Featured Posts

இபாதத் ஏற்படுத்தும் உளத்தூய்மை (தஸ்கியா)

ரமளான் மாத இபாதத்களை தொடர்புபடுத்தி ‘இபாதத் ஏற்படுத்தும் உளத்தூய்மை (தஸ்கியா)’ என்ற தலைப்பின் கீழ் ரமளான் தொடர்பான பல்வேறு செய்திகளை தொகுத்து வழங்குகின்றார் ஆசிரியர் முஜாஹித் இப்னு ரஸீன்.

1. ரமளான் தொடர்பான தவறான செய்திகள்:
• ரமளான் என்று சொல்லாமல் ரமளான் மாதம் என்று தான் சொல்லவேண்டும்? இது சரியா? இந்த செய்தி ஆதாரப்பூர்வமானதா?
• ரமளான் ஏழைகளின் பசியை உணர்கின்ற மாதமா? இந்த செய்தி சரியானதா?
• ரமளான் மாதம் உணவு மாதம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்ற செய்தி ஊடகங்கள் பின்னனி என்ன? இதில் நாம் என்ன செய்ய வேண்டும்?
• நோன்பாளியின் தூக்கம் இபாதத்தா? இந்த செய்தியின் தரம் பற்றிய விளக்கம்.
• ‘லைலத்துல் கதர்’ இரவை கணக்குபோட்ட பார்த்து இபாதத்-களை கணக்கீடு செய்யலாமா? முன்சென்ற அறிஞர்கள் இவ்வாறு செய்துள்ளார்களா? இந்த செய்தியை எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும்.

2. ரமளான் மாதம் சிறப்பு அடைவது எதனால்? ஏன்?

3. ரமளானில் கூடுதல் கவனம் செலுத்துவதற்கான காரணம் என்ன?
• தனிக்கவனத்துடன் இபாதத் செய்ய வேண்டுமா? அப்படி செய்வது நபிவழியா?
• ரமளானில் நபி (ஸல்) அவர்களின் இபாதத் எவ்வாறு இருந்தது
• நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருந்தார்களா? ஒரு வருடம் இஃதிகாப் இருக்காமல் விட்டு விட்டார்கள் ஏன்? அது பற்றிய விளக்கம்
• ரமளானில் உம்றா செய்வதின் சிறப்பு என்ன? ஏன்?

4. ரமளானின் நோக்கம் என்ன?
• ரமளானில் தஸ்கியா செய்வது எப்படி?
• குத்வா என்றால் என்ன?
• அப்துல்லாஹ் இப்னு முபாரக் என்ற பேரறிஞ்ஞர் தனது மாணவருக்கு தர்மம் பற்றிய போதித்தது என்ன? அதிலிருந்து பெரும் படிப்பினை என்ன?
• ஒருவர் ஒரு மார்க்க அறிஞரிடம் (ஆசிரியர்) நெருங்கிய தொடர்புடன் இருப்பதால் மார்க்க விடங்களில் என்ன பலன்கள் ஏற்படும்?
• தஸ்கியா என்றால் என்ன?

அல்கோபர் (ஹிதாயா) மற்றும் தஹ்ரான் சிராஜ் இஸ்லாமிய அழைப்பகங்கள் இணைந்து வழங்கிய
ரமளானை வரவேற்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி

நாள்: 12-06-2015, வெள்ளிக்கிழமை அஸர் முதல் இஷா வரை
இடம்: ஜாமியா புஹாரி பள்ளி வளாகம், அல் அக்ரபியா, அல்-கோபார், சவூதி அரேபியா

தலைப்பு: இபாதத் ஏற்படுத்தும் உளத்தூய்மை (தஸ்கியா)
வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்
(அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் – சவூதி அரேபியா)

வீடியோ மற்றும் படத்தொகுப்பு
தென்காசி SA ஸித்திக்

Download mp3 Audio
[audio:http://www.mediafire.com/download/7wsu78ehs7o6vbl/இபாதத்_ஏற்படுத்தும்_உளத்தூய்மை-தஸ்கியா-Mujahid.mp3]

One comment

  1. Ma shaa Allah nalla pathivu eppothakku etra pathivu endrum sirantha pathivugalai tharum Islam kalvikku vazthukkal pala evatrirkkaga ulaikkum anaivarukkakavum Dua seikiren

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *