Featured Posts

“மினாவின் உயிர்ச்சேதம்” தீமூட்டும் ஈரானும் ஒத்தூதும் இக்வானும்

– மஸ்ஊத் அப்துர்ரஊப் & முஜாஹித் ரஸீன் –
இந்தக் கட்டுரை ஷீஆக்களாலும் இக்வான்களாலும் ஸஊதி அரசு மீது பழி சுமத்தப்படும் மினா விபத்து பற்றி சற்று விரிவாக அலசுகிறது. நம் அனைவரினதும் நெஞ்சை உருக்கிய இந்த விபத்து ஸஊதியின் உள் நாட்டு வெளிநாட்டு எதிரிகளால் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது.

ஷீயாக்களும் ஒத்தூதும் வகையில் இக்வான்களும் ஸஊதியின் நிர்வாகக் கோளாறுக்கு பெரும் எடுத்துக்காட்டாக இதனை முன்வைக்கின்றனர். உஸ்தாத் மன்ஸூன் அவர்களும் கற்பனைகளை கட்டுரையாக்கியுள்ளார்.

பெருந்தொகை மக்கள் கூடக் கூடிய இடங்களில் எவ்வளவு திறமையான நிர்வாகம் இருந்தாலும் ஒரு வருடம் இல்லாவிட்டால் இன்னொரு வருடம் இது போன்ற ஏராளமான விபத்துக்கள் நடந்தே இருக்கின்றன. ஸஊதி பல தரப்பு எதிரிகளால் இலக்குவைக்கப்பட்டுள்ளதால் இது விளம்பரமாக்கப்பட்டிருக்கிறது.

நெரிசல் மரணங்கள்
உலக அளவில் நடைபெற்ற விபத்துக்களில் இதுவே முதலாவதா? என்று நாங்கள் கேட்கின்றோம். 2013 அக்டோபர் இந்தியாவில் இந்து யாத்திரிகர்கள் தமது கோவிலுக்கு செல்ல பாலத்தில் பயணித்தபோது ஏற்பட்ட விபத்தில் 109 பேர் மரணித்து , 133 பேர் காயமடைந்தனர்.

ஜூலை 10, 2013 பங்களாதேஷில் திடீரென ஏற்பட்ட விபத்தில் 22 பேர் மரணித்தனர்.

ஏன் மிக தூரம் போக வேண்டும்! 2005 ஒக்டோபர் மாதம் ஈரானிய ஷீயாக்களும் இராக் ஷீயாக்களும் மூஸா அல் காலிம் நினைவு தினத்திற்காக பெருந்திரளாக செல்லும் வழியில் ஒரு வதந்தி பரப்பப்பட்டதால் பக்தாத் ஜிஸ்ருல் அஇம்மா பாலத்தில் 1000 க்கணக்கானோர் உயிரழந்தார்கள்.

இது போன்ற நூற்றுக் கணக்கான நிகழ்வுகள் உலகந்தோறும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. பின்வரும் விகிபீடியா இணைப்பில் அத்தனை நிகழ்வுகளையும் விளக்கமாக வாசிக்கலாம்

https://en.wikipedia.org/wiki/List_of_human_stampedes

south china morning post இணையதளம் உலகத்தின் நொிசல் மரணங்களை புகைப்படங்களுடன் பட்டியலிட்டுள்ளன.

http://www.scmp.com/news/world/article/1672652/factbox-worst-stampedes-21st-century

Mina_Overview

ஆயிரக்கணக்கில் மக்கள் ஒன்று சேரும் தருணங்களில் இது போன்று திடீர் விபத்துக்கள் சம்பவிக்கின்றன. ஒரே இடத்தில் 2.5 மில்லியன் மக்கள் ஒன்று சேரும் போது இது போன்ற திடீர் விபத்து ஏற்படாதா? இது போன்ற திடீர் விபத்துக்கள் நிர்வாக ரீதியான பலவீனத்தால் ஏற்படுபவை என்று ஒரேயடியாக சொல்லிவிட முடியாது. அப்படியிருக்க ஸஊதியை ஒரேயடியாக இஸ்லாத்திற்கெதிரானவர்களுடன் சேர்ந்து இக்வான்கள் விமாிசிக்க காரணம் என்ன? திடீர் விபத்துக்கள் உலகில் அதிகமாக ஏற்படுகின்றன. ஆனால் சஊதியில் அவை நிகழும்போது நிலைமை தலைகீழாக மாறிவிடுகிறது.

haj security

ஸஊதி துருக்கி உறவில் விாிசல் ஏற்படுத்தும் முயற்சிகள்
மினா விவகாரம் தொடர்பான கருத்துக்கள் மூலம் ஸஊதிக்கும் துருக்கிக்கும் இடயே முறுகலை உண்டாக்கி கலங்கிய நீரில் சிலர் மீன் பிடிக்க முயல்கின்றனர் . மினா விபத்து தொடர்பில் துருக்கி வெளியிட்ட கருத்தை சஊதிக்கு எதிரான துருக்கியின் கண்டனம் போன்று சித்தரிக்க விளைகின்றனர். ஆனால் அதிபர் உா்துவான் தனது தெளிவான நிலைப்பாட்டை வெளியிட்டவுடன் குளிர்காய நினைத்தவர்களுக்கு சுட்டது.

“சஊதி அரசை நான் நன்கறிவேன். ஹஜ்ஜுக்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதில் சிறந்த கவனமெடுக்கும் நாடது” என்பதே மினா விபத்து பற்றி உர்துவான் சொன்ன கருத்து. இது பற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில் “ஹஜ் ஏற்பாடுகளை விமர்சிக்க எவருக்கும் உரிமை இல்லை. சஊதி அரசு அதன் கடமைகளை பரிபூரணமாக செய்கிறது என்பதை நான் உறுதி செய்கிறேன்” என்று கூறியுள்ளார். உர்துவான் அவர்களின் இந்த கருத்துக்கள் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளின் புரிந்துணர்வுகளையும் பிரதிபலிப்பவையாக அமைந்துள்ளன.

jamarat1

ஹரம் விஸ்தாிப்புக்குச் செலவிடும் பணத்தை மினாவின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த பயன்படுத்துமாறு ஸஊதி அரசுக்கு உபதேசித்து பொிய அவதானி என்ற தோற்றத்தை ஏற்படுத்தக் கற்பனைக் கதையெழுதும் உஸ்தாத் மன்ஸூர் எங்கே! உஸ்தாத் மன்ஸூர் புகழ்ந்தெழுதும் அதிபர் உர்துவானின் பார்வையெங்கே!. முர்ஸிக்கு உர்துவானின் நிதானதமான ஆட்சியில் பாடம் இருப்பதாக உஸ்தாத் மன்ஸூர் முர்ஸிக்கு அரசியல் சொல்லிக்கொடுத்தார். துருக்கியும் ஸஊதியும் கத்தாரும் பாகிஸ்தானும் கைகோர்ப்பதை முதலில் வெறுப்பது ஷீயாக்கள் ஒத்தூதுவது இக்வான்கள். இல்லையென்றால் மினா விபத்தை அரசியலாக்கியிருப்பார்களா?

ஸஊதியின் ஹஜ் ஏற்பாடுகள் பற்றிய விமாிசனத்திற்கான ஆதாரங்களை உஸ்தாத் மன்ஸூர் முன்வைக்கத்தயாரா? நாம் கருத்ததாடத் தயார். இல்லையெனில் நீங்கள் அவதானி என்ற பெயரெடுக்க எழுதிய கற்பனைக்கதை என்பது வெள்ளிடை மழை.

மினா விவகாரம் பற்றிய துருக்கியின் கருத்துகள் சஊதியை குறை கூறுவதாக அமயவில்லை. மாறாக எதிர்காலத்தில் இவ்வாறு ஏற்படாமலிருக்க கூடுதல் கவனம் எடுக்கச் சொல்வதாகவே அது அமைந்துள்ளன. இந்த பாணியிலான கருத்துக்களை யாரும் குறையாகப் பார்க்கமாட்டார்கள்.

ஈரானுடன் சேர்ந்து துருக்கியை சஊதிக்கு எதிரானதாக சித்தரிப்பவர்களுக்கு சீர்திருத்தம் இலக்கே கிடையாது. ஈரானைப் போன்று சஊதியை ஆக்கிரமிப்பதற்கான எந்த திட்டங்களும் துருக்கிக்குக் கிடையாது என்பதுடன் ஈரானும் துருக்கியும் ஒருபோதும் ஒரே அணியில் இடம் பெறாது என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கத்தாகும்.

