Featured Posts

ஜாஃபர் அலி

இயேசு குறித்து முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன?

ஈஸா (அலை)  – இயேசு – ஜீஸஸ் என்று வழங்கப்படும் இயேசு கிறிஸ்து அவர்களை முஸ்லிம்கள் மதிக்கின்றனர். உயர்ந்த அந்தஸ்தில் வைத்து அவரைப் போற்றுகின்றனர். அதுமட்டுமல்ல, இந்த உலகில் அவருடைய இரண்டாவது வருகையை நம்புகின்றனர். மனித குலத்துக்கு இறைவன் அனுப்பிய தூதர்களில் ஒருவராக அவரை நம்புகின்றார்கள். அனைத்துக்கும் மேலாக, முஸ்லிம்கள் அவரை வெறுமனே ஜீஸஸ் என்றோ, இயேசு என்றோ குறிப்பிடுவதில்லை! மாறாக, அவருடைய பெயருடன் சேர்த்து அலைஹிஸ்ஸலாம் – இறைசாந்தியும், …

Read More »

நபி (ஸல்) அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள்.

நபிமார்கள் சிறப்புகள் 1468. ‘அஸர் தொழுகையின் நேரம் நெருங்கியபோது நபி(ஸல்) அவர்களை பார்த்தேன். மக்கள் உளூச் செய்வதற்குத் தண்ணீரைத் தேடினார்கள். தண்ணீர் கிடைக்கவில்லை. நபி (ஸல்) அவர்களிடம் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. தண்ணீர் உள்ள பாத்திரத்தில் நபி (ஸல்) அவர்கள் தங்களின் கையை வைத்து அப்பாத்திரத்திலிருந்து உளூச் செய்யுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் விரல்களின் கீழேயிருந்தது அங்கிருந்த கடைசி நபர் உளூச் செய்து முடிக்கும் வரை …

Read More »

நபி (ஸல்) அவர்களின் கனவுகள்.

1463. ‘நான் ஒரு குச்சியைக் கொண்டு பல் துலக்குவதாகக் (கனவு) கண்டேன். அப்போது என்னிடம் இரண்டு மனிதர்கள் வந்தார்கள். அவ்விருவரில் ஒருவர் வயதில் பெரியவராக இருந்தார். அவ்விருவரில் வயதில் சிறியவரிடம் பல் துலக்கும் குச்சியைக் கொடுத்தேன். அப்போது, ‘வயதில் மூத்தவரை முற்படுத்துவீராக!’ என்று என்னிடம் கூறப்பட்டது. உடனே அவ்விருவரில் வயதில் பெரியவருக்கு அக்குச்சியைக் கொடுத்தேன்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” புஹாரி : 246 இப்னு உமர் (ரலி). …

Read More »

கனவுகளுக்கு விளக்கமளித்தல்.

1462. ஒருவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘(இறைத்தூதர் அவர்களே!) நான் நேற்றிரவு கனவில் மேகம் ஒன்றைக் கண்டேன். அந்த மேகத்திலிருந்து நெய்யும் தேனும் சொட்டிக்கொண்டிருந்தன. உடனே மக்கள் தங்கள் கைகளை நீட்டி அவற்றைப் பிடித்துக்கொண்டிருக்கக் கண்டேன். (அவர்களில்) அதிகம் பிடித்தவர்களும் உண்டு; குறைவாகப் பிடித்தவர்களும் உண்டு. அப்போது ஒரு கயிறு பூமியிலிருந்து வானம் வரைப் போய்ச் சேர்ந்தது. அப்போது (இறைத்தூதர் அவர்களே!) நீங்கள் அந்தக் கயிற்றைப் பற்றிக் கொண்டு …

Read More »

கனவில் என்னைக் (நபியை) கண்டவர்….

1461. ‘கனவில் என்னை காண்கிறவர் விழிப்பிலும் என்னைக் காண்பார். (ஏனெனில்) ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்க மாட்டான் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. புஹாரி :6993 என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். (அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:”நபி (ஸல்) அவர்களுக்குரிய தோற்றத்தில் (அவர்களின் அங்க லட்சணங்களுடன்) அவர்களைக் கண்டால்தான் (நபி (ஸல்) அவர்களைக் கனவு கண்டதாகக் கருதப்படும்)” என்று இப்னு சீரின் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.)

Read More »

இதர மதங்களை சகித்துக் கொள்கிறதா இஸ்லாம்?

திருக்குர்ஆன் கூறுகின்றது:- தீன் – இறைமார்க்கம் தொடர்பான விஷயத்தில் எவர்கள் உங்களுடன் போர் புரியவில்லையோ – உங்களை உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றவில்லையோ அவர்களிடம் நீங்கள் நல்லவிதமாகவும், நீதியுடனும் நடப்பதிலிருந்து அல்லாஹ் உங்களை தடுப்பதில்லை! திண்ணமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கின்றான் திருக்குர்ஆன்: 3:42-47. சிறுபான்மையினராக இருக்கும் முஸ்லிம் அல்லாத மக்களின் கண்ணியத்தைப் பாதுகாப்பது இஸ்லாமிய ஆட்சியின் ஒரு அம்சமே! இதனால்தான், இன்றும்கூட முஸ்லிம் நாடுகளில் பிற மதத்தவரின் வழிபாட்டுத் தலங்கள் …

Read More »

நல்ல, தீய கனவுகள் பற்றி….

கனவுகள். 1456. ”(நல்ல) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். (கெட்ட) கனவு ஷைத்தான் இடமிருந்து வருவதாகும். எனவே நீங்கள் வெறுக்கிற ஒரு விஷயத்தைக்(கனவில்)கண்டால் கண் விழிக்கும்போது மூன்று முறை (இடப் பக்கமாகத்) துப்பி, அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரினால் அது அவருக்கு தீங்கிழைக்காது’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :5747 அபூ கத்தாதா (ரலி) . 1457. (மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகக்) காலம் சுருங்கும்போது இறை நம்பிக்கையாளர் …

Read More »

கவிதை குறித்து….

கவிதை. 1454. கவிஞர் சொன்ன சொற்களிலேயே மிக உண்மையான சொல், (கவிஞர்) லபீத் இப்னு ரபீஆ சொன்ன (”அறிக! அல்லாஹ்வைத் தவிர உள்ள பொருள்கள் அனைத்துமே அழியக் கூடியவையே” எனும் சொல்தான். (கவிஞர்) உமய்யா இப்னு அபிஸ் ஸல்த் (தம் கவிதையின் கருத்துகளால்) இஸ்லாத்தை ஏற்கும் அளவிற்கு வந்துவிட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 6147 அபூ ஹுரைரா (ரலி). 1455. ஒரு மனிதரின் வயிற்றில் …

Read More »

மனம் பற்றிக் கூறுதல்.

1452. உங்களில் (மனக் குழப்பத்திலிருக்கும்) யாரும் (‘என் மனம் அசுத்தமாகிவிட்டது’ எனும் பொருள் பொதிந்த) ‘கபுஸத் நஃப்ஸீ’ எனும் சொல்லைக் கூற வேண்டாம். மாறாக, (‘என் மனம் கனத்துவிட்டது’ எனும் பொருள் கொண்ட) ‘லம்சத் நஃப்ஸீ’ எனும் சொல்லையே கூறட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 6179 ஆயிஷா (ரலி) . 1453. உங்களில் (மனக் குழப்பத்திலிருக்கும்) யாரும் (‘என் மனம் அசுத்தமாகிவிட்டது’ எனும் பொருள் …

Read More »

காலத்தைத் திட்டாதே.

இனிய சொற்கள் கூறுதல். 1449. வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் சொன்னான்: ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகிறான். அவன் காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்); என் கையிலேயே அதிகாரம் உள்ளது; நானே இரவு பகலை மாறி மாறி வரச் செய்கிறேன். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :4826 அபூ ஹுரைரா (ரலி). 1450. திராட்சையை (‘கண்ணியமானது’ எனும் பொருள் கொண்ட) ‘அல்கர்ம்’ என்று பெயரிட்டழைக்காதீர்கள். ‘மோசமான …

Read More »