Featured Posts

ஜாஃபர் அலி

இஹ்ராமிலிருப்பவர் சிரமமிருப்பின் தலை முடியை மழித்தல்.

749. ஹுதைபிய்யாவில் என்னருகில் நபி (ஸல்) அவர்கள் நின்றார்கள். என் தலையிலிருந்து பேன்கள் உதிர்ந்து கொண்டிருந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘உம் (தலையிலுள்ள) பேன்கள் உமக்குத் துன்பம் தருகின்றனவா!” என்று கேட்டார்கள். நான் ‘ஆம்!” என்றேன். அதற்கு ‘உம் தலையை மழித்துக் கொள்ளும்!” என்றார்கள். என் விஷயமாகவே (திருக்குர்ஆன் 02:196) இறைவசனம் அருளப்பட்டபோது நபி (ஸல்) அவர்கள், ‘மூன்று நாள்கள் நோன்பு நோற்பீராக! அல்லது மூன்று ஸாவு தானியத்தை …

Read More »

இஹ்ராம் அணிந்த நிலையில் கொல்ல அனுமதிக்கப்பட்டவை.

746. ”ஐந்து உயிரினங்கள் தீங்கு இழைக்கக் கூடியவையாகும்! அவற்றை இஹ்ராம் அணிந்தவர் கொன்றால் அவரின் மீது குற்றமில்லை! அவை காகம், பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகியனவாகும்!”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 1829 ஆயிஷா (ரலி). 747. மேலே கூறப்பட்ட ஹதீஸின் வாசகம் இடம்பெற்றுள்ளது. புஹாரி:1829 ஹப்ஸா (ரலி) 748. மேலே கூறப்பட்ட ஹதீஸின் வாசகம் இடம்பெற்றுள்ளது. புஹாரி: 1829 இப்னு உமர் (ரலி).

Read More »

இஹ்ராம் அணிந்தவர் வேட்டையாடலாமா?

742. நபி (ஸல்) அவர்கள் அப்வா அல்லது வத்தான் எனும் இடத்தில் இருந்தபோது, நான் அவர்களுக்கு ஒரு காட்டுக் கழுதையை அன்பளிப்பாக வழங்கினேன். அவர்கள் அதை ஏற்க மறுத்தார்கள். என் முகத்தில் ஏற்பட்ட கவலையைக் கண்டதும். ‘நாம் இஹ்ராம் அணிந்திருப்பதால்தான் இதை ஏற்க மறுத்தோம்!” என்று கூறினார்கள். புஹாரி:1825 இப்னு அப்பாஸ் (ரலி). 743. நாங்கள் மதீனாவுக்கு மூன்று (கல்) தொலைவிலுள்ள காஹா எனும் இடத்தில் நபி (ஸல்) அவர்களுடன் …

Read More »

இஹ்ராம் அணியும் முன்பு வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொள்தல்.

739. இஹ்ராம் அணியும் நேரத்தில், நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிவதற்காக நான் நறுமணம் பூசினேன். இதுபோல் இஹ்ராமிலிருந்து விடுபடும்போது கஅபாவை வலம் வருவதற்கு முன்னால் நறுமணம் பூசுவேன். புஹாரி: 1539 ஆயிஷா (ரலி). 740. ‘நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்தவர்களாக இருக்கும் நிலையில் அவர்களின் தலை முடிக்கிடையில் நறுமணத்தின் பளபளப்பை நான் (இன்றும்) பார்ப்பது போன்று இருக்கிறது” என ஆயிஷா (ரலி) அறிவித்தார். புஹாரி :271 ஆயிஷா …

Read More »

ஹஜ் உம்ராவுக்கு இஹ்ராம் அணிதல்.

738. ‘உபைது இப்னு ஜுரைஜ் என்பவர் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், ‘அப்துர்ரஹ்மானின் தந்தையே! உங்கள் தோழர்களில் எவரும் செய்யாத நான்கு விஷயங்களை நீங்கள் செய்வதை காண்கிறேன்’ என்றார். ‘இப்னு ஜுரைஜே! அவை யாவை?’ என இப்னு உமர் (ரலி) கேட்டதற்கு, ‘(தவாஃபின்போது) கஃபதுல்லாஹ்வின் நான்கு மூலைகளில் யமன் தேசத்தை நோக்கியுள்ள (ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானி ஆகிய) இரண்டு மூலைகளைத் தவிர மற்ற மூலைகளை நீங்கள் தொடுவதில்லை …

Read More »

மதீனவாசிகள் துல்ஹூலைஃபாவில் இஹ்ராம் அணிதல்.

737. நபி (ஸல்) அவர்கள் துல்ஹுலைஃபாவின் பள்ளியைத் தவிர வேறெங்கும் இஹ்ராம் அணிந்ததில்லை. புஹாரி: 1541 இப்னு உமர் (ரலி).

Read More »

தல்பியா கூறுதல்.

736. ”இதோ, உன் அழைப்பை ஏற்று வந்து விட்டேன்! இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! இணையில்லாதோனே! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! புகழும், அருட்கொடையும், ஆட்சியும் உனக்கே உரியன! உனக்கு இணையானவர் எவருமில்லை.” இதுவே நபி (ஸல்) அவர்களின் தல்பியாவாகும். புஹாரி: 1549 இப்னு உமர் (ரலி).

Read More »

இஹ்ராம் அணியும் எல்லைகள்.

734. நபி (ஸல்) அவர்கள் மதீனாவாசிகளுக்கு துல் ஹுலைஃபாவையும் ஷாம் வாசிகளுக்கு ஜுஹ்பாவையும் நஜ்த் வாசிகளுக்கு கர்னுல் மனாத்தையும் யமன் வாசிகளுக்க யலம்லமையும் இஹ்ராம் அணியும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இவ்வெல்லைகள் இவர்களுக்கும் ஹஜ் உம்ராவுக்காக இவ்வழியே வருபவர்களுக்கும் உரியனவாகும். இந்த வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருப்பவர்கள், தாம் வசிக்குமிடத்திலேயே எங்கேனும் இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றும் மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றும் கூறினார்கள். புஹாரி : 1526 இப்னு …

Read More »

ஹஜ் உம்ராவில் தடை செய்யப் பட்டவைகள்.

731. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘இறைத்தூதர் அவர்களே! இஹ்ராம் அணிந்தவர் எதையெதை அணியலாம்?’ என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘சட்டை, தலைப்பாகை, முழுக்கால் சட்டை, தொப்பி, காலுறை ஆகியவற்றை அணியக்கூடாது. செருப்பு கிடைக்காதவர், தம் காலுறையின் (மேலிருந்து) கரண்டைக்குக் கீழ் வரையுள்ள பகுதியை வெட்டிவிட்டு அதை அணிந்து கொள்ளலாம் குங்குமப்பூச் சாயம் மற்றும் வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்க்கப்பட்ட ஆடையை அணியாதீர்!” என்றார்கள். புஹாரி …

Read More »

ரமலான் இறுதிப் பத்தில் அதிக வணக்க வழிபாடுகளில் இருத்தல்.

730. (ரமளானின் கடைசிப்) பத்து நாள்கள் வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள். (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள்!’ புஹாரி : 2024 ஆயிஷா (ரலி).

Read More »