Featured Posts

வணக்கத்திற்கும் வழக்கத்திற்கும் மத்தியில் நபி (ஸல்) அவர்களின் செயற்பாடுகள் (eBook)

ஆக்கம்: எம். அஹ்மத் (அப்பாஸி)
வெளியீடு: இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி – காலி – இலங்கை

புகழனைத்தும் படைத்தவன் அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும் ஸலாமும் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார்கள், தோழர்கள், மறுமை வரை அவர்களை அழகிய முறையில் துயரும் அனைவர் மீதும் உண்டாவதாக.
இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு இறைவன் அருளிய இஸ்லாம் இரு முக்கிய பகுதிகளைக் கொண்டது. 1. அல்குர்ஆன். 2. ஹதீஸ். இவ்விரண்டுமே இஸ்லாத்தின் பிரதான மூலாதாரங்களாகக் கருதப்படுகின்றன.

ஹதீஸின் பிரதான கூறுகள்:

இந்த ஹதீஸ் மூன்று விடயங்களை உள்ளடக்குகின்றது: நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் (அனுமதி). இன்னும் சில அறிஞர்கள் மேற்கண்ட மூன்றுடன் நபி (ஸல்) அவர்களுடைய குணங்கள் மற்றும் அங்க அடையாளங்களையும் ஹதீஸின் தனிக்கூறுகளாக அடையாளப் படுத்தியுள்ளனர்.

(1) நபி (ஸல்) அவர்களின் சொல்:

நபி (ஸல்) அவர்களுடைய கூற்றுக்களே ஹதீஸில் பிரதான இடம் வகிக்கின்றது. அவர்களின் கூற்று பின்வரும் மூன்றிலொன்றாகத்தான் பெரும்பாலும் இருப்பதை நாம் அவதானிக்கலாம்.

1. ஏவல்: இது ஒன்றோ கடமையானதாக (بجاو அல்லது ضرف) அல்லது விரும்பத்தக்கதாக (ةنس அல்லது بحتسم) இருக்கும். அதன் தரத்திற்கேற்ப அதனை அமுல்படுத்துவது அவசியமாகும். ‘ஒரு பேரீத்தம்பழத்துண்டை தர்மம் செய்தாயினும் நீங்கள் நரகத்தை அஞ்சிக் கொள்ளுங்கள்’ என்ற நபியவர்களின் கூற்றை ஏவலுக்கு உதாரணமாகக் கூறலாம்.

2. விலக்கல்: இது ஒன்றோ முற்றாகத் தடை செய்யப்பட்டதாக (مارح) இருக்கும். அல்லது வெறுக்கத்தக்கதாக (هوركم) இருக்கும். அதன் தரத்திற்கேற்ப தவிர்ந்து கொள்வது அவசியமாகும். ‘நீங்கள் ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்’ என்ற கூற்றை விலக்கலுக்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

3. தகவல்: இது மேற்கண்ட ஏவலாகவோ அல்லது விலக்கலாகவோ இல்லாமல், முற்காலத்தில் நடந்த, எதிர்காலத்தில் நடக்கவிருக்கின்ற, அல்லது வேறு ஏதாவது ஒரு தகவலாக இருக்கும்.

தொடர்ந்து வாசிக்க மின்னனு நூலை பார்வையிடவும்

நன்றி: இஸ்லாமிய அழைப்பு நிலையம் ரியாத் – சவூதி அரேபியா
மற்றும் Islamhouse

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *