Featured Posts

Tag Archives: ஸுஃபிகள்

பிரார்த்தனையின் படித்தரங்கள் (1)

இஸ்லாமிய அறிஞர்களும், இமாம்களும் ஷரீஅத்தில் ஆகுமானதும், ஆகாதவையுமான பிரார்த்தனைகளை வரையறுத்துக் கூறியிருக்கிறார்கள். கூடாத, பித்அத்தான பிரார்த்தனைகளை மூன்றாகப் பிரித்திருக்கிறார்கள். ஒன்று: அல்லாஹ் அல்லாத இதர சிருஷ்டிகளை அழைத்துப் பிரார்த்தித்தல். மய்யித்திடம் கேட்டுப் பிரார்த்தித்தல். கண் பார்வைக்கு அப்பாற்பட்டோர், இறந்து போன நபிமார்கள், ஸாலிஹீன்கள் ஆகியோரையெல்லாம் கூப்பிட்டு ‘யாஸய்யிதீ! எனக்கு உதவி செய்தருள்வீர்! உங்களைக் கொண்டு காவல் தேடுகிறேன். உதவி கோருகிறேன். என் பகைவனுக்கெதிராக உதவி புரிவீராக!’ என்றெல்லாம் பிரார்த்தித்தலாகும். அன்றி …

Read More »

கப்றும் திருவிழாக்களும்

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் நபியவர்கள் கூறியதாக அறிவிக்கும் ஒரு ஹதீஸில் ‘அல்லாஹ்வுக்குப் பூமியில் வந்து போகின்ற மலக்குகள் இருக்கிறார்கள். அவர்கள் வழியாக என்னுடைய உம்மத்திலுள்ளவர்கள் என்மீது கூறுகின்ற ஸலாம் எனக்கு சேர்த்து வைக்கப்படுகிறது’ என்று அறிவிக்கிறார்கள். (நஸாயீ, அபூஹாதிம்) தூரத்திலிருக்கும் ஒரு முஸ்லிம் நபியின் மீது சொல்லும் ஸலாம் மலக்குகள் வழியாக நபியின்பால் சேர்த்து வைக்கப் படுகின்றது என்று இந்த ஹதீஸுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.

Read More »