Featured Posts

கலைச்சொல் விளக்கம் – ஸஹீஹுல் புகாரீ (ebook)

ரஹ்மத் பதிப்பகம் (ரஹ்மத் அறக்கட்டளை) சார்பில் வெளியிடப்பட்ட ஸஹீஹுல் புகாரியின் கலைச்சொல் விளக்கம் என்ற பகுதியை மாணவர்கள் மற்றும் கல்வியை தேடும் ஆர்வலர்கள் பயன்பெறும் வகையில் ஒரு வழிகாட்டி நூலக இதனை இஸ்லாம்கல்வி இணையதளத்தில் (www.islamkalvi.com) வெளியிடுகின்றோம்.

அகபா
மக்கா செல்லும் பாதையில் மினாவிற்கு அருகிலுள்ள ஓர் இடத்தின் பெயர். மதீனாவில் இஸ்லாம் பரவுவதற்கு முன், மதீனாவாசிகளில் சிலர் இந்த இடத்தில் இரு கட்டங்களாக நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் வழங்கிய உறுதி மொழியையே ‘பைஅத்துல் அகபா – அல் அகபா உறுதிப் பிரமாணம்; அல்லது அகபா உடன்படிக்கை’ என்பர்.

அகழ்ப் போர்
ஹிஜ்ரி 4-ஆம் ஆண்டு (கி.பி. 627) மதீனா நகர் மீது யூதர்கள் உள்பட அனைத்து அரபுக் குலத்தினரும் திரண்டு வந்து தொடுத்த போர். இதில் எதிரிகளை நகருக்குள் நுழைய விடாமலிருக்க அகழ்(கன்தக்) தோண்டப்பட்டது. இதையே ‘அஹ்ஸாப் (பல அணியினர் திரண்டுவந்த) போர்’ என்றும் கூறுவர்.

அகீகா
துண்டிக்கப்பட்டது, அகற்றப்பட்டது, களையப்பட்டது என்பன இதன் சொற்பொருள்களாகும். குழந்தை பிறந்த ஏழாவது நாளில், குழந்தையின் நல்வாழ்விற்காக ஆடு அறுத்து தர்மம் செய்வதற்கு ‘அகீகா’ எனப்படும். அன்றைய தினம் கiளையப்படும் குழந்தையின் முடிக்கும் அகீகா (களையப்பட்டது) என்பர். அறுக்கப்படும் ஆட்டிற்கும் அகீகா (துண்டிக்கப்பட்டது) எனப்படுவதுண்டு.

அங்கத் தூய்மை
உளு தொழுகை போன்ற இறைவழிபாடுகளை நிறைவேற்றுவதற்குமுன் முகம், கை, கால், தலை ஆகியவற்றை அல்லாஹ்வின் ஆணைக்கிணங்க நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்குட்பட்டுத் தூய்மை செய்யும் ஒரு வகை தூய்மை முறை.

அச்ச நேரத் தொழுகை
(ஸலாத்துல் கவ்ஃப்). போர் மூளும் முன் எதிரிகள் தாக்கலாம் என்ற அச்சம் உள்ள நிலையில் தொழுகை நேரம் வந்துவிடும்போது ஒரேயோர் இமாமின் தலைமையின் கீழ் படைவீரர்கள் இரு அணிகளாகப் பிரிந்து தொழும் கடமையான தொழுகை.

மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும்

To buy full book please visit: www.rahmath.net
(Our special Thanks to Bro. Nizhar – Madurai)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *