நவீன உலகில் முஸ்லிம் பெருபாலானவர்கள், நாம் உண்டு நமது வேலையுண்டு என்று இயந்திர மயமான வாழ்வில் தமது பிள்ளைகளுக்கோ, தம்மை சார்ந்தவர்களுக்கு அல்லது தனது பொறுப்பிலுள்ளவர்களுக்கு இஸ்லாம் பற்றி போதிப்பது என்பது இல்லை என்று சொல்வதைவிட அதுபற்றிய சிந்திப்பது இல்லை என்று தான் கூற வேண்டும். ஒரு காலத்தில் பள்ளிவாசலில் அதிகாலையில் நடைபெறும் மக்தப் என்று சொல்லக்கூடிய சிறுவர் மதரஸாவில் போதிக்கபட்ட இஸ்லாமிய அடிப்படைகள் இன்றைய நிலைமை என்ன?
எத்தனை பெற்றோர்கள் தனது பிள்ளைகளை அனுப்பிவைக்கின்றனர்? அப்படியே அனுப்பிவைத்தாலும் ‘சீக்கிரம் அனுப்பிவையுங்கள் ஹஸரத் அவனுக்கு பரீட்சை இருக்கு’ என்ற குறுஞ்செய்தியுடன் பிள்ளை வருகின்றனர். இப்படியான நெருக்கடியான காலகட்டத்தில் சிறுவர் சிறுமியர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் அறிந்து கொள்ளும் இஸ்லாமிய அடிப்படை கொள்கை (அகீதாவை) ஆசிரியர் முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அவர்கள் மிக எளிமையான முறையில் விளக்கம் தருகின்றார். அனைவரும் குடும்பத்துடன் சிறு நேரம் (சுமார் ஒரு மணிநேரம் மட்டுமே) ஒதுக்கி இந்த வீடியோவை பார்வையிட்டு பயன்பெறுமாறு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த வீடியோ பதிவின் உள்ளடக்கம்:
அல்லாஹ்வை ஈமான் (நம்பிக்கை) கொள்ளல் (இது நான்கு வகையில் அமைந்தவை)
- இயற்கையில் (ஃபித்ர் அல்லாஹ்) இறைவன் உள்ளான்
- பகுத்தறிவன் மூலம்
- மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில்
- மனிதன் இவ்வுலகில் காணக்கூடிய அத்தாட்சியிலிருந்து
வானவர்கள் பற்றிய நம்பிக்கை கொள்ளுதல்: (இது நான்கு அம்சங்கள்)
- அல்லாஹ் இப்படியொரு படைப்பை
- அல்குர்ஆன் மற்றும் ஸுன்னாவில் வந்த பெயர்களுடன் வானவர்
- அவர்களுக்கான பணிகள்
- அல்லாஹ்-வுக்கு மாறுசெய்யாமல் கட்டுப்பட்டவர்கள்
வேதங்களை நம்புவது (இது நான்கு அம்சங்கள்)
- அல்லாஹ்விடமிருந்து இறக்கி அருளப்பட்டது பெயர் குறிப்பிட்டு வந்த வேதங்களை அந்த பெயருடன் நம்புவது
- வேதத்திலுள்ள செய்திகளை நம்பிக்கை கொள்ளவேண்டும்
- வேதத்தினை நடைமுறை செயல்வடிவம் கொள்ளவேண்டும்
- அல்-குர்ஆனை இறுதி வேதம் என நம்பவேண்டும்
இறைதூதர்களைப்பற்றிய நம்பிக்கை (இது நான்கு அம்சங்கள்)
- ஒவ்வொரு சமுதாயத்திற்கும் இறைதூதர்கள் வந்தார்கள்
- அல்-குர்ஆனில் பெயர்கள் கூறப்பட்ட இறைதூதர்களை அந்தபெயர்களுடன் நம்ப வேண்டும்
- இறைத்தூதர்கள் கொண்டு வந்த செய்திகளை நம்புவது
- இறைத்தூதர்கள் போதனைகளை நடைமுறைப்படுத்துவது
மறுமை நாள் பற்றிய நம்பிக்கை (மூன்று அம்சங்கள்)
- பர்ஸக் என்ற வாழ்க்கை
- மறுமை நாள் அன்று மரணத்தவர்கள் எழுப்படுவார்கள்
- சுவர்க்கம் மறும் நரகத்தினை நம்ப வேண்டும்
நன்மை தீமைகள் அல்லாஹ்வின் ஏற்பாட்டில் நடைபெறுகின்றது:
- அல்லாஹ் அனைத்தையும் பற்றிய முழுமையான அறிவு ரப்பிடம் உள்ளது
- உலகத்தில் நடைபெறக்கூடிய அனைத்தையும் மகத்துவமிக்க ஏட்டில் பதியப்பட்டுள்ளது
- உலகத்தில் அனைத்தும் ரப்புடைய ஏற்பாட்டில் தான் நடைபெறுகின்றன
- உலகத்தில் உள்ள அனைத்தும் அல்லாஹ்-வால் படைக்கப்பட்டது என நம்புதல்
தவறுகள்
- வஸீலா-வில் ஏற்படும் தவறுகள் (அனுமதிக்கப்பட்ட மற்றும் தடுக்கப்பட்டவைகள்)
- வஸீலா-வின் மூன்று அடிப்படைகள்
—————————————————————
தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும்
வாராந்திர பயான் நிகழ்ச்சி
இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC)
தம்மாம் – சவூதி அரபியா
நாள்: 29-09-2016
தலைப்பு: முதலில் கொள்கையில் தெளிவுபெறுவோம்!
வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம்
வீடியோ: தென்காசி SA ஸித்திக்
படத்தொகுப்பு: Islamkalvi Media Unit