Featured Posts

நல்லமல்களை அழிக்கக்கூடியவை | தொடர்-03

நல்லமல்களை அழிக்கக்கூடியவை | தொடர்-03

21- ஒரு முஸ்லிம் வழங்கிய அடைக்கலத்தை முறித்தவனின் நல்லமல்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது

صحيح البخاري- 7300
ذِمَّةُ المُسْلِمِينَ وَاحِدَةٌ، يَسْعَى بِهَا أَدْنَاهُمْ، فَمَنْ أَخْفَرَ مُسْلِمًا فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالمَلاَئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ، لاَ يَقْبَلُ اللَّهُ مِنْهُ صَرْفًا وَلاَ عَدْلًا

முஸ்லிம்களில் யார் அடைக்கலம் அளித்தாலும் அது ஒன்றேயாகும் (மற்ற முஸ்லிம்கள் தரும் அடைக்கலத்திற்குச் சமமானதாகும்). அவர்களில் கீழ்நிலையில் உள்ளவர்கள் கூட அடைக்கலம் அளிக்க முன்வரலாம். ஒரு முஸ்லிம் அளித்த அடைக்கலத்தை யாரேனும் முறித்தால் அவன் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும். அவனிடமிருந்து அவன் செய்த கடமையான வணக்கம் கூடுதலான வணக்கம் எதையுமே அல்லாஹ் ஏற்க மாட்டான். (புஹாரி – 7300)

22- இரத்த உறவைத் துண்டித்து வாழ்நதவரின் நல்லமல்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

مسند أحمد – 10272
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ‘ إِنَّ أَعْمَالَ بَنِي آدَمَ تُعْرَضُ كُلَّ خَمِيسٍ لَيْلَةَ الْجُمُعَةِ، فَلَا يُقْبَلُ عَمَلُ قَاطِعِ رَحِمٍ

ஆதமுடைய மக்களின் நல்லமல்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை வெள்ளி இரவில் எடுத்துக்காட்டப்படுகின்றன. இரத்த உறவைத் துண்டித்து வாழ்ந்தவரின் நல்லமல்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. (முஸ்னத் அஹ்மத் – 10272)

23- சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் தங்கள் தர்மங்களைப் பாழாக்குவோர்

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُبْطِلُوا صَدَقَاتِكُمْ بِالْمَنِّ وَالْأَذَى كَالَّذِي يُنْفِقُ مَالَهُ رِئَاءَ النَّاسِ وَلَا يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ( البقرة: 264)

நம்பிக்கை கோண்டோரே அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல் உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள் (அல் பகறா -264)

24- அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தவரின் குடும்பத்தின் நலம் காக்கப் பணிக்கப்பட்டவர், தான் செய்த துரோகத்தினால் தனது நன்மைகளை இழப்பார்

صحيح مسلم – 1897
عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: حُرْمَةُ نِسَاءِ الْمُجَاهِدِينَ عَلَى الْقَاعِدِينَ كَحُرْمَةِ أُمَّهَاتِهِمْ، وَمَا مِنْ رَجُلٍ مِنَ الْقَاعِدِينَ يَخْلُفُ رَجُلًا مِنَ الْمُجَاهِدِينَ فِي أَهْلِهِ فَيَخُونُهُ فِيهِمْ، إِلَّا وُقِفَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ، فَيَأْخُذُ مِنْ عَمَلِهِ مَا شَاءَ، فَمَا ظَنُّكُمْ؟،

போருக்குச் செல்லாமல் (ஊரில்) இருப்போர் போருக்குச் சென்ற வீரர்களின் துணைவியரைத் தம் தாயை மதிப்பதைப் போன்று மதிக்க வேண்டும். அறப்போர் வீரர் புறப்பட்டுச் சென்ற பின் அவருடைய குடும்பத்தாரின் நலம் காக்கும் ஒருவர் துணைவியர் விஷயத்தில் அவருக்குத் துரோகமிழைத்தால் அவ்வீரருக்காக அவர் மறுமை நாளில் நிறுத்தப்பட்டே தீருவார். அப்போது அவருடைய நற்செயல்(களின் நன்மை)களில் தாம் நாடிய அளவுக்கு எடுத்துக்கொள்வார். (அப்போது அவருடைய நன்மைகள் அனைத்தையுமே அவர் எடுத்துக் கொள்வதைப் பற்றி) நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
(ஸஹீஹ் முஸ்லிம் – 3852)

25- ஒரு முஃமினைக் கொலை செய்தவரின் நன்மைகள் ஏற்கப்படமாட்டாது.

سنن أبي داود – 4270
عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، أَنَّهُ سَمِعَهُ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: مَنْ قَتَلَ مُؤْمِنًا فَاعْتَبَطَ بِقَتْلِهِ، لَمْ يَقْبَلِ اللَّهُ مِنْهُ صَرْفًا، وَلَا عَدْلًا

ஷரீஆ ரீதியான உரிமையும் காரணமுமில்லாமல் எவன; ஒரு முஃமினைக் கொலை செய்தானோ அவன் செய்த கடமையான வணக்கம், கூடுதலான வணக்கம் எதையுமே அல்லாஹ் ஏற்கமாட்டான்.
(ஸுனன் அபீதாவுத் – 4270)

மறுமை வெற்றிக்காகவே நாம் இரவு பகலாக நல்லமல் செய்கின்றோம். ஆயினும் தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்யும் சிறு தவறுகளால் கூட நமது நற்காரியங்கள் காற்றில் பறக்கும் புழுதிகளாக மறைந்து போகின்றன என்பதுடன் சில சமயங்களில் நாம் விடும் தவறுகளால் நமது நன்மைகள் முழுமையாகவோ பகுதியளவிலோ நாமறியாமலேயே அழிந்து போகின்றன என்பதையும் உணர்ந்து நமது நல்லமல்களைப் பேணி பாதுகாத்துக் கொள்வோமாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *