Featured Posts

Tag Archives: சமூகம்

இருவகைப்பட்ட முஷ்ரிக்குகள்

அல்லாஹ்வும், அவனுடைய திருத்தூதரும் எவரைப் பற்றி இறைவனுக்கு இணைவைக்கும் முஷ்ரிக்குகள் என்று விளக்கினார்களோ அவர்களை இருவகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று: நூஹ் நபியின் சமூகத்திலுள்ளவர்களைப் போன்றோர். மற்றொன்று: நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் சமூகத்தைச் சார்ந்தோரைப் போன்றவர்கள். இவ்விரு கூட்டத்தினரும் இறைவனுக்கு ஒவ்வொரு மாதிரியாக இணை வைத்தார்கள். நபி நூஹ் (அலை) அவர்களின் சமூகத்தார் (ஸாலிஹீன்களான) இறைவனின் நல்லடியார்கள் இறந்தால் அவர்களுக்குச் சமாதிகளைக் கட்டி உயர்த்தி அந்த சமாதிகளின் மீது தரித்திருந்து …

Read More »

இஸ்லாத்தில் வஸீலா – தவஸ்ஸுலின் தாத்பரியம் என்ன?

வஸீலா என்பதிலிருந்து பிறக்கின்ற தவஸ்ஸுல் என்னும் சொல்லுக்கு மூன்று கருத்துக்களை அறிஞர்கள் வழங்குகின்றனர். அம்மூன்றில் இரு பொருள்களை எவராலும் மறுக்க இயலாது. அனைத்து முஸ்லிம்களும் ஓர்முகமாக ஏற்றிருக்கிறார்கள். அதில் ஒன்று: அசலில் தவஸ்ஸுல் என்பதற்குப் பொதுவாக ஈமான், இஸ்லாம், நற்கருமம் என்ற அர்த்ததைக் கொடுப்பது. அதாவது நபிகளைக்கொண்டு ஈமான் கொண்டு, அவர்களுக்கு வழிப்பட்டு, அல்லாஹ்வுக்கு கீழ்படிந்து நடப்பது. இப்படி நடந்து அவனை நெருங்குவது.

Read More »

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் மதிப்பு.

நபிகள் (ஸல்) அவர்கள் எல்லா மக்களுக்கும் பரிந்து பேசி அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள். புகழுக்கு உரிய உன்னதமான ஸ்தானமும் அவர்களுக்கு உண்டு. பரிந்து பேசுகின்ற அனைத்து சிபாரிசுகாரர்களை விட மதிப்பிலும், அந்தஸ்திலும் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடத்தில் சிறந்தவர்களாவார்கள். அவர்களின் அந்தஸ்தின் அருகில் எந்த நபிகளும், எந்த ரசூலும் நெருங்க முடியாது. இவர்கள் அல்லாஹ்விடம் எல்லோரையும் விட மதிப்புக்குரியவர். யார் யாருக்கு அவர்கள் இறைவனிடம் துஆச் செய்து மன்றாடி சிபாரிசு …

Read More »

பாடம்-08 | மரங்கள், கற்கள் போன்றவைகளில் ஆசி தேடும் மக்கள்

மரங்கள், கற்கள் போன்றவைகளில் ஆசி தேடும் மக்கள். உயர்ந்தவனாகிய அல்லாஹ் கூறுகிறான்: ‘நீங்கள் (வணங்கும்) லாத்தையும் உஜ்ஜாவையும் கண்டீர்களா? மற்றொன்றாகிய மூன்றாவதான மனாத் (என்னும் பெண் விக்கிரகத்)தையும் நீங்கள் கண்டீர்களா?’ (53:19-20)

Read More »