இமாம் திர்மிதி (ரஹ்) அவர்கள் தமது ஜாமிஉ என்ற ஹதீஸ் தொகுப்பில் ஹதீஸ்களை மூன்றாகத் தரம் பிரித்தார்கள். அவை: ஸஹீஹ், ஹஸன், ளயீஃப் என்பன. இமாம் திர்மிதி அவர்கள்தாம் முதன் முதலாக ஹதீஸ்களை இப்படி பிரித்துக் காட்டியவர்கள். ஒரே ஹதீஸ் பல வழிகளில் அறிவிக்கப்படும் போதும், அறிவிப்பாளர்கள் பட்டியலில் குற்றம் சுமத்தப்பட்டவர்களும், ஒற்றையாக நிற்பவர்களும் இல்லாமல் இருக்கும்போதும் தான் அந்த ஹதீஸுக்கு ‘ஹஸன்’ என்று பெயரிட்டார்கள். இமாம் திர்மிதி ஹஸன் …
Read More »Tag Archives: சத்தியம்
கப்றும் திருவிழாக்களும்
அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் நபியவர்கள் கூறியதாக அறிவிக்கும் ஒரு ஹதீஸில் ‘அல்லாஹ்வுக்குப் பூமியில் வந்து போகின்ற மலக்குகள் இருக்கிறார்கள். அவர்கள் வழியாக என்னுடைய உம்மத்திலுள்ளவர்கள் என்மீது கூறுகின்ற ஸலாம் எனக்கு சேர்த்து வைக்கப்படுகிறது’ என்று அறிவிக்கிறார்கள். (நஸாயீ, அபூஹாதிம்) தூரத்திலிருக்கும் ஒரு முஸ்லிம் நபியின் மீது சொல்லும் ஸலாம் மலக்குகள் வழியாக நபியின்பால் சேர்த்து வைக்கப் படுகின்றது என்று இந்த ஹதீஸுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.
Read More »குறிப்பு (1)
ஒருவன் அடுத்தவனை நோக்கி நபியவர்களின் பொருட்டால் கேட்கிறேன் (அவர்களைக் கொண்டு) அல்லது அவர்களை முன்னிறுத்திக் கேட்கிறேன் என்று கூறினால் இக்கூற்றிலுள்ள ‘நபியைக் கொண்டு கேட்கிறேன்’ என்பதின் கருத்தில் நபியை ஈமான் கொண்டு விசுவாசித்து அவ்விசுவாசத்தைப் பொருட்டாக வைத்துக் கேட்பதை கருதப்பட்டால் இக்கூற்று தவறாகாது என்று சில அறிஞர்கள் விளக்கம் தந்திருக்கிறார்கள். எனவே இத்தகைய பிரார்த்தனைகள் அனுமதிக்கப்படும்.
Read More »