுவிட்டு இரண்டு பேர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம்; நீங்கள் மூவரும் மக்களுடன் கலக்கும்வரை! ஏனெனில், (அவ்வாறு மூன்று பேர் இருக்கும்போது இருவர் மட்டும் பேசுவது) மூன்றாமவரை வருத்தமடையச் செய்யும் என …
Read More »ஆண் பெண் அல்லாத அலிகள் பற்றி….
1407. என்னிடம் (ஆணுமல்லாத பெண்ணுமல்லாத) ‘அலி’ ஒருவர் அமர்ந்திருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அந்த ‘அலி’, (என் சகோதரர்) அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவிடம், ‘அப்துல்லாஹ்வே! நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தால் நீ ஃகய்லானின் மகளை மணந்துகொள். ஏனென்றால், அவள் முன்பக்கம் நாலு (சதை மடிப்புகளு)டனும், பின்பக்கம் எட்டு (சதை மடிப்புகளு)டனும் வருவாள்” என்று சொல்வதை செவியுற்றேன். (இதைக் கேட்ட) நபி (ஸல்) …
Read More »பிறர் வீட்டில் துவாரம் வழியாகப் பார்க்காதே.
1393. ஒருவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் (அறையின்) கதவிடுக்கில் எட்டிப் பார்த்தார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் (இரும்பாலான) ஈர்வலிச் சீப்பொன்று இருந்தது. அதனால் தம் தலையை அவர்கள் கோதிக் கொண்டிருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்தபோது ‘என்னை நீ பார்க்கிறாய் என்று நான் (முன்பே) அறிந்திருந்தால், இந்தச் சீப்பினால் உன் கண்ணைக் குத்தியிருப்பேன். (அடுத்தவர் வீட்டுப் பெண்களைப்) பார்க்க நேரிடும் என்பதற்காகவே அனுமதி கேட்பது சட்டமாக்கப்பட்டது” என்று …
Read More »சாலையில் தடை ஏற்படுத்தாதே.
1374. ”நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கிற எங்கள் சபைகள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும்போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்கள். மக்கள், ‘பாதையின் உரிமை என்ன?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், …
Read More »அரைகுறை தலை மழித்தலுக்குத் தடை.
1373. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டு விடுவதைத் தடை செய்தார்கள். புஹாரி : 5921 இப்னு உமர் (ரலி).
Read More »