Featured Posts
Home » சட்டங்கள் (page 75)

சட்டங்கள்

ஹாஜிகளே!, இதயத்தில் இரக்கம் பிறக்கட்டும்! உள்ளத்தின் கதவுகள் திறக்கட்டும்!

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) “ஹஜ் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும். கலிமா, தொழுகை, நோன்பு என்பன உடலுடன் மட்டும் சம்பந்தப்பட்ட வணக்கங்களாகும். “ஸகாத்” பணத்துடன் மட்டும் சம்பந்தப்பட்ட இபாதத்தாகும். ஆனால் ஹஜ் பணத்தாலும், உடலாலும் செய்யப்படும் தியாகமாகும். எனவே ஹஜ் ஏனைய இபாதத்களை விடச் சற்று மாறுபட்ட தன்மையைக் கொண்டதாகும்.

Read More »

புனித கஃபா தொடர்பான அடையாளச் சின்னங்கள்

அஷ்ஷைக்: எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி புனித கஃபா ஆலயம் பற்றியும், அதனோடு தொடர்பான அடையாளச் சின்னங்கள் பற்றியும் இங்கு நோக்கவிருக்கின்றோம். கஃபாவின் அமைவிடம்: சவூதி மக்கா நகரில் அமைந்திருக்கின்ற புனித கஃபா ஆலயம் பூமியின் மையப்பகுதியில் அமைந்திருக்கின்றது. இதை எகிப்து நாட்டைச் சேர்ந்த புவியியல் ஆய்வாளர் ஒருவரும் உறுதி செய்துள்ளார்.

Read More »

தியாகத்தின் மறுபெயர் ஹஜ்

– கே.எல்.எம்.இப்ராஹீம் மதனீ எம்.ஏ (அரபிக்)ஹஜ் கடமை இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும், அல்லாஹுத்தஆலா நபி(ஸல்) அவர்கள் மூலமாக தன் அடியார்களுக்கு ஹஜ்ஜைக் கடமையாக்கினான். நபி(ஸல்) அவர்கள் தன் உம்மத்தினருக்கு ஹஜ்ஜைக் கடமையாக்கினாலும் இதன் பின்னணியில் நபி இபராஹீம்(அலை) அவர்களும், அவர்களின் குடும்பமும் செய்த மாபெரும் தியாகங்கள் மறைந்திருக்கின்றன

Read More »

ஹஜ், உம்ரா, ஸியாரத்

– எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி ஒரு உம்ரா, மறு உம்ரா வரையுள்ள சிறுபாவங்களுக்குப் பரிகாரமாகும். அங்கீகரிக்கப்பட்ட ஹஜ்ஜின் கூலி சுவனமாகும். என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: புகாரி , முஸ்லிம்). மேலதிக விபரங்களை படிக்க மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும். Download PDF format book

Read More »

ரமழானுக்குப் பின் நாம்..

தொகுப்பு: மௌலவி S.யாஸிர் ஃபிர்தவ்ஸி ரமழான் மாதத்தில் நோன்பை நல்ல முறையில் நிறைவேற்றவும், தொழுகை, குர்ஆன் ஓதுதல், பிரார்த்தனை, திக்ரு, தர்மம்.. போன்ற ஸாலிஹான அமல்களை செய்யவும் வாய்ப்பளித்த அல்லாஹ்விற்க்கே எல்லா புகழும். அவனது அருளும் சாந்தியும் நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தினர்கள், தோழர்கள், அவர்களை வாய்மையுடன் பின்பற்றி வந்தவர்கள் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

Read More »

ரமழான் – நோன்பு

அல்-ஜுபைல் வெள்ளி மேடை-64 வழங்குபவர்: மௌலவி முஹம்மத் ஷமீம் ஸீலானி நாள்: 13-08-2010 இடம்: அல்-ஜுபைல் துறைமுக பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

ரமழானும் தர்மமும்

– உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும் பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் செலவிடுங்கள். கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள். அல்லாஹ் தேவையற்றவன். புகழுக்குரியவன் என்பதை அறிந்துகொள்ளுங்கள். (2:267).

Read More »

மனித மாண்பு காக்கும் புனித நோன்பு!

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) புனித ரமழான் எம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது. அருள் மறையாம் திருமறைக் குர்ஆன் அருளப்பட்ட இப்புனித மாதத்தில் மனிதம் சிறப்புப் பெற நோன்பிருக்க வேண்டுமென்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். “நோன்பு” என்பது அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடுதல் போன்ற செயல்களை அதிகாலை முதல் மாலை வரை தவிர்த்திருக்கும் ஒரு பயிற்சியாகும்.

Read More »

நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள்

நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள் – உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி நோன்பின் மாண்புகளை சிறப்புகளை குறித்து நபி (ஸல்) அவர்க்ள கூறிய ஆதாரபூர்வமான அநேக ஹதீஸ்கள் உள்ளன. அந்த ஹதீஸ்களை மக்கள் தெரிந்து அமல்கள் செய்வதை விட ஆதாரமற்ற செய்திகளை வைத்து அமல்கள் புரிவதில் தான் ரமழானின் காலத்தையும் நேரத்தையும் செலவிடுகிறார்கள். பின்வரும் செய்திகள் ரமழான் காலத்தில் அதிகமதிகமாக பள்ளிவாசல்களில் பயான் செய்யப்படுகின்றன. ஆனால் அவைகள் அனைத்தும் பலஹீனமான செய்திகளே …

Read More »

வழிகாட்டும் வான்மறை வந்திறங்கிய மாதம்

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) “ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிறித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் அருளப்பட்டது. எனவே உங்களில் எவர் அம் மாதத்தை அடைகின்றாரோ அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்….” (2:185)

Read More »