Featured Posts

இஹ்ராமிலிருந்து விடுபடுவது….

779. இப்னு அப்பாஸ் (ரலி), ‘உம்ரா செய்பவர் இறையில்லம் கஅபாவைச் சுற்றி வந்துவிட்டால் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விடுவார்” என்று சொன்னதாக அதாஉ (ரஹ்) எனக்கு அறிவித்தார்கள். நான், ‘எந்த ஆதாரத்தை வைத்து இப்னு அப்பாஸ் (ரலி) இப்படிக் கூறுகிறார்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘தியாகப் பிராணிகளை அறுத்துத் தியாகம் செய்வதற்கான இடம் தொன்மையான ஆலயத்தின் அருகில் உள்ளது” எனும் (திருக்குர்ஆன் 22:33வது) இறைவசனத்தை ஆதாரமாகக் கொண்டும், நபி (ஸல்) …

Read More »

ஹஜ் மாதத்தில் உம்ரா செய்யலாமா?

777. நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் துலஹஜ் மாதம் நான்காம் நாள் காலையில் ஹஜ்ஜிற்கு இஹ்ராம் கட்டியவர்களாக வந்து சேர்ந்தனர். பலியிடப்படும் பிராணியைக் கொண்டு வந்திருப்பவரைத் தவிர மற்றவர்கள் ஹஜ்ஜை உம்ராவாக மாற்றிக் கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். புஹாரி: 1085 இப்னு அப்பாஸ் (ரலி). 778. நான் தமத்துஉ (ஹஜ்ஜும் உம்ராவும் தனித்தனி இஹ்ராமுடன்) செய்தேன். என்னைச் சிலர் தடுத்தார்கள். எனவே, இதை இப்னு அப்பாஸ் …

Read More »

ஹஜ் செய்யும் எண்ணத்துடன் இஹ்ராம் அணிந்தவர்

774. ‘உம்ராவிற்காக (இஹ்ராம் அணிந்து) வந்த ஒருவர் கஅபாவைச் சுற்றி வந்தார். ஸஃபா, மர்வாவிற்கிடையில் ‘ஸயீ’ செய்யவில்லை. இவர் தன்னுடைய மனைவியிடம் உடலுறவு கொள்ளலாமா?’ என இப்னு உமர் (ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டதற்கு, ‘நபி (ஸல்) அவர்கள் மக்கா வந்தபோது ஏழு முறை கஅபாவை வலம்வந்தார்கள். மகாம் இப்ராஹீம் எனும் இடத்தில் இரண்டு ரகஅத்துகள் தொழுதார்கள். ஸஃபா, மர்வாவிற்கிடையில் ‘ஸயீ’ செய்தார்கள். உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் …

Read More »

இஃப்ராத் முறையில் ஹஜ்.

773. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காகவும் உம்ராவுக்காகவும் (சேர்த்து ஒரே) இஹ்ராம் அணிந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்கு நிய்யத் செய்தபோது நாங்களும் அவர்களுடன் ஹஜ்ஜுக்கு நிய்யத் செய்தோம். நாங்கள் மக்காவுக்கு வந்தபோது நபி (ஸல்) அவர்கள், ‘எவருடன் தியாகப் பிராணி இல்லையோ அவர் தம் ஹஜ்ஜை உம்ராவாக ஆக்கி (நிய்யத் செய்து ஹஜ்ஜைப் பிறகு செய்து) கொள்ளட்டும்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களுடன் தியாகப் பிராணி இருந்தது. …

Read More »

குழப்பமான காலத்தில் ஹஜ்ஜூக்கு இஹ்ராம் அணிந்தவர் பற்றி..

