தவறாகப் புரியப்பட்ட சட்டங்களில் ”தலாக்” – விவாகரத்துச் சட்டமும் அடங்கும். தங்களை அறிவு ஜீவி(?) என்று சொல்லிக் கொள்பவர்கள் சமயம் கிடைக்கும் போதெல்லாம் ”தலாக்” சட்டத்தினால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள், இஸ்லாத்தில் பெண்ணியத்திற்கு பாதுபாப்பு இல்லை’ என்று அறிவு ஜீவித்தனத்திற்கு – இஸ்லாத்தை விமர்சிப்பதே அளவு கோலாகி விட்டது. இந்த அறிவு ஜீவிகளிடம் மறு பக்க சிந்தனையை ஒரு போதும் எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையில் கட்டாயம் தலாக் – …
Read More »விமர்சனம் விளக்கம்
நபியின் சொத்துக்கு வாரிசுண்டா?
நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப்பின் நடந்த வரலாற்று சம்பவங்களை இஸ்லாத்தின் வரலாறாக மேற்கோள் காட்டுவது அறியாமையே என்று மீண்டும் இங்கே சொல்லிக்கொண்டு – நபி (ஸல்) அவர்கள் விட்டுச் சென்றச் சொத்துக்கள் தனியொரு மனிதர் விட்டுச் சென்றச் சொத்துக்களை மாதிரி வாரிசுரிமையைப் பெற்றிருக்கவில்லை. நபிமார்கள் விட்டுச் செல்லவதெல்லாம் தர்மமாகும் என்பதைப் பார்ப்பதற்கு முன் ”குமுஸ்” என்றால் என்னவென்பதை சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம். குமுஸ்போரில் எதிரிகள் விட்டுச் சென்றதில் – போரில் …
Read More »நேசகுமாரின் மறைத்தலும் திரித்தலும் [பாகம் 2]
நேசகுமாரிடம் நான் அவர் எழுதியதிலிருந்து இரண்டு கேள்விகளும் அதற்கான விளக்கமும், ஆதாரமும் கேட்டிருந்தேன். அதற்கு இன்றுவரை பதிலில்லை. அத்தனை சீக்கிரம் பதில் வராது என்று தெரிந்திருந்துதான் கிட்டத்தட்ட மூன்று வார காலங்கள் இந்த பக்கமே வராமல் சொந்த வேலைகளில் கவனமாக இருந்தேன். உடனே பதில் சொல்லக் கூடியவராக இருந்தால் அவர் உண்மையிலேயே இஸ்லாம் சம்பந்தப்பட்ட ஆய்வுகளை செய்துவருகிறார் என்பதை எல்லோரும் புரிந்துக் கொள்ளலாம். அவர் செய்து வருவதெல்லாம் வெறும் அவதூறு …
Read More »அள்ளிப்போட்டதை விமர்சிக்காமல்!
பெயரில்லாதவரின் (அனானிமஸ்) பின்னூட்டத்திற்கு பதிலளிப்பது போல் நேசகுமார் சில கருத்துக்களை தமது பதிவின் பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறார். ”இஸ்லாம் ஓர் முழு அறிமுகம்” எனத் தொடங்கிய இவ்விவாதம் நேசகுமார் – ஸலாஹூத்தீன் என்ற இருவருக்கு மட்டும் சம்மந்தமுடையதல்ல. 03.12.2004ன் முதல் பதிவிலேயே ”அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கு குறிப்பிட விரும்வது இதுதான்” என்றே தனது பொய்ப் பிரச்சாரத்தைத் துவங்கினார். //*நான் ஆரம்பத்திலேயே சலாஹ¤த்தீனுக்கு (9.02.2005 பதிவு) சொல்லியிருந்தது போன்று இது போன்றவைகளுக்கு நான் …
Read More »மரணிக்கும் போது நபியின் சொத்துக்கள்.
