Featured Posts

அபூ உமர்

மாமனிதர்

வரலாற்றை புரட்டிப்பார்த்தால் எத்தனையோ தலைவர்களும் அறிஞர்களும் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் நிச்சயமாக ஒரு இறைத்தூதராகத்தான் இருக்கவேண்டும் என்று அவரின் வாழ்க்கையை படித்து தன் கருத்துகளை தெரிவித்துள்ளார்கள்.

Read More »

இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி – ஒரு பார்வை

சவூதி அரேபியா, ஜித்தா மாநகரில் ஏப்ரல் 15 அன்று பழைய மக்கா சாலை கிலோ.14-ல் “இஸ்திராஹா அல் முல்தகா” என்ற இடத்தில் “இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி” நடைபெற்றது. ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 2500 மக்கள் கலந்துக்கொண்டனர். மாலையில் சிறுவர் சிறுமியர்களுக்கான போட்டிகளும், ஆண்களுக்கான கயிறு இழுக்கும் போட்டியும் நடைபெற்றது. மஃரிப் தொழுகைக்குப் பிறகு, இஸ்லாமிய சொற்பொழிவு அரங்கம் ஆரம்பமானது. ஸனாயிய்யா இஸ்லாமிய அழைப்பு மையத்தின் தமிழ் …

Read More »

“நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்”, டாக்டர் பெரியார்தாசன் அவர்களின் விளக்கம்

“நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்” என்ற தலைப்பில் “அப்துல்லாஹ்” என பெயர் மாற்றம் செய்துக்கொண்ட டாக்டர் பெரியார்தாசன் அவர்கள், 14.03.2010 அன்று இரவு 8.45 முதல் 9.30 வரை உரை நிகழ்த்தினார். சிறு வயதில் இந்து மத நம்பிக்கையாளராக இருந்து, பிறகு நாத்திகராக மாறி, பல ஆயிரம் பேர்களை கடவுள் மறுப்பாளர்களாக ஆவதற்கு காரணமானவர், ஒரு கட்டத்தில் முன்னால் கல்லூரி நண்பன் கேட்ட கேள்வி, “கடவுள் இருக்கிறாரா? இல்லையா?” என்பது …

Read More »

ஐ.ஏ.எஸ் தேர்வு முடிவுகள்

ஐ.ஏ.எஸ். (இந்திய ஆட்சிப் பணி), ஐ.பி.எஸ். (இந்திய பாதுகாப்புப் பணி), ஐ.எஃப்.எஸ் (இந்தியாவின் வெளிவிவகார பணி) உள்ளிட்ட அகில இந்திய அளவிலான அதிகாரிகளாக பணிபுரியக் கூடிய வேலைக்கு மத்திய அரசு தேர்வாணயம் (யு.பி.எஸ்.சி) ஆண்டு தோறும் முதல்நிலை மற்றும் மெயின் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த வருடம் 27 முஸ்லிம்கள் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள்.

Read More »

ஜித்தாவில் மிதவை தண்ணீர் சுத்திகரிப்புக்கூடம்

தற்போது ஜித்தாவில் நிலவுகின்ற தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்குவதற்காக, மிதவை கடல்நீர் சுத்திகரிப்புக்கூடம் ஏப்ரல் இறுதியில் கரையை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உற்பத்திக் கூடம் ஏற்கனவே செங்கடலை அடைந்திருந்தாலும், ஜித்தாவை நோக்கிய தன் பயணத்தில் தற்போது இருக்கிறது. இதுபோன்ற மற்றொரு உற்பத்திக்கூடமும் மே மாத இறுதியில் ஜித்தாவின் கடற்கரையை வந்தடையும். இதனால் ஜித்தாவின் தண்ணீர் தட்டுப்பாடு வெகுவாக நீங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More »

நீரிழிவு (Diabetics) நோயை வெற்றிக்கொள்வோம்

இனிவரும் தலைமுறைகள் அம்மி, அடிப்பம்பு, உலக்கை, குடக்கல் போன்றவற்றை மியூசியத்தில் மட்டும்தான் பார்க்க முடியும் என்பதை உண்மைபடுத்தும் விதமாக, வாழ்வின் அன்றாட தேவைகளுக்கு எலக்ட்ரிகல் சாதனங்களையே நம்பி வாழ்கிறோம். இச்சாதனங்கள், நம்மை அறியாமலேயே உடல் உறுப்புகளுக்கு இலவசமாக கிடைத்துக்கொண்டிருந்த பயிற்சிகளை தடுத்து, பலவித நோய்களில் அல்லல் பட காரணமாக அமைந்துவிட்டன. இன்றைய சூழ்நிலையில் உலகின் மிகப்பெரிய நோய்களில் நீரிழிவு நோயும் ஒன்றாகும்.

Read More »

டாடாவின் (TATA) அதீத வளர்ச்சி

வளர்ந்து வரும் நாடுகளுக்கு மத்தியில் இந்தியாவும் சீனாவும் உலகளவில் பேசப்பட்டுக்கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இதற்கு சற்று மேலான செய்தி ஒன்று கடந்த மார்ச் 26-ல் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது பணக்காரர்களின் (ஐரோப்பிய) ஆடம்பர “கார்”களாக (European luxury brands) கருதப்படும் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் கார் கம்பெனிகளை ஃபோர்ட் நிறுவனத்திடமிருந்து, இந்தியாவின் டாடா குழுமம் 2.3 பில்லியன் டாலருக்கு வாங்குகிறது

Read More »

ஹஜ் கலைக்களஞ்சியம்

ஹஜ் “கலைக்களஞ்சியம்” வெளியீடு திட்டத்தை சவூதி இளவரசர் சல்மான் இப்னு அப்துல் அஜீஸ் அவர்கள் இன்று (மார்ச் 29, 2008) தொடங்கி வைக்கிறார். இக்கலைக்களஞ்சியம் கடந்த வருடத்தின் ஹஜ் செய்திகளோடு புனித கஃபா மற்றும் மஸ்ஜித் நபவி புனிதப் பள்ளிகள் பற்றிய விபரங்களை கொண்டிருக்கும். இதன்மூலம் சமய, நாகரீகம் மற்றும் பொருளாதார விஷயங்களை எடுத்துச் சொல்ல முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More »

மக்கா-மதினா அதிவேக நவீன இரயில் திட்டம்

மக்கா-மதினா அதிவேக இரயில் போக்குவரத்து திட்டத்திற்கு சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாஹ் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஹஜ் மற்றும் உம்ரா புனிதப் பயணங்களில் புதிய வசதியை ஏற்படுத்தித் தரும் இத்திட்டத்தின் மதிப்பு சுமார் 20 பில்லியன் சவுதி ரியால் (சுமார் 5.33 பில்லியன் அமெரிக்க டாலர்) ஆகும். இப்புதிய திட்டம் தரும் வசதியின்படி, மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய அதி நவீன இரயிலில், 30 நிமிடத்தில் மக்காவிலிருந்து ஜித்தாவிற்கும், 2 …

Read More »