Featured Posts

Tag Archives: அல்லுஃலுவு வல்மர்ஜான்

ஜகாத் அளவு

567.”ஐந்து ஊக்கியாவுக்குக் குறைந்த அளவு (வெள்ளியில்) ஸகாத் இல்லை. ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவாக இருந்தால் அவற்றில் ஸகாத் இல்லை. ஐந்து வஸக்குக்குக் குறைவான (ஒரு வஸக் என்பது 60ஸாவு) தானியத்தில் ஸகாத் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :1405 அபூ ஸயீத் (ரலி)

Read More »

ஜனாஸா தொழுகையில் இமாம் எங்கு நிற்பது?

566.பிரசவத் தொடக்குடனேயே இறந்துவிட்ட பெண்ணிற்கு நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுதபோது மைய்யித்தின் நடுப்பகுதிக்கு நேராக நின்றார்கள். அப்போது நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுதேன். புஹாரி : 1331 ஸமுரா பின் ஜூன்துப் (ரலி)

Read More »

ஜனாஸாவைக் கண்டால் எழுதல்.

561.”ஜனாஸாவைக் கண்டால் அது உங்களைக் கடந்து செல்லும் வரை எழுந்து நில்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி:1307 அமீர் பின் ரபிஆ (ரலி) 562.”உங்களிலொருவர் ஜனாஸாவைக் கண்டும் அதனுடன் நடந்து செல்லப் போவதில்லை என்றால் அவர் அதைக் கடந்து செல்லும்வரை அல்லது அது அவரைக் கடந்து செல்லும் வரை அல்லது அது அவருக்கு முன்னால் (பூமியில்) வைக்கப்படும் வரை எழுந்து நிற்கட்டும்.” புஹாரி: 1308 ஆமிர் இப்னு …

Read More »

கப்ரில் ஜனாஸா தொழுகை நடத்துதல்.

559.’நபி (ஸல்) அவர்கள் தனியாக இருந்த ஒரு கப்ருக்கருகே சென்று (ஜனாஸாவுக்காகத்) தொழுகை நடத்தினார்கள். மக்களும் அணி வகுத்து நின்றனர். புஹாரி : 857 இப்னு அப்பாஸ் (ரலி) 560.பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்த கரு நிறமுடைய ஓர் ஆணோ பெண்ணோ இறந்துவிட்டார். அவர் இறந்துவிட்ட செய்தி நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியாமலிருந்தது. ஒரு நாள் திடீரென்று அவர் பற்றி நினைவு வந்ததும் நபி (ஸல்) அவர்கள், ‘அவர் என்ன ஆனார்?’ …

Read More »

ஜனாஸா தொழுகையில் தக்பீர் கூறுதல்

555.நபி (ஸல்) அவர்கள் நஜ்ஜாஸி (மன்னர்) இறந்த அன்று அவரின் மரணச் செய்தியை மக்களுக்கு அறிவித்தார்கள். பிறகு தொழுமிடத்திற்கு வந்து மக்களை வரிசைப்படுத்தி நிற்க வைத்து, நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள். புஹாரி : 1245 அபூஹூரைரா (ரலி) 556. (அபிசீனிய மன்னர்) நஜ்ஜாஸி இறந்த அன்று அவரின் மரணச் செய்தியை அறிவித்த நபி (ஸல்) அவர்கள், ‘உங்கள் சகோதரருக்காக நீங்கள் பாவமன்னிப்பு தேடுங்கள்” என்று கூறினார்கள். …

Read More »

மரணித்தவர் ஓய்வு பெறுதல்.

554.இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு ஜனாஸா (பிரேதம்) கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவர்கள் ‘(இவர்) ஓய்வு பெற்றவராவார்; அல்லது (பிறருக்கு) ஓய்வு அளித்தவராவார்” என்றார்கள். மக்கள் ‘இறைத்தூதர் அவர்களே! ஓய்வு பெற்றவர்; அல்லது ஓய்வு அளித்தவர் என்றால் என்ன?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘இறை நம்பிக்கை கொண்ட அடியார் (இறக்கும் போது) இவ்வுலகத்தின் துன்பத்திலிருந்தும் தொல்லையிலிருந்தும் ஓய்வுபெற்று இறையருளை நோக்கிச் செல்கிறார். பாவியான அடியான் (இறக்கும்போது) …

Read More »

மரணித்தவர் பற்றி….

மரணித்தவர் பற்றி புகழ்ந்தும் இகழ்ந்தும் கூறப்படுதல். 553.ஒரு முறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்றபோது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘உறுதியாகிவிட்டது” என்றார்கள். மற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்) கடந்து சென்றபோது மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், ‘உறுதியாகிவிட்டது?’ எனக் கூறினார்கள். உமர் (ரலி) ‘எது உறுதியாகிவிட்டது?’ எனக் கேட்டதும் நபி …

Read More »

ஜனாஸா தொழுகை.

ஜனாஸா தொழுகை அதில் கலந்து கொள்பவரின் சிறப்பு. 551.”ஜனாஸாத் தொழுகையில் பங்கேற்கிறவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு: அடக்கம் செய்யப்படும் வரை கலந்து கொள்கிறவருக்கு இரண்டு கீராத்கள் நன்மை உண்டு’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘இரண்டு கீராத்கள் என்றால் என்ன?’ என வினவப்பட்டது. அதற்கவர்கள், ‘இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)” என்றார்கள். புஹாரி:1325 அபூஹூரைரா (ரலி) 552. ஜனாஸாவைப் பின்தொடர்கிறவருக்கு ஒரு கிராத் நன்மையுண்டு …

Read More »

ஜனாஸாவை எடுத்துச் செல்வதில் துரிதம்.

550.”ஜனாஸாவைச் (சுமந்து செல்லும் போது) விரைந்து செல்லுங்கள். அது (மய்யித்) நல்லறங்கள் புரிந்ததாயிருந்தால் அந்த நன்மையின் பால் விரைந்து செல்கிறீர்கள்; அவ்வாறில்லாவிட்டால் ஒரு தீங்கை (விரைவில்) உங்களின் தோள்களிலிருந்து இறக்கி வைக்கிறீர்கள்.”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி: 1315 அபூஹுரைரா (ரலி)

Read More »

ஜனாஸாவை துணியால் போர்த்துதல்.

549.”இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது அவர்களின் உடல் (பருத்தியாலான) யமன் நாட்டுப் போர்வையால் போர்த்தி மூடப்பட்டது” என்று நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். புஹாரி : 5814 ஆயிஷா (ரலி)

Read More »