678. ”ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘(என்னைப் போன்ற) பாமரர் ஒருவர் ரமளானில் தம் மனைவியுடன் கூடிவிட்டால் (பரிகாரம் என்ன?)” என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஓர் அடிமையை உம்மால் விடுதலை செய்ய இயலுமா?’ என்று கேட்டார்கள். அவர் ‘இயலாது!” என்றார். ‘அறுபது ஏழைகளுக்கு உணவு அளிப்பதற்குரிய பொருள் உம்மிடம் இருக்கிறதா?’ என்று கேட்டார்கள். அவர் ‘இல்லை” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் …
Read More »ஜாஃபர் அலி
நோன்பாளி குளிப்பு கடமையானவராகயிருத்தல்.
677. ”நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு, குளிப்பு கடமையானவர்களாக ஃபஜ்ரு நேரத்தை அடைவார்கள். குளித்துவிட்டு நோன்பைத் தொடர்வார்கள்!”. புஹாரி : 1930 ஆயிஷா (ரலி).
Read More »நோன்பு நோற்ற நிலையில் மனைவியை முத்தமிட்டால்…
675. ”நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் தம் மனைவியரில் ஒருவரை முத்தமிடுவார்கள்!” என்று சொல்லிவிட்டு ஆயிஷா (ரலி) சிரித்தார்கள். புஹாரி : 1928 ஆயிஷா (ரலி). 676. ”நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தம் மனைவியரைக்) கட்டியணைப்பார்கள்; முத்தமிடுவார்கள்! உங்களில் எவரையும் விட தம் (உடல்) உணர்ச்சியை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக அவர்கள் இருந்தார்கள்!” புஹாரி : 1927 ஆயிஷா (ரலி).
Read More »தொடர் நோன்பு நோற்க தடை.
670. நபி (ஸல்) அவர்கள் தொடர் நோன்பைத் தடுத்தார்கள். நபித்தோழர்கள், ‘நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?’ என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நான் உங்களைப் போன்றவன் அல்லன்; நிச்சயமாக நான் உண்ணவும் பருகவும் வழங்கப்படுகிறேன்” என்றார்கள். புஹாரி : 1962 இப்னு உமர் (ரலி). 671. நபி (ஸல்) அவர்கள் தொடர் நோன்பைத் தடுத்தார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?’ என்று முஸ்லிம்களில் ஒருவர் …
Read More »நோன்பு திறக்கும் நேரம்.
668. ”சூரியன் மறைந்து, இந்த(கிழக்கு) திசையிலிருந்து இரவு முன்னோக்கி வந்து, அந்த (மேற்கு) திசையிலிருந்து பகல் பின்னோக்கி(ப்போ)னால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்யவேண்டும்!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 1954 உமர் (ரலி). 669. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், ‘(வாகனத்திலிருந்து) இறங்கி, (உண்பதற்கேற்ப) மாவை எனக்காகக் கரைப்பீராக!” என்று கூறினார்கள். அதற்கவர், …
Read More »ஸஹர் செய்வதின் சிறப்பு.
665. ”நீங்கள் ஸஹ்ர் செய்யுங்கள்; நிச்சயமாக ஸஹ்ர் செய்வதில் பரக்கத் இருக்கிறது!”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 1923 அனஸ் இப்னு மாலிக் (ரலி). 666. நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஸஹர் செய்துவிட்டுப் பின்னர் (ஃபஜ்ர்) தொழுகைக்குத் தயாரானோம்.)’ஸஹருக்கும் தொழுகைக்குமிடையே எவ்வளவு இடைவெளி இருக்கும்?’ என்று கேட்டேன். அதற்கு ஸைத் இப்னு ஸாபித் (ரலி) ஐம்பது அல்லது அறுபது வசனங்கள் (ஓதும்) நேரம்’ என்று பதிலளித்தார்கள் …
Read More »நோன்பின் ஸஹர் நேரம் பற்றி….
660. ‘கருப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு தெளிவாகும் வரை’ என்ற (திருக்குர்ஆன் 02:187) இறைவசனம் அருளப்பட்டபோது, நான் ஒரு கருப்புக் கயிற்றையும் வெள்ளைக் கயிற்றையும் எடுத்து தன் தலையணையில் வைத்துக் கொண்டேன்; இரவில் அதைப் பார்க்கலானேன்; எனக்கு எதுவும் தெளிவாகவில்லை! விடிந்ததும் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இதுபற்றிக் கூறினேன்; அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘(கருப்புக் கயிறு என்பதின் கருத்து) இரவின் கருமையும் (வெள்ளைக் கயிறு என்பதின் கருத்து) …
Read More »மாதங்கள் 29 நாட்களாகவுமிருக்கும்…..
658. நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் சிலரிடம் ஒருமாதம் செல்லமாட்டேன் எனச் சத்தியம் செய்தார்கள். இருபத்தொன்பதாம் நாள் ‘காலையில்’ அல்லது ‘மாலையில்’ துணைவியரிடம் சென்றார்கள். அப்போது அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! அவர்களிடம் ஒரு மாதம் செல்ல மாட்டேன் எனச் சத்தியம் செய்(திருந்)தீர்களே?’ என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘மாதம் என்பது இருபத்தொன்பது நாள்களாகவும் இருக்கலாம்” என்று பதிலளித்தார்கள். புஹாரி : 5202 உம்மு ஸலமா (ரலி). 659. …
Read More »ரமலானுக்கு முந்திய ஓரிரு நாட்கள் நோன்பிருப்பது பற்றி.
657. ”ரமளானுக்கு முதல் நாளும் அதற்கு முன்புள்ள நாளும் உங்களில் எவரும் நோன்பு நோற்கக்கூடாது. அந்நாள்களில் வழக்கமாகத் நோற்கும் நோன்பு அமைந்தாலே தவிர! அவ்வாறு அமைந்தால்அந்நாளில் நோன்பு நோற்கலாம்!”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி: 1914 அபூஹுரைரா (ரலி).
Read More »பிறை பார்த்து நோன்பு நோற்றல் விடுதல்.
653. ”ரமலான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணும்வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதைக் கணித்துக் கொள்ளுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 1906 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி). 654. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘மாதம் என்பது இப்படியும், இப்படியும், இப்படியும் இருக்கும்” என்று (இரண்டு கைகளையும் மும்முறை விரித்துக் காட்டி) …
Read More »