Featured Posts

Tag Archives: பள்ளிகள்

பிரார்த்தனையின் படித்தரங்கள் (1)

இஸ்லாமிய அறிஞர்களும், இமாம்களும் ஷரீஅத்தில் ஆகுமானதும், ஆகாதவையுமான பிரார்த்தனைகளை வரையறுத்துக் கூறியிருக்கிறார்கள். கூடாத, பித்அத்தான பிரார்த்தனைகளை மூன்றாகப் பிரித்திருக்கிறார்கள். ஒன்று: அல்லாஹ் அல்லாத இதர சிருஷ்டிகளை அழைத்துப் பிரார்த்தித்தல். மய்யித்திடம் கேட்டுப் பிரார்த்தித்தல். கண் பார்வைக்கு அப்பாற்பட்டோர், இறந்து போன நபிமார்கள், ஸாலிஹீன்கள் ஆகியோரையெல்லாம் கூப்பிட்டு ‘யாஸய்யிதீ! எனக்கு உதவி செய்தருள்வீர்! உங்களைக் கொண்டு காவல் தேடுகிறேன். உதவி கோருகிறேன். என் பகைவனுக்கெதிராக உதவி புரிவீராக!’ என்றெல்லாம் பிரார்த்தித்தலாகும். அன்றி …

Read More »

கப்றுகளில் பள்ளி கட்டலாமா?

கப்றுகளைப் பள்ளிகளாக்குவதை தடுத்து பல ஹதீஸ்கள் வந்திருக்கின்றன.அப்படிச் செய்பவனை நபி (ஸல்) அவர்கள் சபித்திருக்கிறார்கள்.தமது கப்றில் வைபவங்கள் கொண்டாடுவதையும் விலக்கினார்கள். முதலில் மக்களிடையே இணை வைத்தல் என்பது நூஹ் நபி அவர்களின் காலத்திலே தான் துவங்கிற்று. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ‘நபி நூஹ் (அலை) அவர்களுக்கும், நபி ஆதம் (அலை) அவர்களுக்கும் இடையிலான பத்துத் தலைமுறையிலுள்ள மக்கள் இஸ்லாமியர்களாகவே வாழ்ந்திருந்தார்கள்’ என்று கூறினார்கள்.

Read More »

இது விஷயத்தில் அப்துல் மலிக் பின் ஹாரூன் ரிவாயத்

ஆனால் அப்துல் மலிக் பின் ஹாரூன் என்பவர் இப்னு அப்பாஸைப் பற்றி ஒரு ஹதீஸை ரிவாயத் செய்கிறார். அதில் இப்னு அப்பாஸ் ‘கைபரில் உள்ள யூதர்கள் கத்பான் கோத்திரத்தாருடன் போராடி யுத்தம் செய்து கொண்டிருந்தனர். ஆனால் இந்த யூதர்கள் கத்பான்களுடன் மோதும் போதெல்லாம் தோல்வி அடைந்து விடுவது வழக்கம். எனவே கீழ்வரும் துஆவைக் கொண்டு யூதர்கள் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடினார்களாம். ‘இறைவா! எழுதப்படிக்கத் தெரியாத நபியான முஹம்மத் (ஸல்) அவர்களின் …

Read More »