வரலாறு நெடுகிலும் குப்பார்களின் எதிர்ப்புக்கு மத்தியில் வளர்ந்த மார்க்கமே இஸ்லாம்
அன்று தொடக்கம் இன்றுவரை முஸ்லிம்களை கொலை செய்து இஸ்லாத்தை அழிக்க குப்பார்கள் செய்த முயற்சிகள் நிறைவேறவில்லை அவர்களின் எதிர்பார்புகளுக்கு மாற்றமாக இஸ்லாம் இன்னும் தீவிரமாக வளர்ந்தது.
குப்பார்களின் சதி:
இஸ்லாத்தை அழிக்க முடியாது என்பதை அறிந்த குப்பார்கள், செய்த இரண்டாம் கட்ட சதி முஸ்லிம்களை இஸ்லாத்தை விட்டு தூரமாக்கும் திட்டமாகும். அதற்கு அவர்கள் பல முயற்சிகளை இன்று வரை மேற்கொண்டு வருகின்றார்கள். அதில் அவர்கள் வெற்றி கண்ட மிக முக்கியமான இடங்களில் ஒன்று.
மார்க்க கல்வியை விட்டும் தூரமாக்குதல்:
இஸ்லாமியர்களை மார்க்க கல்வியை விட்டு தூரமாக்கும் முயற்சியாகும். இதற்கு பல சான்றுகளை கூறலாம்
- தாத்தாரிய படையெடுப்பின் போது இஸ்லாமியர்களின் பெரும் நூலகங்கள் அழிக்கப்பட்டமை
- அறிஞர்களை கொலை செய்தமை அல்லது சிறை பிடித்தமை
- இஸ்லாமிய புத்தங்களில் சடவாதங்கள் மற்றும் கிரேக்க தத்துவங்கள், மூட நம்பிக்கைகளை உள்ளடங்க செய்தமை
- மார்க்க கல்வியை விட்டு மற்ற ஏனைய வளங்களை கற்பதில் தான் இஸ்லாமிய சமூகத்தின் எழுச்சி இருக்கின்றது என்ற சிந்தனையை பல ஒப்பீட்டு உதாரணங்களை கொண்டு எம் சமூகத்தில் ஊடுருவச் செய்தமை.
இந்த முயற்சிகளினூடாக முஸ்லிம்களை இஸ்லாத்தை விட்டுத் தூரமாக்கும் திட்டத்தில் குப்பார்கள் வெற்றி கண்டு கொண்டுள்ளார்கள் என்பது ஒரு வகையில் வருத்தமான செய்தியாகும்.
வரலாறு நெடுகிலும் குப்பார்களின் ஊடகமாக செயல்பட்டு வந்தவர்கள் ஷீஆக்கள் அவர்களை உற்ற நண்பனாக தேர்வு செய்து கொண்டவர்கள் இஹ்வான்களும், தரீக்காவாதிகளுமாகும்.
இவர்கள் பல வழிகெட்ட சிந்தனைகளை இஸ்லாத்தின் பெயரால் சமூகத்தில் முன்வைதார்கள். இவர்களின் வலையில் சிக்கிய ஒன்றுமறிய பாமர முஸ்லிம்கள் இஸ்லாத்தை விட்டு தன்னை அறியாமலே தூரமாகி விட்டார்கள்.
இந்த தகவல்களுக்கு இவர்களின் புத்தகங்கள் இன்று வரை மிகப்பெரும் சான்றாக அமைந்துள்ளது.
நட்புடன்…
மவ்லவி. இன்திகாப் உமரி – இலங்கை