Featured Posts

Tag Archives: புதையல்

பாடம்-2 பிஃக்ஹ்: தங்கம், வெள்ளி, புதையல் போன்றவற்றுக்கான ஜகாத் கணக்கிடும் முறை (தொடர்-3)

சவூதி அரேபியா கிழக்கு மாகாணம் அல்கோபர் சிறப்பு தர்பியா (III)வகுப்பு (8-வார கால பாடத்திட்டம்) நாள்: 26-05-2017 (ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து 4:30 வரை) இடம்: அல்-பஷாயிர் பாடசாலை வளாகம் – அல்கோபர் பாடம்-2 பிஃக்ஹ்: தங்கம், வெள்ளி, புதையல் போன்றவற்றுக்கான ஜகாத் (தொடர்-3) நூல்: அத்தல்கீஸாத் லிஜுல்லி அஹ்காமில் ஸகாத் (ஸகாத் தொடர்பான முக்கிய சட்டங்கள்) நூல் ஆசிரியர்: அப்துல் அஜிஸ் பின் முஹம்மத் ஸல்மான் வகுப்பு ஆசிரியர்: …

Read More »

யூப்ரட்டிஸ் நதி புதையலை வெளிப்படுத்துதல்.

1838. (மேற்காசியாவில் பாயும்) யூப்ரட்டீஸ் நதியானது தங்கப்புதையல் ஒன்றை வெளிப்படுத்த உள்ளது. அப்போது அங்கிருப்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுத்து விட வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான உக்பா இப்னு காலித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ள இந்த ஹதீஸ் மற்றொரு வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் ‘தங்க மலை ஒன்றை வெளிப்படுத்தவுள்ளது” என்று இடம் பெற்றுள்ளது. …

Read More »

நீதியால் இருவரை ஒருங்கிணைத்தல்.

1122. (பனூ இஸ்ராயீலில்) ஒருவர் இன்னொரு மனிதரிடமிருந்து அவருக்கிருந்த அசையாச் சொத்து (நிலம்) ஒன்றை வாங்கினார். அந்த நிலத்தை வாங்கிய மனிதர் தன்னுடைய நிலத்தில் தங்கம் நிரம்பிய (களிமண்) ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் (நிலத்தை) விற்றவரிடம், ‘என்னிடமிருந்து உன் தங்கத்தை எடுத்துக் கொள். (ஏனெனில்), உன்னிடமிருந்து நான் நிலத்தைத் தான் வாங்கினேன்; இந்தத் தங்கத்தை வாங்கவில்லை” என்று கூறினார். நிலத்தின் (முந்தைய) உரிமையாளர், ‘நிலததை அதிலிருப்பவற்றுடன் சேர்த்துத் …

Read More »

விலங்குகளால்,விபத்தில் மரணித்தவருக்கு இழப்பீட்டு தொகையில்லை.

1112. ”விலங்குகளாலோ (கால்நடைகளாலோ) கிணற்றின் மூலமாகவோ அல்லது சுரங்கத்திலோ ஏதேனும் இழப்பு ஏற்பட்டால் (அதன் சொந்தரக்காரனிடம்) நஷ்டஈடு கேட்கப்பட மாட்டாது. புதையலில் (ரிகாஸில்) ஐந்தில் ஒரு பங்கு (ஸகாத்தாக) வசூலிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :1499 அபூஹுரைரா (ரலி).

Read More »