கல்வி தொடர் வகுப்பில் முதலில் அல்லாஹ்-வின் பெயர்கள் பண்புகள் பற்றிய விளக்கம் 10 தொடர் முடிந்த நிலையில் இஸ்லாமிய கொள்கையின் அடுத்ததாக நம்பவேண்டியது மலக்குமார்கள் – வானவர்கள் பற்றிய நம்பிக்கையாகும்.
இதில் வானவர்கள் என்றால் யார்? அவர்களுக்கும் மனித இனமாக நமக்கும் உள்ள தொடர்புகள் என்ன? வானவர்களின் சிறப்பு, அவர்களின் பணி என்ன? வானவர்களின் எண்ணிக்ககை என்ன? இது பற்றிய விளக்கத்தினை தொடர்ந்து 4 வார காலத்திற்கு ‘வானவர்கள் உலகம்’ என்ற தலைப்பில் ஆசிரியர் முஹம்மத் அஸ்ஹர் (அழைப்பாளர், அல்-கோபர் தஃவா [ஹிதாயா] நிலையம் ) விளக்கம் அளிக்கின்றார்.
(ஒவ்வொரு புதன்கிழமை அன்று இஷா தொழுகைக்குபின் அல்-கோபர் சில்வர் டவர் பின்புறம் உள்ள ஜாமிஆ புகாரீ பள்ளி வளாகத்தில் நடைபெற்றுவருகின்றது அல்-கோபர் சுற்றுவட்டார பகுதியில் வசிக்க கூடியவர்கள் இதில் கலந்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது)
- வானவர்களின் (மலக்குமார்கள்) உலகம் என்றால் என்ன?
- ஏன் வானவர்களின் மீது நம்பிக்கை கொள்ளவேண்டும்?
- நமது விஷயத்தில் வானவர்கள் எவ்வாறெல்லாம் கவனம் செலுத்துகின்றார்கள்?
- யாருக்கு மலக்குமார்கள் முஸாபஹா செய்வார்கள்?
- வானவர்கள் கர்வம் கொண்டவர்களா?
- ஸலாத்திற்கு பதில் சொல்லுமுறையை எவ்வாறு அறிந்துகொள்ளப்பட்டது?
- ரூஹ் – உயிர் கொண்டு வரும் வானவரின் பணி என்ன?
- ரூஹ் – உயிர் கருவறையில் உருவாகும் போது எந்த நான்கு விஷயங்கள் பற்றி வானவர் அல்லாஹ்-விடம் கேட்பார்?
- மனிதனுடைய பாதுகாப்பு விஷயத்தில் மலக்குமார்களின் பணி என்ன?
- அல்லாஹ்-வுடைய நேசம் உறுதியாகிவிட்டால் அடுத்து யாருடைய நேசம் கிடைக்கும்?
- அல்லாஹ்-வுடைய பாதையில் செல்வோருக்கு கிடைக்கும் பாதுகாப்பு என்ன?
- ஸுலைமான் (அலை) அவர்களுக்கு ஆலோசனை வழங்கிய மலக்கு என்ன கூறினார்?
- முக்கியமான மூன்று மலக்குமார்கள் யார்? யார்? அவர்களின் பணிகள் என்ன?
- அல்லாஹ்-விடம் மலக்குமார்கள் மூமின்களுக்கு செய்யும் பிரார்த்தனை (துஆ) – பாவமன்னிப்பு என்ன?
இஸ்லாமிய அகீதா -கொள்கையுடன் சம்மந்தப்பட்ட மேற்கண்ட கேள்விகளுக்கான விடைகான இந்த வீடியோ பதிவை பார்வையிடவும். ஆசிரியரிடம் மாணவன் பாடம் படிக்கும் வழிமுறைப்போன்று இந்த வீடியோ பதிவை முழு கவனத்துடன் பார்வையிடவும்.
அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும்
சிறப்பு கல்வி தொடர் வகுப்பு-II
இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம்
(சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்)
நாள்: 26-10-2016 (புதன்கிழமை)
வானவர்களின் உலகம் (தொடர்-1): அறிமுகம்
வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம்
படத்தொகுப்பு: Islamkalvi Media Unit
ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக்