Featured Posts

நூல்கள்

உறவுகளைப் பேணுதல்.

1655. அல்லாஹ் படைப்புகளைப் படைத்து முடித்தபோது, உறவானது எழுந்து அன்பாளன் அல்லாஹ்வின் அரியாசனத்தின் கால்களில் ஒன்றைப் பற்றி(க் கொண்டு மன்றாடி)யது. அப்போது அல்லாஹ், ‘என்ன?’ என்று கேட்டான். அதற்கு உறவு, ‘உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரி நிற்கிறேன்”என்று கூறியது. ‘உன்னை(உறவை)ப் பேணி நல்ல முறையில் நடந்து கொள்பவருடன் நானும் நல்லமுறையில் நடந்துகொள்வேன் என்பதும், உன்னைத் துண்டித்து விடுகிறவரை நானும் துண்டித்து விடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்க வில்லையா?’ என்று …

Read More »

மறுமை நாள் (அத்தியாயம்-1)

மறுமை நாள் அவசியமா? பூமி என்ற இச்சிறிய கோளில் மனித ஆயுள் வரையறுக்கப்பட்ட ஒரு குறுகிய காலம் மட்டுமே! ஆனால் வாழ வேண்டும் என்ற ஆசையோ அவனை விட்டு பிரிவதே இல்லை. நிரந்தரமாக அழியாது வாழ வேண்டும் என்ற எண்ணம் அவனது உள்ளத்தில் ஆழப்பதிந்து விட்ட இயற்கை உணர்வு. அவன் உள்ளத்தில் உள்ள ஆசைகளோ எல்லையற்றவை. நிறைய ஆசைகள், எதிர்பார்ப்புகள், இலட்சியங்களோடு அவன் வாழ்கிறான். சொந்தங்களையும், உறவுகளையும், தோழர்களையும் உருவாக்கிக் …

Read More »

பெற்றோருக்குப் பணிவிடையில் முன்னுரிமை.

1654. மூன்று பேர்களைத் தவிர வேறெவரும் தொட்டிலில் (குழந்தையாக இருக்கும் போது) பேசியதில்லை. (ஒருவர்) ஈசா (அலை) அவர்கள். (மற்றொருவர்) பனூ இஸ்ராயீல்களால் ‘ஜுரைஜ்’ என்றழைக்கப்பட்டு வந்த (இறைநேசரான) மனிதர் ஒருவர். (ஒரு முறை) அவர் தொழுது கொண்டிருந்தார். அப்போது அவரின் தாயார் வந்து அவரை அழைத்தார். ஜுரைஜ் (தம் மனத்திற்குள்) ‘அவருக்கு நான் பதிலளிப்பதா? தொழுவதா?’ என்று கூறினார்கள். (பதிலளிக்கவில்லை.) அதனால் கோபமடைந்த அவரின் தாய், ‘இறைவா! இவனை …

Read More »

பெற்றோருக்குப் பரிவு காட்டுதல்.

பரிவு, நல்லுறவு, நல்லொழுக்கம். 1652. இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உன் தாய்” என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உன் தாய்” என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். ‘உன் தாய்” என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். அப்போது நபி …

Read More »

பெர்ஸிய மக்களின் சிறப்பு. (பாரசீகம்)

1650. நாங்கள் (ஒரு சமயம்) நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்களுக்கு ‘அல்ஜுமுஆ’ எனும் (62 வது) அத்தியாயத்தில் ‘இன்னும் இவர்களுடன் வந்து சேராமலிருக்கும் ஏனைய மக்களுக்காகவும் (இந்தத் தூதரை அவன் அனுப்பியுள்ளான்)” எனும் (3 வது வசனம் அருளப்பெற்றது. அப்போது, ‘அந்த (ஏனைய) மக்கள் யார்? இறைத்தூதர் அவர்களே!” என்று கேட்டேன். நான் மூன்று முறை கேட்டும் அவர்கள் (எனக்கு) பதிலளிக்கவில்லை. எங்களிடையே சல்மான் அல் ஃபாரிஸீ (ரலி) …

Read More »

நபித் தோழர்களைத் திட்டாதீர்கள்.

1649. என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும் (என் தோழாகளான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரண்டு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரின்) அந்த தர்மம் எட்ட முடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 3673 அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி).

Read More »

மனிதனின் வாழ்நாள் அதிகபட்ச அளவு.

1648. ‘நபி (ஸல்) அவர்கள் தங்களின் ஆயுளின் கடைசிக் காலத்தில் இஷாத் தொழுகை நடத்தினார்கள். ஸலாம் கொடுத்ததும் எழுந்து நின்று, ‘இன்றைய இந்த இரவை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இன்றிலிருந்து (சரியாக) ஒரு நூற்றாண்டின் துவக்கத்தில் இப்போது பூமியின் மேல் இருக்கக் கூடியவர்களில் ஒருவர் கூட எஞ்சியிருக்கமாட்டார்கள்’ என்று கூறினார்கள்” . புஹாரி : 116 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி).

Read More »

நபித்தோழர்களின் சிறப்பு.

1645. மக்களில் ஒரு குழுவினர் புனிதப் போர் புரியச் செல்கிற ஒரு காலம் வரும் அப்போது, ‘நபி (ஸல்) அவர்களிடம் தோழமை கொண்டிருந்தவர்கள் எவரும் உங்களிடையே இருக்கிறார்களா?’ என்று கேட்கப்படும். அதற்கு, ‘ஆம் (இருக்கிறார்கள்)” என்று பதிலளிக்கப்படும். உடனே அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும். பிறகு, இன்னொரு காலம் வரும். (அப்போதும் புனிதப் போர் புரிய ஒரு குழுவினர் செல்வார்கள்.) அப்போது, ‘நபி (ஸல்) அவர்களின் தோழர்களுடன் நட்பு கொண்டவர்கள் உங்களிடையே இருக்கிறார்களா?’ …

Read More »

குறைஷிப் பெண்களின் சிறப்பு.

1643. குறைஷிப் பெண்கள் தாம் ஒட்டகத்தில் சவாரி செய்த பெண்களிலேயே சிறந்தவர்கள் (தம்) குழந்தைகளின் மீது அதிகப் பரிவுடையவர்கள். தம் கணவனின் செல்வத்தை அதிகமாகப் பேணிப் பாதுகாக்கக் கூடியவர்கள் .இதை அபூஹுரைரா (ரலி) அறிவித்துவிட்டு பின்பு, ‘இம்ரானின் மகள் மர்யம் ஒட்டகம் எதிலும் சவாரி செய்ததேயில்லை” என்று கூறினார்கள். புஹாரி : 3434 அபூஹூரைரா (ரலி). 1644. ”இஸ்லாத்தில் (மனிதர்களாக) ஏற்படுத்திக் கொள்கிற உறவுமுறை இல்லை!’ என்று இறைத்தூதர் (ஸல்) …

Read More »

அன்ஸாரிகளில் சிறந்தோர்.

1633. ”அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது பனூ நஜ்ஜார் குடும்பமாகும். பிறகு பனூ அப்தில் அஷ்ஹல் குடும்பமாகும். பிறகு பனூ ஹாரிஸ் இப்னு கஸ்ரஜ் குடும்பமாகும். பிறகு பனூ சாஇதா குடும்பமாகும். அன்சாரி கிளைக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை உண்டு’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஸஅத் இப்னு உபாதா(ரலி), ‘நபி(ஸல்) அவர்கள் எங்களை விட (வேறு சில குலங்களைச்) சிறப்பித்துக் கூறினார்கள் எனக் காண்கிறேன்” என்று கூறினார்கள். அவர்களிடம், …

Read More »