நெருங்கி விட்ட மறுமைக்கான அடையாளங்கள் என்ற தொடர் வகுப்பு அல்-கோபர் தஃவா நிலையம் (ஹிதாயா) மூலமாக ஜாமிஆ புகாரி பள்ளி வளாகத்தில் பிரதி புதன்கிழமை நடைபெற்று வருகின்றது. இந்த வகுப்பை ஹிதாயா அழைப்பாளர் மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அவர்கள் நடத்தி வருகின்றார்கள்.
முதலில் சிறு அடையாளங்களைப்பற்றியும் பின்பு பெரிய அடையாளங்களை தெளிவுபடுத்தி வருகின்றார். இதில் ஆறாவது தொடரான இத்தொடரில் கீழ்கண்ட செய்திகளுக்கு விளக்கமளிக்கபட்டுள்ளது. விரிவான விளக்கத்திற்க்கு தொடர்ந்து வீடியோ பதிவை பார்வையிடவும்.
தொடர்-6
67. அல்குர்ஆன் ஓதப்படுவது உலக இலாபங்களுக்காக மட்டுமே இருக்கும் (ஆதாரம்- அஹ்மத் 14898 மற்றம் தப்ரானி 14876)
68. ஹரமானவற்றை உண்ணுதல் – பொருளீட்டல் பற்றிய கவனமின்மை, ஹரமானவற்றிக்கு பெயர்கள் மாற்றப்பட்டு உண்ணுதல் (புகாரி-7)
69. மக்களுக்கு மத்தியில் மழைபொழியும் அந்த மழை மண்ணால் ஆன அனைத்து வீடுகளையும் அழித்துவிடும், ரோமங்களால் ஆன வீடுகளை விட்டுவிடும் (ஆதாரம்: அஹ்மத் 7554)
70. உம்மத்தில் உமது கூட்டம் (குரைஷிகளை பற்றி குறிபிடுகின்றது) என்னிடத்தில் விரைவாக வருவார்கள் (ஆதாரம்: அஹ்மத் 24564)
71. அரபு கோத்திரங்கள் மத்தியில் குரைஷிகள் விரைவாக இல்லாமல் (அழிந்து) ஆகுவது (ஆதாரம்: அஹ்மத் 84118)
72. ரோம (ர்கள்) மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் அரபு மக்கள் எண்ணிக்கை குறைவதும்
தஜ்ஜால் குழப்பத்தின் போது மக்கள் மலைகளை தேடி ஒதுங்குவார்கள் அரபுகளின் எண்ணிக்கை மிக குறைவாக இருக்கும் (ஆதாரம்: முஸ்லிம் 7580)
73. மக்களை விட்டு இஸ்லாம் படிப்படியாக மங்கிபோகும் (அல்லாஹ் இறக்கியதை கொண்டு தீர்ப்பளிக்காமல் விட்டு விடுவதும் தொழுகையை விட்டு விடுதலும்) (ஆதாரம்: அஹ்மத் 22216)
74. மக்கள் வீடுகளை கட்டுவார்கள் அதிலுள்ள சுவர்கள் ஆடைகளை அலங்கரிப்பது போன்று அலங்கரிப்பார்கள் (அல்-பானி (ரஹ்) அவர்கள் ஸஹீஹ் என்ற தரம் கொடுத்துள்ளார்கள்)
75. ஒரு கூட்டம் வெளியேறும் அவர்கள் மாடுகள் (கால்நடைகள்) அசைபோடுவதைப்போன்று பேசிக்கொண்டிருப்பார்கள் (மார்க்கத்திற்கு முரணான விஷயங்களை பேசிகொண்டிருப்பார்கள்) (ஆதாரம்: அஹ்மத் 1597)
76. அதிகமான இடி மின்னல்கள் மூலம் மக்களுக்கு அழிவு உண்டாகும் (ஆதாரம்: அஹ்மத் 11638)
77. மோசமானவர்கள் உயர்வதும் அந்தஸ்துகளை பெறுவதும் நல்லவர்கள் மதிப்பற்று போவதும் தீயவர்கள் மதிப்புடையவர்களாக ஆவதும், நல்ல செயல்கள் குறைந்து தீயவைகள் அதிகரிப்பதும், அல்-குர்ஆனை விட்டு விட்டு வேறு வேறு புத்தகங்களை தேடுவதும் குர்ஆன் புறகணிப்பிற்குள்ளாவதும்.
78. மனிதனுடைய தீங்கிற்கு பயந்து அவனை கண்ணியப்படுத்துதல் (பாவங்களை, அநியாயங்களை கண்டிக்காமல் மவுனியாக இருத்தல்.
79. தலைமுடியை புறாக்களின் கழுத்துகளின் முடியைப்போன்று நிறம்மாற்றுதல் (முடிக்கு சாயம் பூசுதல்) (ஆதாரம்: அஹ்மத் 2470)
80. முதல் நாள் பிறை இரண்டாம் நாள் பிறையைப்போன்று பெரிதாக இருக்கும் (ஆதாரம்: தப்ரானி 869)
81. மக்கள் மதீனாவில் முற்றுகையிடப்படுவார்கள் (ஒதுங்குவார்கள்)
82. மூன்று குழப்பங்கள் (பித்னாக்கள்) ஏற்படாதவரை மறுமை நிகழாது
1. அஹ்லாஸ் (أحلاس) .
2. ஸர்ரா செல்வ செழிப்பு (سرّة)
3. துகைமா (دحيمة)
83. வாரிசுகளின் சொத்துக்கள் பங்கீடு செய்யப்படாத நிலை மற்றும் கனிமத் பொருட்களை கொண்டு சந்தோஷம் அடையாத நிலை (ஆதாரம்: முஸ்லிம் 7463)
84. இந்தியாவின் மீது ஒரு கூட்டம் போர் செய்வதும், ஈஸா (அலை) தலைமையில் இன்னொரு கூட்டம் போர்செய்வதும்.
85. அரசுக்கு கிடைக்கவேண்டிய வரிகள் (ஜிஸ்தியா, ஹரஜா) கிடைக்காமல் போவது
(ஆதாரம்: புகாரி-7459, முஸ்லிம்-7499)
86. ஈஸா (அலை) அவர்கள் வருகைக்கு பின் நறுமணம் கமழ்ந்த காற்றின் மூலம் மூமின்களுடைய உயிர்கள் கைபற்றப்படுவது (ஆதாரம்: முஸ்லிம்-7560)
87. உம்மத்திற்கு எதிராக நாலபுறங்களிலிருந்தும் தாக்குதல் நடைபெறுவதும், வஹ்ன் நோய் உள்ளத்தில் ஏற்படுவதும் (ஆதாரம்: அபூதாவூத்-4499)
அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும்
சிறப்பு கல்வி தொடர் வகுப்பு-III
தொடர்-06 | சிறிய அடையாளங்கள்-6 | நெருங்கிவிட்ட மறுமையின் அடையாளங்கள்
இடம்: ஜாமிஆ புகாரீ பள்ளி வளாகம்
(சில்வர்டவர் பின்புறம் அல்-கோபார்)
நாள்: 22-02-2017 (புதன்கிழமை)
வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம்
படத்தொகுப்பு: Islamkalvi Media Unit EP
ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக்