நபி (ஸல்) கட்டளையும் நபித்தோழர்களின் கட்டுப்படுதலும்
ஹாஜா முஹ்யித்தீன் ஃபிர்தவ்ஸி
பேராசிரியர், ஜாமிஆ ஃபிர்தவ்ஸியா அரபிக்கல்லூரி
அகிலத்தின் அருட்கொடை முஹம்மது (ஸல்) அவர்கள் மக்காவில் பிறந்து, தன்னுடைய அக, புற வாழ்க்கையில் பண்பட்டவராக,ஒழுக்கசீலராக விளங்கி, மற்றவர்களால் நம்பிக்கைகுரியவர், வாய்மையாளர் எனப் புகழப்பட்டு, தன் சமுதாயம் தறிகெட்டு படைத்தவனை விட்டுவிட்டு கண்டதையும் வணங்கி, சீரழிவில் இருப்பதைக் கண்டு மனம் வெதும்பி, சமுதாய சீர்திருத்தத்திற்காக தனிமையில் பல நாட்களாக ஹிரா குகையில் இறை தியானத்தில் ஈடுபட்டு அதன் பிரதிபலனாக தன்னுடைய நாற்பதாவது வயதில் இறைவனால் நபியாக ஆக்கப்பட்டு, மக்காவில் பதிமூன்று ஆண்டுகள், மதினாவில் பத்தாண்டுகள் ஆக சுமார் 23 ஆண்டு காலம் நபியாக இருந்து உலகில் யாராலும் செய்ய முடியாத, சாதிக்க முடியாத, ஆற்ற முடியாத, பல அளப்பரிய சேவைகள் ஆற்றி, இந்த அகிலத்தாரின் நன்மைகளுக்காகவே வாழ்ந்து, தனக்காக மக்கள் தங்களின் இன்னுயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கும் அளவிற்கு ஒரு மக்கள் சக்தியை உருவாக்கி, உலகம் அழியும் நாள் வரை அவர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்துச் சென்றிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட முஹம்மது (ஸல்)அவர்கள் மக்காவில் தமது ஏகத்துவப் பிரச்சாரத்தை துவங்கிய காலத்திலும் சரி மதீனாவில் இஸ்லாமிய அரசாங்கத்தை நிலை நிறுத்த பாடுபட்ட காலத்திலும் சரி நபி (ஸல்) அவர்களுக்கு பக்க பலமாகவும், உறுதுணையாகவும், அரணாகவும் இருந்து தங்களின் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்த உத்தமர்களே ஸஹாபா என்று சொல்லப்படக்கூடிய நபித்தோழர்கள்.
அவர்களைப் பற்றியும் அவர்கள் இந்த மார்க்கத்தை மேலோங்கச் செய்வதற்காக பட்ட தியாகங்கள் பற்றியும் அவர்களின் குணநலன்கள் பற்றியும் இறைவனின் வேதமான அல்குர்ஆனும் அல்குர்ஆனுக்கு விளக்கமாக அமைந்த நபிமொழிகளும் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
இவ்வுலகில் யாரையும் தெள்ளத்தெளிவாக மூஃமின் என்றோ இறையச்சம் உடையவர் என்றோ உளத்தூய்மை உடையவர் என்றோ சொர்க்கவாசி என்றோ கூறமுடியுமா? யாருக்கும் நம்மால் நற்சான்று வழங்கமுடியாது
ஆனால் நபித்தோழர்களை மூஃமின்கள் என்றும் இறையச்சம் உடையவர்கள் என்றும் உளத்தூய்மை உடையவர்கள் என்றும் சொர்க்கவாசி என்றும் தெள்ளத்தெளிவாக அடித்துச்சொல்லலாம்.
ஏனென்றால் படைத்த இரட்சகன் அல்லாஹ்வே அவர்களை இவ்வாறு பாராட்டுகிறான். பின்வரும் இறைவசனங்கள் இதை தெளிவுபடுத்துகின்றன.
நபித்தோழர்களுக்கு அல்லாஹ் வழங்கும் நற்சான்றுகள்.. .. தொடர்ந்து மின்னனு நூலில் வாசிக்க CLICK HERE