-எழுதியவர்: மெளலவி எம். எஸ். எம். இம்தியாஸ் யூசுப் ஸலஃபி-
உலமாக்கள் என்போர் மார்க்கத்தை நன்கு கற்றறிந்தவர்கள். அதன் அடிப்படை உசூல்களை படித்தவர்கள். மக்களை நேர்வழியில் நடாத்துபவர்கள். இறையச்சத்தைத் தவிர வேறெதனையும் அணிகளன்களாக கொள்ளாதவர் கள். சத்தியத்தை சத்தியமாகவும் அசத் தியத்தை அசத்தியமாகவும் காட்ட வேண்டியவர்கள். அல்லாஹ் ஒருவனைத் தவிர மற்ற எவருக்கும் அஞ்சாத நிலையில் மார்க்கம் சொல்லக் கடமைப்பட்டவர்கள். இத்தகைய உலமாக்கள் இருக்கும் காலமெல்லாம் மக்களின் வாழ்வு பாக்கியம் பொருந்திய தாகவே காணப்படும்.
உலமாக்கள் குறைந்து செல்வது வழிகேட்டின் வாயல்கள் திறக்கப்பட்டு விடும் என்பது நிதர்சனமான உண்மை. அதுபோல் உலமாக்கள் உண்மையை உரத்துச் சொல்லாதபோதும் மக்கள் வழிகேட்டில் வீழ்ந்து விடுவர் என்பதும் உண்மை.எனவே மார்க்க அறிவின் வழிகாட்டலில் மக்களை கொண்டு செல்வது உலமாக்களின் தார்மீகப் பொறுப்பாகும்.
துரதிஷ்டவசமாக இரண்டு வகையான ஆபத்தான போக்கை சமூகத்தில் காண்கின்றோம்
- ஒன்று உலமாக்கள் தங்களுக்கென கூட்டத்தை உருவாக்குவது.
- இரண்டு பாமரனை உலமாவாக ஆக்குவது.
இந்த இரண்டுமே சமூக த்தை நாசப்படுத்தும்
உலமாக்கள் தங்களுக்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தை மக்களுக்கு நேர்வழியை முன்வைக்க பயன்படுத்த வேண்டுமே தவிர போகிற இடத்தில் தனக்குப் பின் ரசிகர்களை அபிமானிகளை உருவாக்கும் பணியினை செய்யக் கூடாது. பொதுமக்களை பந்தாடுவதோ அல்லது பொதுமக்களை வைத்து தனக்குப் பின்னால் அணி திரட்டுவதோ உலமாக்களின் பணியல்ல. சினிமா நாயகர்கள் போல் உலமாக்களுக்கும் ரசிகர் மன்றம் அமைக்கும் நிலையை உருவாக்கிட கூடாது. இந்த போக்கு நாளடைவில் தனிமனித வழிபாட்டுக்கு இட்டுச் செல்லும்.
அந்த உலமாவை அழைத்தால் மக்கள் அதிகமாக வருவார்கள். அவரு டைய பயான் சீடிக்கள் நிறைய விற்பனையாகும் எனும் கோணத்திலே இன்று மார்க்க பயான் நிகழ்ச்சி மற்றும் குத்பாக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. காரணம் மார்க்கம் பற்றிய அடிப்படை அறிவு இல்லாத பாமரர்கள் இன்று பயான் நிகழ்ச்சிக்கு பொறுப்புக்குரியவர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
நாளடைவில் இதே பாமரர்கள் உலமாக்களை வழிநடாத்தக் கூடியவர்களாகவும் உலமாக்களை தீர்மானிக்கக் கூடியவராகவும் மாறிவிடுகிறார்கள். இந்நிலை தோன்றும்போது பாமரர்கள் தயாரிக்கும் தலைப்புக்கு அல்லது கட் டளையிடும் தலைப்புக்கு உலமாக்கள் பேசி விட்டு போக வேண்டி வரும். அதாவது மக்களுக்குத் தேவையான வழிகாட்டலை வழங்கிடும் பொறுப்பிலி ருந்து நீங்கி, மக்களின் ரசனைகளுக்குப் பதிலளிக்க வேண்டிய பொறுப்புக்கு இந்த உலமாக்கள் மாறிவிடுவர். சாதாரண ஒருமனிதனை பெயர் கூறி அழைப்பது போல் உலமாக்கள் பெயர் சொல்லி அழைக்கப்படுகிறார்கள். இது மிகவும் ஆபத்தான போக்கு.
