Featured Posts

திருக்குர்ஆன் கூறும் உண்மைக் கதைகள்

எறும்பின் கதை [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-5]

“சுலைமான், தாவூதுக்கு வாரிசானார். அவர், ‘மனிதர்களே! பறவைகளின் மொழி எமக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. மேலும், (தேவையான) அனைத்துப் பொருட்களும் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. நிச்சயமாக இதுவே தெளிவான பேரருளாகும்’ எனக் கூறினார்.” “ஜின்கள், மனிதர்கள், பறவைகள் என்பவற்றிலிருந்து சுலைமானுக்கு அவரது படைகள் ஒன்று திரட்டப்பட்டு, அவர்கள் அணியணியாக நிறுத்தப்பட்டனர்.” “அவர்கள் எறும்புகளின் (வசிப்பிடமான) பள்ளத்தாக்கிற்கு வந்தபோது, ஓர் எறும்பு, ‘எறும்புகளே! சுலைமானும் அவரது படையினரும் தாம் உணராதவர்களாக உங்களை மிதித்துவிடாதிருப்பதற்காக உங்கள் …

Read More »

ஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-4]

ஒட்டகம் எவ்வறு படைக்கப்பட்டுள்ளது என்று நீங்கள்  பார்க்கவில்லையா? என திருக்குர்ஆன் கேட்கின்றது. ஒட்டகம் அல்லாஹ்வின் படைப்பில் அதிசயமானது. பாலைவனப் பயணத்திற்கு ஏற்றது. பாலைவனக் கப்பல் என அதனை அழைப்பார்கள். முன்னொரு காலத்தில் “தமூத்” என்றொரு சமூகம் வாழ்ந்து வந்தது. அல்லாஹ் அவர்களுக்கு பொருள் வளத்தை வழங்கி இருந்தால் நல்ல உடல்பலம்மிக்கவர்களாக அவர்கள் விளங்கினார்கள். அவர்கள் மலைகளைக் குடைந்து அழகிய வடிவமைப்பில் வீடுகளை அமைத்து வாழ்ந்து வந்தனர். அல்லாஹ் வழங்கிய அருள்களை அனுபவித்த …

Read More »

மூஸா நபியும்… அதிசயப் பாம்பும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-3]

மூஸா (அலை) அவர்கள் ஒரு நபியாவார்கள். அவருக்கு ‘தவ்றாத்” வேதம் வழங்கப்பட்டது. அவர் இஸ்ரவேல் சமூகத்திற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதராவார்கள். அவர் ஒரு நாள் தன் மனைவியுடன் எகிப்துக்கு வந்து கொண்டிருந்தார். இடைநடுவில் இரவாகிவிட்டது. அப்போது தூரத்தில் வெளிச்சத்தைக் கண்டார். வெளிச்சம் தென்பட்ட பகுதியில் மக்கள் இருக்கலாம்; அவர்களைச் சந்தித்தால் ஏதேனும் உதவியைப் பெறலாம்; பயண உதவிக்கு நெருப்பு எடுத்து வரலாம் என எண்ணினார். எனவே, மனைவியை ஒரு இடத்தில் இருக்கச் …

Read More »

அழிக்கப்பட்ட யானைப்படை [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-2]

திருக்குர்ஆன் கூறும் கதைகள்-2 -அஷ்ஷெய்க்  S.H.M. இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்)- அன்புள்ள தம்பி தங்கைகளே ! உங்களுக்கு யானை என்றால் ரொம்பப் பிடிக்கும்தானே! ஆம், தரையில் வாழும் உயிரினங்களில் பெரியது யானை. அது பலம் மிக்கது. யானையின் பலம் அதன் தும்பிக்கையில் என்பார்கள். அதே போன்று எமது பலம் எமது இறை நம்பிக்கையில் உள்ளது! யானை படை அழிக்கப்பட்ட ஒரு யானைப்படையின் கதையை குர்ஆன் கூறுகின்றது. அது …

Read More »

காகத்தின் கதை [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-1]

“(நபியே!) ஆதமின் இரு புதல்வர்களின் செய்தியை உண்மையாக அவர்களுக்கு எடுத்துரைப்பீராக! அவ்விருவரும் காணிக்கை நிறைவேற்றிய போது அவ்விருவரில் ஒருவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ‘நிச்சயமாக நான் உன்னைக் கொலை செய்வேன்” என (காணிக்கை ஏற்றுக் கொள்ளப்படாதவன்) கூறினான். அதற்கு (மற்றவர்), ‘பயபக்தியாளர்களிடமிருந்து தான் அல்லாஹ் ஏற்றுக்கொள்வான்’ எனக் கூறினார்.” “என்னைக் கொலை செய்வதற்காக நீ உன் கையை என் பக்கம் நீட்டினாலும் உன்னைக் கொலை செய்வதற்காக எனது …

Read More »