Featured Posts

Tag Archives: மஸ்அலா

வினாவும் விடையும்

வினா: இஸ்லாமிய மார்க்கத்தின் இமாம்களான அறிஞர்களிடம் கீழ்வரும் மஸ்அலா பற்றி கேட்கப்படுகிறது. அதாவது நபிமார்களையும், ஸாலிஹீன்களையும் கொண்டு வஸீலா தேடி அவர்களிடம் ஷபாஅத்தை வேண்டுவதில் அனுமதிக்கப்பட்டதும், அனுமதிக்கப்படாததுமான முறைகளையும், அதன் விதிகளையும் விளக்க வேண்டும்.

Read More »

தூய இஸ்லாத்தின் இரண்டாவது அடிப்படை

அல்லாஹ் தன் திருத்தூதர் வாயிலாக நமக்கு விதித்தவற்றைக் கொண்டு நாம் அவனை வணங்க வேண்டும். அப்படியானால் வாஜிப் (கடமை), முஸ்தஹப் (ஸுன்னத்) போன்ற விதிகளுக்குட்பட்ட வழிபாடுகளை நாம் புரிய வேண்டும். இந்த அடிப்படையில் நாம் பார்ப்போமானால் சிருஷ்டிகளையும், மய்யித்துகளையும், மறைந்தவர்களையும் அழைத்து பிரார்த்தித்து அவற்றிடம் உதவி தேடினால் (அதை அல்லாஹ், ரஸூல் யாருமே கடமை என்றோ, ஸுன்னத் என்றோ நமக்கு விதிக்காமலிருக்கும் நிலையில்) இப்படிச் செய்பவன் நிச்சயமாக பித்அத்காரனாக மாறி …

Read More »

ஒரு ஸஹாபி அறிவிக்கும் ஹதீஸைக் கொண்டு சட்டம் விதிப்பதற்கு மற்ற ஸஹாபிகளின் ஒப்புதலும் வேண்டும்.

ஒரேஒரு ஸஹாபியின் விளக்கத்தை மட்டும் வைத்து காரியங்களை நாம் தீர்மானித்து விடக் கூடாது. ஒரு அறிவிப்பாளர் அறிவிக்கும் ஹதீஸில் உள்ள நேருரையின் கருத்தும், அறிவிப்பாளர் அது விஷயத்தில் விளங்கியிருக்கும் விளக்கமும் வித்தியாசமாகக் காணப்பட்டால் ஹதீஸின் உரையைத்தான் நாம் எடுக்க வேண்டும். அவ்விஷயத்தில் ஸஹாபியின் விளக்கம் சான்றாக எடுக்கப்பட மாட்டாது.

Read More »