விபத்தா? இலக்கா?
மக்கள் பெருந்திரளாக கூடுமிடங்களில் இது போன்ற விபத்துகள் இயல்பாயினும் இலக்குவைத்து இது போன்ற நிகழ்வுகள் ஏற்படுத்தப்பட்டால் அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும்.

ஹஜ் காலங்களில் இது போன்ற மோசமான விளைவுகளை இலக்குவைத்ததில் ஈரான்தான் முதலிடத்தில் உள்ளது. ஹஜ் காலங்களில் வன்முறை செய்வதில் அந்நாடு பிரபலமானது என்பதற்கு கடந்த கால வரலாறு சாட்சி. 1987 ளில் நடந்ததை நாம் மறக்கமாட்டோம். ஈரானியர்களின் அத்துமீறல்களால் வன்முறைகளால் பல ஹாஜிகள் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். சொத்திழப்புகளும் ஏற்பட்டன.

ஹஜ்ஜில் நாசகார வேளைகள் செய்ததாக கராமிதாக்கள் வராலற்றைத் தொட்டுச் செல்கிறார் உஸ்தாத் மன்ஸூர். கராமிதாக்கள் ஷீயாப் பிரிவினர் என்பதை குறிப்பிடாமல் போனது உஸ்தாதின் திறமை.

சஊதிக்கு எதிரான ஈரானிய விரோதம் மிகத் தெளிவானது. இவ்வாறான தருணங்களிலே ஈரானிய தலைமையிலிருந்து நச்சுக்கருத்துக்கள் அதிகமாக வெளியாகும். இவர்களின் பிரதான நோக்கம் இரு புனிதத் தளங்களை பரிபாலனம் செய்யும் சஊதியிடமிருந்து கைப்பற்றி ஏனைய முஸ்லிம் நாடுகளை உள்ளடக்கிய ஒரு பொது நிறுவனம் ஒன்றின் ஊடாக அவற்றை பரிபாலிப்பதாகும். இத்தருணத்தில் ஈரானும் மிகப்பெரும் பங்கேற்கும் என்பது இங்கே சுட்டிக் காட்டுவதற்கு உரியதாகும். இத்திட்டம் தொடர்பில் ஈரானின் தலைமை மிகத் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளது.

எகிப்து வைத்தியர் அப்துல்ஹமீத் பவ்ஸி “இந்த நிகழ்வில் மரணித்தவா்களை வைத்தியப் பரிசோதனைக்குள்ளாக்குங்கள். பலர் தமது விபரங்களை மறக்கும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நெரிசல் விபத்துகளின் வரலாற்றிலேயே காண முடியாத ஒன்று. நச்சுவாயு அடிக்கப்பட்டுள்ளதாக நானும் சிகிச்சை அளித்த எனது சக வைத்தியர்களும் இதனை சந்தேகிக்கிறோம். என்று தெரிவித்துள்ளார்.

மினாவில் நிகழ்வின் போது இருந்த ஹாஜிகளின் நேரடி சாட்சியங்கள் இதனை இன்னும் உறுதிப்படுத்துகின்றன. இது இன்னும் உறுதிப்படுத்தப்படுமாயின். இது விபத்தா இலக்கா என்பதும் திரைக்குப்பின்னால் இயக்கியவர்கள் யார் என்பதும் நிரூபணமாகிவிடும்.

யா அல்லாஹ்! மினாவில் ஷஹீதானவர்களின் பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தை கொடுத்தருள். இந்த உயிரிழப்புகளுக்குப் பின்னால் உள்ள சதிகாரர்களை அடையாளங்களாட்டு. அவர்களுக்குறிய தண்டனையை வழங்கு. அறிவீனர்களுக்கு நேர்வழி காட்டு. எமது பாவங்களை மன்னித்து அருள்புரி!

(குறிப்பு-ஸஊதி அரசு செய்யம் ஹஜ் ஏற்பாடுகள் ஒழுங்குகள் நவீன முன்னெடுப்புக்கள் பற்றி இன்னொரு கட்டுரையில் தெளிவுபடுத்தப்படும் இன்ஷா அல்லாஹ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *