Featured Posts

இஸ்லாம்

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-30)

– M.T.M.ஹிஷாம் மதனீ وقوله : (ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله) (ولوشاء الله ما اقتتلوا ولكن الله يفعل ما يريد) (أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محلي الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد) விளக்கம்: அல்லாஹ்வின் நாட்டத்தை உறுதி செய்யும் சான்றுகள் …

Read More »

மலக்குமார்களின் பிரார்த்தனை யாருக்கு?

குடும்பத்தினர் மற்றும் முத்தாவீன்களுக்கான சிறப்பு பயான் நிகழ்ச்சி (ஸபர்-1433) வழங்குபவர்: K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அழைப்பாளர், அல்-கோஃபர் இஸ்லாமிய நிலையம் நாள்: 28-12-2011 (புதன்கிழமை இரவு 7 மணி முதல் 11 மணிவரை) இடம்: கேம்யா பீச் கேம்ப் (Kemya Beach Camp), அல்-ஜுபைல் தொழிற்சாலை நகரம் நிகழ்ச்சி ஏற்பாடு: அல்-ஜுபைல் தஃவா நிலையம் (தமிழ்ப்பிரிவு) Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/d35arqyhm8265v4/angels_supplication_for_whom_KSR.mp3] Download mp3 audio

Read More »

குத்பாவை சுருக்குவோம், சுன்னாவை நிலைநாட்டுவோம்

– அஷ்ஷெய்க் அபூ ஹுனைப் குத்பா என்றால் என்ன? “குத்பா” என்ற அறபு வாசகமானது, உபதேசம் செய்யும் ஒருவரின் உபதேசத்திற்கு வழங்கப்படும் பெயராகும். இதனடிப்படையில் உபதேசம் செய்யும் ஒருவர் அறபு மொழியில் “கதீப்” என்று அழைக்கப்படுவார். உண்மையில் வரவேற்கத்தக்க ஓர் உபதேசமானது, சுருக்கமான வசனங்களையும், மனதைக் கவரும் சொற்களையும், கேட்போருக்கு இலகுவாகப் புரிந்து கொள்ளக்கூடிய விளக்கத்தையும் கொண்டிருக்கும்.

Read More »

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-29)

– M.T.M.ஹிஷாம் மதனீ وَقَوْلُهُ : ﴿وَهُوَ الْحَكِيمُ الْخَبِير﴾ وَقَوْلُهُ : ﴿وَهُوَ الْعَلِيمُ الْحَكِيمُ ﴾، وَقَوْلُهُ سُبْحَانَهُ: ﴿وَتَوَكَّلْ عَلَى الْحَيِّ الَّذِي لا يَمُوتُ﴾ விளக்கம்: அல்லாஹ்வின் நிலைத்திருக்கும் தன்மை, அவனது ஞானம் மற்றும் நல்லறிவு என்பவற்றிக்கான எடுத்துக்காட்டுகள். அல்லாஹ் கூறுகின்றான்: “மரணிக்காத, (என்றும்) உயிருடன் இருப்பவன் மீது முழுமையாக நம்பிக்கை வைப்பீராக!’ (அல்புர்கான்: 58) இவ்வசனத்தில் இருந்து அல்லாஹுத்தஆலா எப்போதும் ஜீவிக்கக்கூடியவனாக இருக்கின்றான் …

Read More »

பெண்ணே பெண்ணே! – (தொடர் 6)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் தப்பெண்ணம் வேண்டாம் கண்ணே! சிலருக்கு அடுத்தவரைப் பற்றி எப்போதும் கீழ்த்தரமான எண்ணம் தான் இருக்கும். அடுத்தவர் எதை ஏன்இ என்ன நியாயத்திற்காகச் செய்கின்றனர் என்று அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் இருக்கும். சிலர் பொறாமை காரணத்திற்காகவும் உளவு மனபப்பான்மையாலும் இந்த நிலைக்கு உள்ளாகின்றனர். பெண்களில் பலருக்கு இந்த நோய் இருக்கின்றது.

Read More »

சுன்னாவும் வஹியே!

–இப்னு ஸாஹுல் ஹமீத்– வஹி என்றால் அல்லாஹ்விடமிருந்து அவனது தூதர்களுக்கு அருளப்பட்ட வேத வெளிப்பாட்டைக் குறிக்கும். நபி(ச) அவர்ளுக்கு அருளப்பட்ட வஹி (வேத வெளிப்பாடு) இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 01. வஹி அல் மத்லூ (ஓதப்படும் வஹி) இது குர்ஆனைக் குறிக்கும். குர்ஆனின் கருத்தும், வார்த்தைகளும் அல்லாஹ்விடமிருந்து வந்தவையாகும். எனவே அது “கலாமுல்லாஹ்” அல்லாஹ்வின் வார்த்தையாகும். அதைப் போன்ற ஒரு அத்தியாயத்தைக் கூட இந்த முழு உலகும் ஒன்று திரண்டாலும் …

Read More »

ரபிவுல் அவ்வல் மாத முஸ்லிம்கள்

வழங்குபவர்: வழங்குபவர்: அஸ்ஹர் ஸீலானி நாள்: 11-02-2011 இடம்: ஸனாய்யியா இஸ்லாமிய அழைப்பகம், ஜித்தா Download video – Size: 371 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/s6jkywergceswf8/muslims_in_rabi_ul_awwal_azhar.mp3] Download mp3 audio – Size: 39.6 MB

Read More »

பித்அதுல் ஹஸனா (தொடர்-4)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் சில அறிஞர்கள் பித்அதுல் ஹஸனா இருக்கிறது என்று கூறுகின்றனர். அதேவேளை அவர்கள் மற்றும் பல பித்அத்துக்களைக் கண்டித்துள்ளனர். இவர்கள் கண்டித்துள்ள பித்அத்துக்களுக்கும், இவர்கள் பித்அதுல் ஹஸனா என்று கூறும் பித்அத்துக்களுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை. பித்அத்தை நல்லது, கெட்டது என்று எந்த அடிப்படையில் பிரிக்கின்றனர் என்பது புரியவில்லை.

Read More »

பித்அதுல் ஹஸனா (தொடர்-3)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் பித்அத் கூடாது என்று கூறும் போது மாற்றுக் கருத்துள்ள சில அறிஞர்கள் பித்அத் கூடாது தான் இருந்தாலும் நல்ல பித்அத் (பித்அதுல் ஹஸனா) ஆகுமானது என்று கூறுகின்றனர். இவ்வாறு கூறுவது தவறானது என்பது குறித்தும் பித்அத்தில் (வழிகேட்டில்) நல்ல பித்அத் (நல்ல வழிகேடு) என்று ஒன்று இல்லை என்பது குறித்து கடந்த இதழ்களில் நாம் பார்த்தோம். இது …

Read More »