-இம்தியாஸ் யூசுப் ஸலபி-
அண்மைக்காலமாக ஈரானுக்கும் சவுதிக்குமிடையில் இராஜதந்திர உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு விரிசல்கள் வலுவடைந்துள்ளன. மத்தியக் கிழக்கில் ஷீஆ தீவிரவாதத்தையும் குழப்பத்தையும் உண்டு பண்ணி வரும் ஈரான் அதன் தொடரில் சவுதிக்குள்ளும் தீவிரவாதத்தை ஏற்படுத்திட தன்னுடைய ஏஜண்டான நமிர் அந்நமிர் என்ற ஷீஆகாரரை ஏவிவிட்டது. சவுதி அரசாங்கம் தீவிரவாதிகளுக்கெதிராக நடவடிக்கை எடுத்து மரணத்தண்டனை விதித்தது. இதனையடுத்து ஈரானினுள்ள சவுதி தூதரகம் தாக்கப்பட்டு தீவைத்து கொளுத்தப்பட்டது.
கடந்த வருடம்(2015) ஹஜ்ஜின் போது ஷீஆக்கள் மீனாவில் திடிரென நெரிசல்களை உருவாக்கி நூற்றுக்கணக்கான ஹாஜிகளை பழியாக்கியதைத் தொடர்ந்து பெரும் பதற்றம் உருவானது. ஈரானியர்கள் வெட்டிய குழியில் அவர்களே விழுந்ததால் அதிகமான ஈரானியர்களும் இறந்தனர். இதற்கு சவுதி அரசாங்கம் காரணம் எனக் கூறி ஈரான் கண்டனம் தெரிவித்தது மட்டுமன்றி இந்த வருடம் ஈரானியர்களை ஹஜ்ஜுக்கும் அனுப்பவில்லை. அத்துடன் சவுதியை குட்டிச் சாத்தான் என்றும் புனித மக்கா மதீனா பராமரிப்பை சவுதியிடமிருந்து விடுவித்து முஸ்லிம் நாடுகளின் பொதுவான பராமரிப்பின் கீழ் வைக்க வேண்டும் என்றும் கோருகின்றது.
ஈரான் பற்றியும் அதன் கொள்கைப் பற்றியும் அறிந்தவர்கள் ஈரானின் கோர முகத்தை அறிய இந்த சம்பவம் ஒன்றே போதுமானது. மக்காவையும் மதீனாவையும் தன் கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டுவர ஈரான் பல காலமாக முயற்சித்து வருகிறது. ஹிஜ்ரி 313-ம் ஆண்டு ஷீஆக்கள் ஹஜ்ஜின் போது குழப்பத்தை உண்டுப் பண்ணி பல நூறுமுஸ்லிம் ஹாஜிகளை கொலை செய்து ஹஜ்ருல் அஸ்வத் கல்லையும்; பிடுங்கிக் கொணடு சென்றனர். இவர்களுடன் போராடி மறுபடியும் அந்த புனிதக்கல் மீட்கப்பெற்று கஃபாவில் பதிக்கப்பட்டது.
குமைனி ஆட்சிக்கு வந்த பின் 1982ம் ஆண்டு ஹஜ்ஜின் போது பெரும் கலவரத்தை உண்டுப் பண்ணி கோஷங்கள் முழங்கி குமைனியின் படங்களை ஏந்தி கலவரங்களை ஏற்படுத்தினர். உள்ளுர் ஷீஆக்களின் ஆதரவுடன் ஆயுதங்களை கடத்தி வந்து கஃபாவில் துப்பாக்கி சூட்டும் நடாத்தினர். இதனால் நூற்றுக்கணக்கான ஹாஜிகள் கொல்லப்பட்டனர். புனிதமான மாதத்தில் புனிதமிக்க வணக்கத்தை செய்யும்; முஸ்லிம்களை கொன்றொழிக்கும் இவர்களது சாத்தானிய செயற்பாடு தொடர்ந்த நிலையில் உள்ளது. இந்த வருடம் ஷீஆக்கள் ஹஜ்ஜுக்கு செல்லாததால் முஸ்லிம்கள் பயமின்றி அச்சமின்றி கலக்கமின்றி நிம்மதியாக ஹஜ் செய்தனர்.
தற்போது அதாவது 28.10.2016 அன்று யமனிலுள்ள ஹூதி ஷீஆக்கள் மக்காவின் மீது ஏவுகனை தாக்குதல்களை; தொடுத்த போது சவுதி படைகள் அவைகளை முறியடித்துள்ளன. இதன் விளைவாக பாரிய அழிவும் சேதமும் தவிரக்கப் பட்டுள்ளது. ஆனாலும் ஷீஆக்களின் இந்த தாக்குதல் போராட்ட முயற்ச்சி இத்துடன் நின்று விடும் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை.
உலகிலுள்ள ஷீஆக்கள் குறிப்பாக மத்தியக் கிழக்கிலுள்ள ஷீஆக்கள் ஒன்று சேர்ந்து முடிவெடுக்காமல் எந்தவொரு காய்நகர்த்தல்களையும் செய்யமாட்டார்கள். அதிலும் குறிப்பாக ஈரானின் எந்தவொரு ஆதரவுமின்றி செயல்பட மாட்டார்கள். மக்காவின் மீதான இத்தாக்குதல்களும் நன்கு பேசி முடிவெடுக்கப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது.
ஈரானின் ஆன்மீகத் தலைவர் குமைனியின் உத்தரவுக்கு அமையவே மக்கா மீது ஏவுகனை தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் எதிர்ப்பு தேசிய கவுன்சிலினின் தலைவர் மர்யம் ரஜ்வி அவர்கள் (31.10.2016) அவர்கள் குற்றம் சாட்டியது இங்கே குறிப்பிடத்தக்கது.
உலக முஸ்லிம்களின் இதயமான மக்காவின் புனிதம் பற்றியோ அல்லது கஃபாவின் புனிதம் பற்றியோ ஒரு போதும் ஷீஆக்கள் கவனிப்பதில்லை. ஆப்ராவினால் தோற்றுப்போன காரியத்தை வெற்றிகரமாக முடித்துவைக்க இவர்கள் முனைகிறார்கள்.
நபி(ஸல்) அவர்களின் வருகைக்கு முன்பிருந்து இன்று வரை குறைஷிகளிடமிருந்து வரும் கஃபா பரிபாலனம் குறித்து ஷீஆக்கள் பேசுவது உலக முஸ்லிம்களின் நலனுக்காக அல்ல. அவர்கள் எதிர்பார்க்கும் அவர்களுடைய 12 வது இமாமான ஹஸன் அல் அஸ்கரியின் வருகை மக்காவில் நிகழும் என்றும் அவர் புதிய வேதத்தை கொண்டு வருவார் என்றும் ருக்னுல்யமானிக்கும் மகாமே இப்றாகீமுக்குமிடையில் வைத்து ஷீஆக்கள் முஹர்ரம் மாதம் 9-ம் நாள் அவருக்கு பைஅத் செய்து கொடுப்பார் என்றும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.
அதுமட்டுமன்றி அந்த இமாமின் வருகையுடன் மக்காவின் கதீப் கொல்லப்படுவார்; 70 அரபுகோத்திரத்தார் கொன்று பழி தீர்க்கப்படுவர்; ஷீஆவை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கொலை செய்யப்படுவர் என்றும் ஈமான் கொண்டுள்ளார்கள்.
இந்த அகோர காட்சிகளும் செயற்பாடுகளும் நடைப்பெற வேண்டுமாயின் கஃபாவின் பரிபாலனம் தன் கட்டுப்பாட்டில் வர வேண்டும் எனப்தே ஷீஆக்களின் நிலைப்பாடாகும். அதற்காகவே கஃபா பரிபாலனம் குறித்து தற்போது பிரச்சனைகளை கிளப்பி ஹஜ்ஜை அரசியல் மயமாக்கி சவுதியுடன் போரை தொடங்கி இன்னுமொரு சிரியாவாக மாற்ற ஈரான் முனைகிறது. எனவே இவர்களது சூழ்ச்சியை முஸ்லிம்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.