771. குழப்பமான காலத்தில் உம்ரா செய்வதற்காக இப்னு உமர் (ரலி) மக்காவிற்குப் புறப்பட்டபோது, ‘கஅபாவுக்குச் செல்ல விடாமல் நான் தடுக்கப்பட்டால் நபி (ஸல்) அவர்களுடன் சென்றபோது நாங்கள் செய்தது போல் செய்து கொள்வோம்!” என்றார்கள். ஹுதைபிய்யா ஆண்டின்போது (ஹிஜ்ரி6-ல்), நபி (ஸல்) அவர்கள் உம்ராவிற்கு இஹ்ராம் அணிந்த காரணத்தினால் இப்னு உமர் (ரலி) அவர்களும் உம்ராவிற்கு இஹ்ராம் அணிந்தார்கள். பின்னர் சிந்தித்துப் பார்த்து, ‘ஹஜ், உம்ரா இரண்டும் ஒரே மாதிரியானது …

Read More »

கிரான் முறை ஹஜ் செய்பவர் பற்றி….

770. ”இறைத்தூதர் அவர்களே! உம்ரா செய்துவிட்டு மக்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டார்கள். ஆனால், நீங்கள் உம்ரா செய்த பிறகும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லையே! என்ன காரணம்?’ என நான் நபி (ஸல்) அவர்களைக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘என்னுடைய முடியைக் களிம்பு தடவிப் படியச் செய்து விட்டேன்; என்னுடைய குர்பானிப் பிராணியின் கழுத்தில் அடையாளம் தொங்கவிட்டு விட்டேன். எனவே, குர்பானி கொடுக்கும் வரை நான் இஹ்ராமைக் களைவது கூடாது” …

Read More »

தமத்துவ் ஹஜ் செய்பவர் குர்பானி கொடுத்தல் பற்றி..

768. இறுதி ஹஜ்ஜின்போது நபி (ஸல்) அவர்கள் உம்ராவுடன் ஹஜ்ஜையும் செய்தார்கள். (மதீனாவாசிகளின் எல்லையான துல்ஹுலைஃபாவிலிருந்தே தம்முடன் குர்பானிப் பிராணியை ஓட்டிச் சென்று குர்பானியையும் கொடுத்தார்கள். முதலில் உம்ராவுக்காக தல்பியா கூறி, பிறகு ஹஜ்ஜுக்காக தல்பியா கூறினார்கள். மக்களும் நபி (ஸல்) அவர்களுடன் உம்ராவுக்கும் ஹஜ்ஜுக்குமாகச் சேர்த்து இஹ்ராம் அணிந்தார்கள். மக்களில் சிலர் குர்பானி கொடுப்பவர்களாக இருந்தனர். எனவே, குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்திருந்தனர். இன்னும் சிலரோ, குர்பானி கொடுப்பவர்களாக …

Read More »

தமத்துவ் முறை ஹஜ் செய்ய அனுமதி.

767.’தமத்துவ்’ (ஹஜ் தொடர்பான இந்த 02:196 வது) வசனம் அல்லாஹ்வின் வேதத்தில் அருளப்பட்டது. எனவே, நாங்கள் அதை இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் செயல்படுத்தினோம். அதைத் தடை செய்யும் குர்ஆன் (வசனம்) எதுவும் அருளப்படவில்லை. நபி (ஸல்) அவர்களும் தாம் இறக்கும்வரை அதைத் தடை செய்யவில்லை. (ஆனால், இந்த விஷயத்தில்) ஒருவர் மட்டும் தாம் விரும்பிய (மாற்றுக் கருத்)தைக் தம் (சொந்த) அபிப்பிராயப்படி தெரிவித்தார். புஹாரி :4518 இம்ரான் பின் ஹூஸைன் …

Read More »

நரகம் மற்றும் கப்ரு வேதனை

நரகம் மற்றும் கப்ரு வேதனை மௌலவி உவைஸ் மதனி 9-ஆம் ஆண்டு இஸ்லாமிய ஒரு நாள் மாநாடு – அல் ஜுபைல், சவுதி அரேபியா – நாள் : 27-04-2007 Video & Non-linear editing : தென்காசி S.A. ஸித்திக்

Read More »

வரதட்சணை ஓர் ஆய்வு

வரதட்சணை ஓர் ஆய்வு மௌலவி அலாவுதீன் பாக்கவி 9-ஆம் ஆண்டு இஸ்லாமிய ஒரு நாள் மாநாடு – அல் ஜுபைல், சவுதி அரேபியா – நாள் : 27-04-2007 Video & Non-linear editing : தென்காசி S.A. ஸித்திக்

Read More »