இந்தியன் இஸ்லாஹி சென்டர் – மஸ்கட் (தமிழ் பிரிவு)
வழங்கும்
சிறப்பு கல்வி வகுப்பு
பாடம்: மனித உயிர் உரிமை பற்றிய நாற்பது ஹதீஸ்கள்
அரபி மூலம்
தொகுப்பு :மிஷ்அல் இப்னு நாஸிர் (ஹபிலஹுல்லாஹ்)
அணிந்துரை: அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் குனைமான்
பகுதி-8: ஹதீஸ் 36 முதல் 40 வரை
விளக்கவுரை தமிழிலில் வழங்குபவர்:
மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன்
அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்
அல்-கோபர், சவூதி அரபியா
நாள்: 19-08-2017 (சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 வரை)
இடம்: இந்தியன் இஸ்லாஹி சென்டர் – மஸ்கட்
நிகழ்ச்சி ஏற்பாடு:
Indian Islahi Center (Tamil Wing) Muscat
அல்-ஹமரியா அல்-மாஹா பெட்ரோல் பம்ப் அருகில்
மேலதிக தொடர்புக்கு: 00968 97608092
36-37-6037. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘(இறுதிக் காலத்தில் மக்களின் ஆயுட்)காலம் குறும்விடும்; நற்செயல் குறைந்துவிடும்; (பேராசையின் விளைவாக மக்களின் (மனங்களில்) கருமித்தனம் உருவாக்கப்படும் ‘ஹர்ஜ்’ பெரும்விடும்’ என்று கூறினார்கள்.
மக்கள், ‘ஹர்ஜ் என்றால் என்ன?’ என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், ‘கொலை கொலை’ என்று (இரண்டு முறை) கூறினார்கள்.
38-5575. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! மக்களுக்கு ஒருநாள் வராதவரை உலகம் அழியாது. அன்று கொலை செய்தவனுக்குத் தான் எதற்காகக் கொன்றோம் என்பது தெரியாது. கொல்லப்பட்டவனுக்குத் தான் எதற்காகக் கொல்லப்பட்டோம் என்பது தெரியாது” என்று கூறினார்கள்.
அப்போது “அது எவ்வாறு நடக்கும்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கொலை சர்வ சாதாரணமாகிவிடும். கொன்றவனும் கொல்லப்பட்டவனும் நரகத்திற்குச் செல்வார்கள்” என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.(முஸ்லிம்)
39-100. ‘நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து விட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்’ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.
40-5034. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அநீதியிழைப்பதிலிருந்து தவிர்ந்துகொள்ளுங்கள். ஏனெனில் அநீதியானது, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும். கருமித்தனத்திலிருந்து தவிர்ந்துகொள்ளுங்கள். ஏனெனில் கருமித்தனமானது, உங்களுக்கு முன்னிருந்தவர்களை அழித்தது; இரத்தங்களைச் சிந்துவதற்கும் இறைவனால் அவர்களுக்குத் தடை செய்யப்பட்டவற்றை அனுமதிக்கப் பட்டவையாக ஆக்கிக் கொள்வதற்கும் தூண்டுகோலாக இருந்தது.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்)