Featured Posts

அபூ முஹை

மாற்றாரால் காமுகராகச் சித்தரித்த நபி – ஸைனப் திருமணம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மதீனா வாழ்க்கையில் (ஹிஜ்ரி) மூன்றாம் ஆண்டு, நபியவர்களின் ஐம்பத்தாறாவது வயதில், ஆறாவது மனைவியாக ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் (ரலி) அவர்களை திருமணம் செய்தார்கள். நபி (ஸல்) அவர்களின் திருமணங்களிலேயே விஷேசமாக மாற்றாரால் விமர்சிக்கப்பட்டு, நபி (ஸல்) அவர்களைக் காமுராகச் சித்தரிக்க இந்தத் திருமணத்தை சான்றாகக் கூறுகின்றனர். இதில் மாற்றாரின் மீது குற்றம் சுமத்துவதில் எவ்வித நியாயமும் இல்லை. நம்மவர்களே இத்திருமணத்திற்கு கொச்சையானக் கற்பனைக் …

Read More »

தவறான புரிதலுக்கு தக்க பதில்.

சகோதரர் நேசகுமார், விமர்சிக்கும் நோக்கத்தில் இஸ்லாத்தின் மீது சில குற்றச்சாட்டுக்களை வீசியிருக்கிறார். அவற்றிற்கான விளக்கத்தை பார்ப்பதற்கு முன் அனைத்து முஸ்லிம் சகோதரர்களையும் அழைத்து அவர் குறிப்பிட விரும்புவது இதுதான்… //இங்கு நான் சலாஹீதீன் மற்றும் அனைத்து முஸ்லீம் சகோதரர்களுக்கு குறிப்பிட விரும்புவது இதுதான். இஸ்லாத்தின் தத்துவக் கொள்கைகளுள் ஒன்று, முகமது நபி அவர்கள் ஏனைய மனிதர்களைப் போன்றவர்தாம் என்பது. அவர் கடவுள் அல்ல. அவர் தப்பே செய்யாதவர் அல்ல. அவர் …

Read More »

முஹம்மது நபியைப் பின்பற்றுவதற்கான இறை வழிகாட்டல்

அல்லாஹ் கூறுகிறான். (நபியே) கூறும், நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான்… (அல்குர்ஆன் 3:31) மனிதன் இறைவனை நேசிப்பதற்கும், இறைவன் மனிதனை நேசிப்பதற்கும் அளவுகோல் முஹம்மது நபியைப் பின்பற்றுவதுதான் என்பதே இறைவனின் வழிகாட்டல். இனி… நபி மனிதத்தன்மைக்கும் அப்பாற்பட்டவரா? நபி தன்னைக்கடவுளாக வணங்க கட்டளையிட்டிருக்கிறாரா? அடுத்த பதிப்பில் இவற்றைப்பார்ப்போம். சகோதரர் நேசகுமாரிடம் ஒரு வேண்டுகோள். நபியின் மனைவியரில் ஒருவரான அன்னை ஸஃபியாவின் வரலாற்றை கண்டு அதிர்ச்சியுற்றதாக …

Read More »

முஹம்மது நபியை நேசித்தல்

விஷயத்துக்கு வருவோம். ஸலாஹுத்தீன் எழுதிய விமர்சனம் பற்றி சகோதரர் நேசகுமார் எழுதியவற்றிலிருந்து, முஹம்மது நபியையும், நபியின் மனைவிமார்களையும், கண்ணியமாக எழுதுங்கள் என்று கேட்டக்கொண்டிருக்கிறார் என்று விளங்க முடிகிறது. ஒவ்வொரு முஸ்லிமும் முஹம்மது நபியை தன் உயிரினும் மேலாக மதிக்க வேண்டும் என்றே இஸ்லாம் கட்டளையிடுகிறது. அல்லாஹ் கூறுகிறான். (நபியே) கூறும், உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் …

Read More »

இஸ்லாத்தின் மீதான விமர்சன, விளக்கம்

அன்பின் தமிழ் சகோதரர்களுக்கு. உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாகட்டும். இஸ்லாம் ஓர் முழு அறிமுகம் என்ற தலைப்பில் ‘இஸ்லாம் பற்றிய எதிர்மறை விவாதங்கள், கருத்துக்கள். என சகோதரர் நேசகுமார் தனது விமர்சனங்களை இஸ்லாத்தின் மீது பதித்திருக்கிறார். இதுவரை இஸ்லாம் முழுமையாக அறிமுகப்படுத்தப்படவில்லையோ? என்ற சந்தேகம் அவரின் தலைப்பில் தொக்கியிருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆரோக்கியமான விமர்சனங்களை இஸ்லாம் வரவேற்று, தக்க விளக்கங்களையும் வழங்கியே வந்திருக்கிறது. சகோதரர் …

Read More »