ஏகத்துவப் பிரச்சாரத்தை துவக்கிய ஆரம்பக் காலங்களில் அப்பிரச்சாரத்தைக் கைவிடும்படி அன்றைய மக்கா நகர அறிஞர்கள் செல்வந்தர்கள் அனைவரும் கோரினார்கள். அதற்கு பகரமாக பொன் – பொருட்களை நபி (ஸல்) அவர்களின் காலடியில் வைக்கவும் தயாரானார்கள் – பெண் தேவையுள்ளவராக இருந்தால் உலக அழகிகளையும் உமக்குத் தருகிறோம் – ஆட்சிதான் வேண்டுமென்றால் உம்மை எங்களுக்குத் தலைவராக்கிக் கொள்கிறோம். என்றெல்லாம் வாக்குறுதி தந்து – ஓரிறைக் கொள்கைப் பிரச்சாரத்தை கைவிடும்படி வேண்டினார்கள். ஒரு …
Read More »நரகம் பற்றிய பயமேன்? 4
மறுமையை நம்பாதவர் எவரும் முஸ்லிமாக இருக்க முடியாது. மறுமையின் நம்பிக்கையில் நரகத்தை நம்புவதும் அடக்கம். திருக்குர்ஆனில் பல இடங்களில் ”நரக நெருப்புக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்” என அல்லாஹ் எச்சரிக்கிறான். அல்லாஹ்வின் எச்சரிக்கையின் அடிப்படையிலேயே முஸ்லிம்கள் நரகத்தை நம்புகிறார்கள் – நரக நெருப்புக்கு பயப்படுகிறார்கள். ஒரு வாதத்துக்காக மறுமை – நரகம் என்றெல்லாம் கிடையாது என்று வைத்துக் கொண்டாலும் அதனால் முஸ்லிம்களுக்கு எந்த இழப்பும் ஏற்பட்டு விடப்போவதில்லை. அல்லாஹ்வின் தண்டனைக்கு அஞ்சி, …
Read More »நரகம் பற்றிய பயமேன்? 3
பகுத்தறிவு வழங்கப்பட்ட மனிதன் அந்த அறிவைக் கொண்டு நன்மையைத் தேர்ந்தெடுப்பது போல, நன்மையெனக் கருதி தீமையையும் தேர்ந்தெடுத்து விடுகிறான். தான் சரிகண்டு – தேர்ந்தெடுக்கும் ஒரு செயல் தனக்கு நன்மையாக இருந்தால் போதும், (பிறருக்கும் தீமையாக இருந்தாலும் பராவாயில்லை) என்று அவனின் அறிவு ஏற்றுக் கொள்கிறது. மனிதனின் அத்தியாவசியத் தேவைகள்.மனிதனின் வாழ்வாதாரத் தேவைகளில் மிக முக்கியமானது உணவாகும். இந்த உணவைப் பெற்றுக் கொள்வதில் அவன் பல வழிகளில் முயற்சிக்கிறான், அவன் …
Read More »உண்மைக்கு வித்திடும் அறியாமைகள்
‘சரிவரத் தெரிந்துக்கொள்ளாமல் எதைப்பற்றியும் ஒரு வார்த்தைக் கூட பேசி விடாதே!அது உன் அறியாமைக்கு விளக்கமாகி விடும்’ – முஸ்லிம்களின் நான்காவது கலீபாவான அலீ (ரலி) அவர்கள் தன் மகனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் காணப்படுகிற வாசகங்கள் இவை! குர்ஆனில் ஒரு வசனம் இருக்கிறது: ‘தொழுகையாளிகளுக்கு கேடு தான்’ என்று!இதை வைத்து இஸ்லாத்தின் இறைவன் தொழுகையாளிகளைச் சபிக்கிறான் என்று விமர்சனம் செய்தால் எப்படி இருக்குமோ அப்படித் தான் இஸ்லாமைப் பற்றிய இன்றைய விமர்சனங்களும் …
Read More »நரகம் பற்றிய பயமேன்? 2
தண்டிக்கும் கடவுள்களெல்லாம் அன்புக்கு மாறிவிட்டனவாம், இனி மனிதர்களுக்கு கடவுள் தண்டினை என்பது இல்லவே இல்லை, எல்லாமே அன்புதான். மிச்சம் – மீதமிருந்த கடவுள் பயத்தையும் துடைத்தெறிந்துவிட்டு மனிதர்கள் பஞ்சமா பாதகங்களை துணிந்து செய்யலாம் கடவுள் தண்டிக்கவே மாட்டார், மாறாக அன்பையேக் காட்டுவார். //*முதலாவது காரணம், தண்டிக்கும் கடவுளிலிருந்து, அன்புவடிவான கடவுளுக்கு அனைத்து மதங்களும் மெல்ல நகர்ந்துவிட்டன. ருத்ரன் சிவனானது போல – ஜெஹோவாவுக்கும் கர்த்தருக்குமான பரினாம வளர்ச்சியைப் போல. ஆனால் …
Read More »நரகம் பற்றிய பயமேன்? 1
ஒருவன் தனதுத் தந்தையை நோக்கி ”நீ எனக்குத் தந்தையே இல்லை” என்று தன்னைப் பெற்றத் தந்தையைப் நிராகரித்தானாம். ஆனால் தந்தையின் சொத்தில் மட்டும் எனக்கு வாரிசுரிமையுண்டு என்று உரிமை கொண்டாடினானாம். இதையொத்ததாகவே இருக்கிறது ஓரிறைக் கொள்கையை மறுத்து நிராகரித்து விட்டு, ஒரே இறைவன் ஆயத்தப்படுத்தியுள்ள பரிசுகளில் பங்கு கேட்பதும். மறைவானவற்றை நம்புதல்.ஓரிறைக் கொள்கையின் நம்பிக்கையில் ஒன்றுதான் ”அவர்கள் மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்” (2:2) என்பதும் அடங்கும். மறைவானது – …
Read More »