அடுத்ததாக மார்க்கம் பற்றி அடிப்படை அறிவை (உசூலை) படிக்காத ஆனால் பேச்சாற்றல் உள்ள பாமரர்கள் குத்பா மேடையை ஆதிக்கம் செலுத்தும் ஆபத்தான போக்கு உருவாகி வருகிறது. ஒரு பயான் நிகழ்ச்சியின் துண்டுப் பிரசுரத்தில் படித்துப் பட்டம் பெற்ற ஒரு ஆலிமின் பெயரை எழுதும் போது அவருடைய பெயருக்கு முன்னால் மவ்லவி என்று குறிப்பிடப்பட்டி ருந்தது. மவ்லவிக்குப் படிக்காத மார்க்க அறிவில் தேர்ச்சியில்லாத ஒரு பாமர னின் பெயர் எழுதும்போது அஷ்ஷெய்க் என்று எழுதப்பட்டிருந்தது. இந்த பாமரன் பேச்சாற்றல் உள்ளவர் என்பதற்காகவும் அவருடைய பேச்சுக்கு மக்கள் வருகிறார்கள் என்பதற்குமே இந்த ஷைய்க் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது.
அஷ்ஷெய்க் என்றால் என்ன? அப்பட்டம் ஏன் வழங்கப்படுகிறது? யாருக்கு வழங்கப்படுகிறது அதற்கு தகுதியானவர்கள் யார்? என்பது பாமரனுக்கும் தெரியாது. பட்டத்தை சூட்டிக் கொள்ளும் அந்த மனிதனுக்கும் தெரியாது. யாரை எங்கே வைப்பது என்று யாருக் கும் தெரியல்ல.
குத்பா மிம்பர் என்பது பேச்சாற்றலை வெளிப்படுத்தும் இடமல்ல. மக்களுக்கு மார்க்கதின் வழிகாட்டல்களை முன்வைக்கும் இடம். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண்பிக்கும் இடம் மார்க்கம் படித்த தகுதியுள்ள உலமாக்களுக்கு பதிலாக பாமரர்களைக் கொண்டு இந்த மிம்பர் வழி நடாத்தப்படுமானால் நிச்சயமாக அது அழிவுக்கே இட்டுச் செல்லும்.
பேச்சாற்றலை வைத்து மிம்மபரை தீர்மானிப்பதானால் பாடசாலைகளில் படிப்பித்து கொடுக்கும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் அஷ்ஷெய்க் பட்டம் கொடுத்து ஒவ்வொரு ஜூம்ஆவுக்கும் மிம்பரில் ஏற்றிவிடலாம்.
தலைவலிக்கு பனடொல் குடித்தால் சரிவரும் என்று சொல்பவர் எல்லாம் படித்த வைத்தியரைப் போன்றவர் என்று சொன்னால் எப்படி முட்டாள் தனமோ அது போல் தான் இதுவும் உள்ளது. உலக அழிவின் அடையாளமாக அறிவீனர்களை மக்கள் தங்களது தலைவர்களாக எடுத்துக் கொள்வார்கள் என்ற நபிமொழிக்கேற்ப மார்க்கம் படிக்காதவர்களாக அஷ் ஷெய்க் பட்டத்துடன் வலம் வரும் காட்சியை பார்க்கிறோம்.
இந்த அபாயத்தை உலமாக்கள் தான் மாற்றியமைக்க வேண்டும். மக்களுக்கு கொடுக்க வேண்டிய அறிவின் தேவையையும் அவசியத்தையும் அறிவை படிக்க வேண்டிய வழிகாட்டலையும் உலமாக்களே முன்னின்று செய்ய வேண்டும். தனக்குப் பின் கூட்டத்தை உருவாக்குவது உலமாவின் பணியல்ல என்பதைப் புரிந்துகொண்டு உலமாக்களின் நிகழ்ச்சிகளை உலமாக்கள்தான் முடிவுசெய்ய வேண்டும். முன்னின்று நடத்த வேண்டும்.
உலமாக்கள் குறைந்து செல்வதும். மக்கள் மடையர்களை தலைவர்களாக எடுத்துக் கொள்வதும் உலக அழிவின் அடையாளமாக நபி ஸல்) அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள். ஒவ்வொரு வருக்கும் அதற்குரிய தகுதியை வழங்கி அதற்குரிய இடத்தில் வைக்க வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் சுட்டிக் காட்டுகிறது.
அஸ்ஸலாமு அழைக்கும், நீண்ட நாளக இருந்த வருத்தம் இன்று நீங்கிய உணர்வு ஏற்ப்பட்டது மிகவும் மகிழ்ச்சி, சரியான நேரத்தில் சரியான தலைப்பில் கட்டுரை எழுதிய ஆசிரியருக்கு நன்றி!! தலைப்பும் அழகு!!!