Featured Posts
Home » 2005 » June (page 3)

Monthly Archives: June 2005

57] இஸ்ரேல் உதயம்

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 57பாலஸ்தீன் அரேபியர்கள், யூதர்கள் மீதான கொலைவெறித் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்த அதே சமயத்தில், பிரிட்டன் ஓர் அறிவிப்பை வெளியிட்டது. மே மாதம் 15-ம் தேதி (1948-ம் வருடம்), பாலஸ்தீனிலிருக்கும் தனது துருப்புகளை முழுவதுமாக வாபஸ் பெற்றுக்கொள்ளும் என்பதே அந்த அறிவிப்பு. அதாவது மே மாதம் 15-ம் தேதியுடன் பாலஸ்தீனுக்கும் பிரிட்டனுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இரண்டாம் உலகப்போர் காலம் தொடங்கி பிரிட்டனின் காலனியாக இருந்துவரும் …

Read More »

பூமியில் முதல் ஆலயம் காஃபா.

மக்காவில் இருக்கும் காஃபா என்னும் ஆலயத்தின் வரலாற்றுச் சான்றைச் சொல்லும் நபிமொழியை எடுத்தெழுதி அதில் குறிப்பிட்டிருக்கும் வரலாற்றுத் தகவல் தவறானது என்று நிரூபிக்கும் நோக்கத்தோடு முன் வைக்கப்பட்ட நபிமொழி இது.. நான் நபி(ஸல்) அவர்களிடம்) ‘இறைத்தூதர் அவர்களே! பூமியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?’ என்று கேட்டேன். அவர்கள் ‘அல் மஸ்ஜிதுல் ஹராம் – மக்கா நகரிலுள்ள புனித (கஅபா அமைந்திருக்கும்) இறையில்லம்” என்று பதிலளித்தார்கள். நான் ‘பிறகு …

Read More »

தலாக் ஓர் விளக்கம் -2

முஸ்லிம் பெண்களின் விவாகரத்து உரிமை.மனைவியைப் பிடிக்கவில்லை என்றால் தலாக் – விவாகரத்துச் செய்யும் உரிமை, இஸ்லாத்தில் ஆண்களுக்கு இருப்பது போன்று, பெண்களுக்கு இல்லை என்று முஸ்லிமல்லாதோர் தவறாக விளங்கி வைத்துள்ளனர். இஸ்லாம் பெண்களுக்கும் அந்த உரிமையை வழங்கியிருக்கிறது என்பதை அறியாததால் அவர்கள் இவ்வாறு கருதுகின்றனர். கணவன் – மனைவி இருவருக்குமிடையே விவாவரத்துச் செய்யும் முறையில் வித்தியாசமிருக்கிறதே தவிர உரிமையில் வித்தியாசமில்லை. சில முஸ்லிம்களும் இஸ்லாத்தை அறியாததால் பெண்களின் விவாகரத்து உரிமை …

Read More »

பாங்கின் பிரார்த்தனை!

நபிகள் (ஸல்) அவர்கள் தமது உம்மத்துகளிடம் ஸலவாத்துச் சொல்லக் கூறியிருப்பதுபோல தமக்காக வஸீலாவையும், பளீலாவையும், புகழுக்குரிய இடத்தையும் கேட்டு அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் படியும் ஏவியிருக்கிறார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படும் ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘முஅத்தின் பாங்கு சொல்வதைக் கேட்டால் முஅத்தின் சொல்வதைப் போன்று நீங்களும் சொல்லுங்கள். பிறகு என்மீது ஸலவாத்துச் சொல்லுங்கள். ஒருமுறை என்மீது ஒருவர் ஸலவாத்துச் சொன்னால் அல்லாஹ் அவர்மீது …

Read More »

சிருஷ்டிகளிடம் கேட்பதால் விளையும் தீமைகள்

எதையும் சிருஷ்டிகளிடம் கேட்பதற்கு மூமின் முஸ்லிம்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். குறிப்பாக நபிமார்கள் யாரிடமும் கேட்க கூடாது. அவர்களிலும் குறிப்பாக பெருமானார் (ஸல்) அவர்கள் யாரிடமும் எதையும் கேட்கக் கூடாது. நபிமார்கள் மதிப்பாலும், கண்ணியத்தாலும் பொதுவாக மேலானவர்கள். எதையும் அல்லாஹ்விடம் கேட்பார்கள். அவர்களின் எல்லாத் தேவைகளுக்கும் அல்லாஹ் போதுமானவன்.

Read More »

நேசகுமாரின் மறைத்தலும் திரித்தலும் (பாகம் 3)

அபூஸுஃப்யான் என்ற நபித்தோழருக்காக கண்ணீர் வடித்த நேசகுமார் வழக்கம் போல் யானையைத் தடவிப் பார்த்த குருடன் போல் இங்கொன்றும் அங்கொன்றும் படித்துவிட்டு அபு அபூஸுஃப்யானுக்காக அழுது வைத்தார். அபூஸுஃப்யானின் உண்மை வரலாறு நேசகுமாருக்குத் தெரியுமா? வாளால் பரப்பப்பட்டதுதான் இஸ்லாம் என்றும் அதற்கு நபித்தோழர் அபூஸுஃப்யான்(ரலி) அவர்களின் இஸ்லாத்திற்கு முந்தைய வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியில் மறைத்தல் திரித்தல் செய்திருந்தார். அய்யா நேசகுமார், நீர் நடுநிலையில் நின்று அதை செய்தியாக எழுதி இருந்தீரென்றால் …

Read More »