Featured Posts

Tag Archives: ரஹீக்

[ரஹீக் 008] – அறியாமைக் கால அரபியச் சமுதாயம்

இதுவரை அரபிய தீபகற்பத்தில் நிலவிய அரசியல் மற்றும் மதக் கோட்பாடுகளை அறிந்தோம். இப்போது அதன் சமூக அமைப்பு, பொருளாதாரம் மற்றும் பண்பாடுகளைப் பற்றி சுருக்கமாகக் காண்போம். சமுதாய அமைப்பு அரபியர்களில் பலதரப்பட்ட வகுப்பினர் இருந்தனர். அவர்களில் உயர்மட்ட குடும்பங்களில் ஆண்கள் தனது குடும்பப் பெண்களுடன் உயர்வான நடத்தையைக் கொண்டிருந்தார்கள். அக்குடும்பங்களில் பெண்கள் சுய அதிகாரத்துடனும் கௌரவத்துடனும் திகழ்ந்தனர். பெண்களுக்கு மிகுந்த பாதுகாப்பும் மரியாதையும் அளிக்கப்பட்டது. பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாக்க வாளேந்தி …

Read More »

[ரஹீக் 007] – அரபியர்களின் சமய நெறிகள்

நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் சந்ததியினர் மக்காவில் குடியேறி அரபிய தீபகற்பம் முழுவதிலும் பரவிய காலம்தொட்டு அரபியர்களில் பெரும்பாலோர் இப்றாஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தையே பின்பற்றி வாழ்ந்தனர். அல்லாஹ்வை மட்டுமே வணங்கி அவனால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கத்தை முழுமையாகக் கடைபிடித்து வந்தனர். காலங்கள் செல்லச் செல்ல அல்லாஹ்வின் வழிகாட்டல்களையும் போதனைகளையும் சிறிது சிறிதாக மறக்க ஆரம்பித்தனர். எனினும், அவர்களிடையே ஓரிறைக் கொள்கையும் மார்க்கத்தின் உயர்ந்த நெறிகளும் ஓரளவு நிலைத்திருந்தன. குஜாஆ கோத்திரத்தின் …

Read More »

[ரஹீக் 006] – அரபு நாட்டில் ஆட்சி அதிகாரம்

நபி (ஸல்) அவர்கள் தங்களது ஏகத்துவ அழைப்பைத் தொடங்கிய காலகட்டத்தில் அரபிய தீபகற்பத்தில் ஆட்சி செய்தவர்கள் இரு வகையினராக இருந்தனர். 1) முடிசூட்டப்பட்டவர்கள்: ஆனால் இவர்களில் பலர் தனித்து இயங்கும் சுதந்திரம் பெறவில்லை. மாறாக, ஒரு பேரரசுக்குக் கீழ் கட்டுப்பட்டு நடப்பவர்களாக இருந்தனர். 2) குடும்பம் மற்றும் கோத்திரங்களின் தலைவர்கள்: முடிசூட்டப்பட்ட அரசர்களுக்குரிய தனித்தன்மையும் உரிமையும் இவர்களுக்கும் இருந்தன. இவர்களில் பெரும்பாலோர் முழு சுதந்திரத்துடன் செயல்பட்டனர். மற்றும் சிலர் ஏதாவது …

Read More »

[ரஹீக் 005] – அரபியர்கள் வாழ்ந்த இடங்களும் அரபிய சமுதாயங்களும்

‘நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு’ என்பது மனித சமுதாயத்திற்காக அவர்கள் கொண்டு வந்த இறைத்தூதைக் குறிக்கும் சொல்லாகும். தான் கொண்டு வந்த இறைத்தூதை தங்களின் சொல், செயல், வழிகாட்டல், ஒழுக்க மாண்புகள் ஆகியவற்றின் மூலம் மனித குலத்திற்கு எடுத்துரைத்தார்கள். அந்த இறைத்தூதுத்துவத்தால் மனித வாழ்வின் அளவுகோல்களை முற்றிலுமாக மாற்றினார்கள்; தீமைகளைக் களைந்து நன்மைகளை போதித்தார்கள்; இருளைவிட்டு மக்களை அகற்றி ஒளியை நோக்கி அழைத்து வந்தார்கள். படைப்பினங்களை வணங்குவதிலிருந்து மனிதனை …

