Featured Posts

உமர் (ரலி) அவர்களின் மரணத்தின் போது அலி (ரலி) அவர்கள் ஆற்றிய இரங்கல் உரை

-இம்தியாஸ் யூசுப் ஸலபி-

உமரே! உயரிய நற்செயல்களுடன் நான் அல்லாஹ்வை சந்திப்பதற்கு முன்மாதிரியாக நான் ஏற்கத்தக்கவர் எவரும் உங்களுக்குப் பின்னால் இல்லை.

அலி (ரலி) அவர்களுக்கும் உமர்(ரலி) அவர்களுக்கும் இடையில் நெருங்கிய உறவும் அன்பும் பாசமும் தாராளமாக இருந்தது. உமர்(ரலி) அவர்கள் அலி(ரலி) அவர்களின் மருமகனாவார். உம்முகுல்சும் என்ற மகளை உமர்(ரலி) அவர்களுக்கு அலி(ரலி) அவர்கள் மணமுடித்து கொடுக்கும் அளவுக்கு அவர்களுக்கிடையே உறவு மேலோங்கிக் காணப்பட்டது.

யூத சிந்தனையில் வளர்ச்சிப் பெற்ற ஷீஆக்களால் மட்டுமே இந்த உண்மையை ஜீரணிக்க முடியவில்லை. அலி(ரலி) அவர்களின் பரம எதிரியாக உமர்(ரலி) அவர்களை ஷீஆக்கள் வர்ணிப்பார்கள். உலகில் எந்த மனிதனும் தனது உயிர் போனாலும் தனது மகளை ஒரு எதிரிக்கு மண முடித்து கொடுக்க மாட்டான். அலி(ரலி) அவர்கள் உமரை முன்மாதிரி மிக்க ஒரு முஸ்லிமாகக் கண்டதனால் தனது மகளை மணமுடித்து கொடுப்பதில் சந்தோசம் கண்டார்கள்.

பொய்யும் புரட்டும் வஞ்சகமும் நிறைந்த ஷீஆக்கள் இந்த உண்மைகளை மறைத்தே அப்பாவி மக்களை ஏமாற்றி வருகின்றார்கள். அஹ்லுல்பைத்களை நேசிக்கின்றோம் என்ற கோஷத்தில் இவர்கள் அஹ்லுல்பைத்களுக்கு செய்த அநியாயங்கள் அளப்பெரியவை. இதனை அலி(ரலி) அவர்கள் ஹஸன் ஹூசைன் (ரலி) அவர்கள் பல சந்தரப்பங்களில் எடுத்துக் காட்டியுள்ளார்கள். ஷீஆவின் முக மூடியை கிழித்துக் காட்டும் இன்னுமொரு சந்தரப்பமே உமர்(ரலி) அவர்களின் வபாத்தின் போது அலி(ரலி)அவர்கள் ஆற்றிய இரங்கல் உரை. அதாவது மாமனார் மருமகனுக்காக ஆற்றிய இரங்கல் உரை. இது போன்று யாரும் கூறியிருக்கமாட்டார்கள்.

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

உமர்(ரலி) அவர்கள் (இறந்தவுடன்) கட்டிலில் வைக்கப்பட்டார்கள். அப்போது மக்கள் அவரைச் சூழ சூழ்நது கொண்டு பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். அவரது ஜனாஸா (மையத்து) (அடக்கம் செய்வதற்கு) எடுக்கப்படுவதற்கு முன்பாக அவருக்காக ஜனாஸா தொழுகை தொழலானார்கள். அப்போது நான் அவர்களிடையே இருந்தேன் என்தோளைப் பிடித்துக் கொண்டிருந்த ஒரு மனிதர் தான் என்னை திடுக்கிடச் செய்தார் (யாரென்று திரும்பிப் பார்த்த போது) அது அலி இப்னு அபீ தாலிப்(ரலி) அவர்கள் தாம். அவர்கள் (உமர்(ரலி) அவர்களின் ஜனாஸாவைப் பார்த்து) உமருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக என்று பிரார்த்தித்து விட்டு (உமரே) உயரிய நற்செயல்களுடன் நான் அல்லாஹ்வை சந்திப்பதற்கு முன்மாதிரியாக நான் ஏற்கத்தக்கவர் எவரும் உங்களுக்குப் பின்னால் இல்லை. (நீங்கள் தாம் அத்தகைய மனிதர்) அல்லாஹ்வின் மீது ஆணையாக. அல்லாஹ் உங்களை உங்கள் தோழர்களான – நபி(ஸல்) அவர்கள் மற்றும் அபூபக்கர் அவர்களின் மண்ணறைக்கு அருகில் தான் அடக்கம் செய்வான் என்று எண்ணியிருந்தேன். காரணம் நபி(ஸல்) அவர்கள் “நானும் அபூபக்கரும் உமரும் போனோம்”, “நானும் அபூபக்கரும் உமரும் நுழைந்தோம்”, “நானும் அபூபக்கரும் உமரும் புறப்பட்டோம்” என்று சொல்வதை நிறைய கேட்டிருக்கிறேன் என கூறினார்கள். (நூல்: புகாரி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *