Featured Posts

[ரஹீக் 001] – அர்ரஹீக்குல் மக்தூம் – பதிப்புரை

அர்ரஹீக்குல் மக்தூம் ஆசிரியர்: அஷ்ஷைக் ஸஃபிய்யுர் ரஹ்மான், உ.பி., இந்தியா தமிழில் வெளியீடு: தாருல் ஹுதா பதிப்புரை தொடக்கத்திலும் இறுதியிலும் அகிலத்தாரின் இறைவன் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! அகிலத்தாருக்கு ஓர் அருட்கொடையாக வந்த இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தார், தோழர்கள், உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் இறையருளும் ஈடேற்றமும் உண்டாகுக! உங்கள் கைகளில் தவழும் – இந்நூல் பற்றிய சுருக்கமான ஓர் அறிமுகத்தை தங்களுக்கு முன் சமர்ப்பிக்கின்றோம்

Read More »

காலணி அணியும்போது முதலில் வலதுகாலை முற்படுத்துதல்.

1358. நீங்கள் காலணி அணியும்போது முதலில் வலது காலில் அணியுங்கள்; அதைக் கழற்றும்போது முதலில் இடது காலில் இருந்து கழற்றுங்கள். வலது காலே அணிவதில் முதலாவதாகவும், கழற்றுவதில் இறுதியாகவும் இருக்கட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 5855 அபூஹுரைரா (ரலி). 1359. நீங்கள் ஒரேயொரு காலணியில் நடக்க வேண்டாம். ஒன்று, இரண்டு காலணிகளையும் ஒரு சேரக் கழற்றிவிடுங்கள்; அல்லது இரண்டையும் ஒரு சேர அணிந்து கொள்ளுங்கள் …

Read More »

மோதிரத்தில் இலச்சினை.

1356. நபி (ஸல்) அவர்கள் ஒரு மடல் எழுதிடும்படிக் கூறினார்கள். அல்லது எழுதிட நாடினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் ‘அவர்கள் எந்த மடலையும் முத்திரையிடப்படாமல் படிக்க மாட்டார்கள்’ என்றும் சொல்லப்பட்டது. உடனே வெள்ளியில் ஒரு மோதிரம் செய்தார்கள். அதில் பொறிக்கப்பட்டிருந்த வாக்கியம் ‘முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்” என்பதாகும். நபி (ஸல்) அவர்களின் கையில் அம்மோதிரம் இருக்கும் நிலையில் அதன் (பளிச்சிடும்) வெண்மையை (இப்போதும் நேரில்) நான் பார்த்துக் கொண்டிருப்பது போலிருக்கிறது” …

Read More »

வெள்ளி மோதிரம் அணிய அனுமதி.

1354. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து) கொண்டார்கள். அது (அவர்களின் வாழ்நாளில்) அவர்களின் கையில் இருந்தது. பிறகு, அபூ பக்ர் (ரலி) அவர்களின் கையில் இருந்தது. பிறகு, உமர் (ரலி) அவர்களின் கையில் இருந்தது. பிறகு, உஸ்மான் (ரலி) அவர்களின் கையில் இருந்தது. இறுதியில் அது ‘அரீஸ்’ எனும் கிணற்றில் (தவறி) விழுந்துவிட்டது. அதில் பொறிக்கப்பட்டிருந்த இலச்சினை ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ (இறைத்தூதர் முஹம்மது) என்றிருந்தது. …

Read More »

தங்க மோதிரம் அணியத் தடை.

1352. நபி (ஸல்) அவர்கள் தங்க மோதிரத்தை அணியவேண்டாமென்று (ஆண்களுக்குத்) தடைவிதித்தார்கள். புஹாரி : 5864 அபூஹூரைரா (ரலி). 1353. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்க மோதிரம் ஒன்றைத் தயாரித்து அணிந்து கொண்டிருந்தார்கள். அதன் குமிழைத் தம் உள்ளங்கை பக்கமாக அமையும்படி வைத்தார்கள். (இதைக் கண்ட) மக்களும் (அதைப் போன்ற) மோதிரங்களைத் தயார் செய்தனர். பிறகு நபி (ஸல்) அவர்கள், சொற்பொழிவு மேடையில் (மிம்பரில்) அமர்ந்து அந்த மோதிரத்தைக் கழறறிவிட்டு, …

Read More »

இஸ்லாம் முழுமையானது

உரை: டாக்டர் நுபார் ஃபாரூக் (அபூ யஹ்யா) இடம்: ஜி.சி.டி. கேம்ப் பள்ளி, துறைமுகம், ஜித்தா, சவூதி அரேபியா நாள்: 04.04.2008

Read More »

ஷிர்க்கும் தக்லீதும்

உரை: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ்) இடம்: ராயல் கமிஷன் கேம்ப்-14 பள்ளி வளாகம் தேதி: 26-04-2008 நிகழ்ச்சி ஏற்பாடு: அல்-ஜுபைல் தஃவா நிலையம் (தமிழ் பிரிவு)

Read More »

தற்பெருமையுடன் நடக்காதே.

1351. (முற்காலத்தில்) ஒரு மனிதன் (தனக்குப் பிடித்த) ஓர் ஆடையை அணிந்துகொண்டு நன்கு தலைவாரிக் கொண்டு தற்பெருமையுடன் நடந்து சென்று கொண்டிருந்தான். திடீரென அவனை அல்லாஹ் பூமிக்குள் புதையச் செய்துவிட்டான். அவன் மறுமை நாள் வரை (அவ்வாறே பூமிக்குள்) குலுங்கிய படி அழுந்திச் சென்று கொண்டேயிருப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 5789 அபூஹுரைரா (ரலி).

Read More »

பெருமைக்காக ஆடையை கரண்டைக்கு கீழ் உடுத்தல்.

1349. நபி (ஸல்) அவர்கள், ‘யார் தன்னுடைய ஆடையைப் பெருமையுடன் (தரையில் படும்படி) இழுத்துக் கொண்டு செல்கிறரோ அவரை மறுமையில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்” என்று கூறினார்கள். புஹாரி : 5784 இப்னு உமர் (ரலி). 1350. கர்வத்தோடு தன்னுடைய கீழாடையை(த் தரையில் படும்படி) இழுத்துச் சென்றவனை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 5788 அபூ ஹுரைரா(ரலி).

Read More »