ஈதுல் அல்ஹாவில் (ஹஜ்ஜூப் பெருநாள் தினம்) அறுக்கப்படும் பிராணிகள். 1280. நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார்கள். பிறகு பலியிட்டார்கள். ‘தொழுகைக்கு முன் அறுத்தவர் மற்றொன்றை அறுக்கட்டும்! அறுக்காதவர் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கட்டும்” என்றார்கள். புஹாரி : 985 ஜூன்துப் (ரலி). 1281. அபூ புர்தா என்றழைக்கப்பட்டு வந்த என் தாய் மாமன் ஒருவர் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்தார். அப்போது …
Read More »விலங்குகளை கட்டி வைத்து அம்பெறியத் தடை.
1278. சில ‘சிறுவர்கள்’ அல்லது ‘இளைஞர்கள்’ கோழியொன்றைக் கட்டி வைத்து அதன் மீது அம்பெய்து கொண்டிருந்ததைக் கண்டு அனஸ் (ரலி) ‘விலங்குகளைக் கட்டிவைத்து அம்பெய்து கொல்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்” என்று கூறினார்கள். புஹாரி : 5513 அனஸ் (ரலி). 1279. நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் இருந்தேன். அப்போது நாங்கள் ‘இளைஞர்கள் சிலரை அல்லது ‘மக்கள் சிலரைக்’ கடந்து சென்றோம். அவர்கள் கோழியொன்றைக் கட்டிவைத்து …
Read More »அல்லாஹ் எனும் சொல்லின் பொருள் என்ன?
அல்லாஹ் எனும் சொல் இணை – துணையற்ற உண்மையான ஒரே இறைவனைக் குறிக்கின்றது. அவனை விடுத்து வேறு எவரும் எதுவொன்றும் அல்லாஹ்வாக முடியாது. இந்த சொல்லுக்கு பன்மையோ அல்லது பால் வேறுபாடோ கிடையாது. ஆனால், இறைவன் எனும் தனிப்பட்ட சொல்லை ஒப்பு நோக்குங்கள். இச்சொல்லுக்கு பன்மைச் சொல்லும், பால் வேறுபாடும் கூற முடியும். எனவே அல்லாஹ் எனும் சொல்லே, தனித்துவமிக்க ஏக இறைவனின் மகாத்மியத்தை முன்னிறுத்துவதாக உள்ளது.
Read More »வேட்டையாட சிறு கற்களைப் பயன்படுத்தாதே.
1277. நான் சிறு கற்களை எறிந்து (வேட்டையாடிக்) கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்டேன். அவரிடம், ‘சிறு கற்களை எறியாதே. ஏனெனில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சிறு கற்களை எறிய வேண்டாமென்று தடுத்தார்கள்’ அல்லது ‘சிறுகற்களை எறிவதை வெறுத்து வந்தார்கள்’. மேலும், நபி அவர்கள் ‘அவ்வாறு சிறு கற்களை எறிவதால் எந்தப் பிராணியும் வேட்டையாடப்படாது .எந்த எதிரியும் வீழ்த்தப்படமாட்டான். மாறாக, அது பல்லை உடைக்கலாம்; கண்ணைப் பறித்து விடலாம். (அவ்வளவுதான் அதனால் …
Read More »முயல் கறி உண்ண ஆகுமானது.
1276. மர்ருழ் ழஹ்ரான், என்னுமிடத்தில் நாங்கள் ஒரு முயலை (அதன் பொந்திலிருந்து) கிளப்பி விரட்டினோம். மக்கள் அதைப் பிடிக்க முயற்சி செய்து களைத்து விட்டார்கள். நான் அதைப் பிடித்து விட்டேன். அதை எடுத்துக் கொண்டு அபூதல்ஹா (ரலி) அவர்களிடத்தில் வந்தேன். அவர்கள் அதை அறுத்து அதன் பிட்டத்தை அல்லது தொடைகளை அல்லாஹ்வின் தூதரிடம் அனுப்பினார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அதிலிருந்து நபி (ஸல்) அவர்கள் உண்டார்களா? …
Read More »வெட்டுக்கிளியை உண்ணலாம்.
1275. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ‘ஏழு’ அல்லது ‘ஆறு’ புனிதப் போர்களில் கலந்து கொண்டோம். நபி (ஸல்) அவர்களுடன் நாங்களும் வெட்டுக்கிளிகளைச் சாப்பிட்டு வந்தோம். புஹாரி : 5495 சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்)
Read More »உடும்புக் கறி உண்ணலாம்.
1271. உடும்பை நான் உண்ணவும் மாட்டேன்; அதை (உண்ண வேண்டாமென) நான் தடை செய்யவும் மாட்டேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 5536 இப்னு உமர் (ரலி). 1272. ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் உள்ளிட்ட நபித்தோழர்களில் சிலர் ஓர் இறைச்சியை உண்ணச் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவர், அது உடும்பு இறைச்சி என்று அவர்களை அழைத்துச் சொன்னார்கள். …
Read More »குதிரை இறைச்சி உண்ணலாம்.
1269. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரின்போது (நாட்டுக்) கழுதைகளின் இறைச்சியை உண்ண வேண்டாம் எனத் தடைவிதித்தார்கள். குதிரைகளை (அவற்றின் இறைச்சியை உண்ணலாமென) அவர்கள் அனுமதித்தார்கள். புஹாரி :4219 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி). 1270. நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு குதிரையை (அதன் கழுத்து நரம்பை) அறுத்து (‘நஹ்ர்’ செய்து) அதை உண்டோம். புஹாரி : 5510 அஸ்மா பின்த் அபூபக்கர் (ரலி).
Read More »இஸ்லாம் பொருள் என்ன?
இஸ்லாம் எனும் அரபிச்சொல் சரணடைதல் – கட்டுப்படுதல் எனும் பொருள்படும். இச்சொல் அமைதி எனும் மூலச்சொல்லிலிருந்து பிறந்தது. மதக் கருத்தோட்டத்தின்படி நோக்கினால், இச்சொல்லுக்குரிய சரியான – பொருத்தமான பொருள் இறை நாட்டத்தின் பால் தன்னை முழுமையாக அர்ப்பணித்தல் என்பதே! முஸ்லிம்கள் ஏக இறைவனை விடுத்து முஹம்மத் (ஸல்) என்பவரை இறைவனாகக் கருதுகின்றார்கள் எனும் பொருளில் சிலர் இஸ்லாத்தை முஹம்மதியம் – Muhammadinism என்று கூறுகின்றனர். இக்கருத்து முற்றிலும் தவறானது. “முஸ்லிம்கள் …
Read More »கழுதை இறைச்சி உண்ணத் தடை.
1262. கைபர் போரின்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘முத்அத்துன்னிஸா.”.. (கால வரம்பிட்டுச் செய்யப்படும் திருமணம்) செய்ய வேண்டாம் என்றும், நாட்டுக் கழுதைகளை உண்ண வேண்டாம் என்றும் தடை விதித்தார்கள். புஹாரி : 4216 அலீ (ரலி). 1263. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நாட்டுக் கழுதைகளின் இறைச்சிக்குத் தடை விதித்தார்கள். புஹாரி : 5527 அபூதலபா (ரலி). 1264. நாட்டுக் கழுதையின் இறைச்சியை உண்ண வேண்டாமென நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள். …
Read More »