Read More »

[ரஹீக் 004] – ஆசிரியர் முன்னுரை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவன் தனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நேர்வழி மற்றும் சத்திய மார்க்கத்தை வழங்கி, உலகிலுள்ள அனைத்து மார்க்கங்களையும் வெற்றி கொள்ளும்படி செய்தான். மேலும், சாட்சியாளராகவும், நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவும், அல்லாஹ்வின் பக்கம் அவனது கட்டளையைக் கொண்டு அழைக்கும் அழைப்பாளராகவும், பிரகாசிக்கும் கலங்கரை விளக்காகவும் அவரை ஆக்கினான். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் அஞ்சி …

Read More »

[ரஹீக் 003] – ஆசிரியரின் வாழ்க்கைக் குறிப்பு

பெயர்: ஸஃபியுர்ரஹ்மான் இப்னு அப்துல்லாஹ் இப்னு முஹம்மது அக்பர். உத்தர பிரதேச மாநிலம் ஆஜம் கட் மாவட்டத்திலுள்ள ‘முபாரக்பூர்’ எனும் நகரத்திலிருந்து ஒரு மைல் தொலைவிலுள்ள ‘ஹுஸைனாபாத்’ எனும் கிராமத்தில் 1942 ஆம் ஆண்டு ஆசிரியர் பிறந்தார். 1948ஆம் ஆண்டு ‘தாருத்தஃலீம்’ (முபாரக்பூர்) என்ற இஸ்லாமிய மத்ரஸாவில் அடிப்படை மற்றும் தொடக்கக் கல்வி கற்க சேர்ந்தார். 1954ஆம் ஆண்டு ‘இஹ்யாவுல் உலூம்’ (முபாரக்பூர்) என்ற இஸ்லாமிய மத்ரஸாவில் நடுநிலைக் கல்வி …

Read More »

[ரஹீக் 002] – தாருல் ஹுதாவின் அறிமுகம்

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! இறையருளும் ஈடேற்றமும் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தார், தோழர்கள், அவர்களைப் பின்பற்றும் அனைவருக்கும் மறுமை நாள் வரை தொடரட்டும். அஸ்ஸலாமு அலைக்கும்.. சமுதாயம் என்பது பல தனி மனிதர்கள் சேர்ந்த ஒரு கூட்டமைப்பு. முழுமையாக சீர்திருத்தம் பெற்ற மக்களை உயர் சமுதாயமாகவும், சீர்திருத்தம் பெறாதவர்களை தாழ்ந்த சமுதாயமாகவும் கருதுவது இயற்கை. ஆகவே, சமுதாயம் மேம்பட ஒவ்வொருவரும் தம்மை முழுமையாக சீர்திருத்திக் கொள்வதும், …

Read More »

[ரஹீக் 001] – அர்ரஹீக்குல் மக்தூம் – பதிப்புரை

அர்ரஹீக்குல் மக்தூம் ஆசிரியர்: அஷ்ஷைக் ஸஃபிய்யுர் ரஹ்மான், உ.பி., இந்தியா தமிழில் வெளியீடு: தாருல் ஹுதா பதிப்புரை தொடக்கத்திலும் இறுதியிலும் அகிலத்தாரின் இறைவன் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! அகிலத்தாருக்கு ஓர் அருட்கொடையாக வந்த இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தார், தோழர்கள், உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் இறையருளும் ஈடேற்றமும் உண்டாகுக! உங்கள் கைகளில் தவழும் – இந்நூல் பற்றிய சுருக்கமான ஓர் அறிமுகத்தை தங்களுக்கு முன் சமர்ப்பிக்கின்றோம்

Read More »