14 ஹதீஸ் கிதாபுகளிலிருந்து (1-புகாரீ, 2-முஸ்லிம், 3-ஸுனன் அபீதாவூத், 4-ஸுனன் திர்மிதி, 5-ஸுனன் நஸாயீ, 6-ஸுனன் இப்னு மாஜா, 7-ஸுனன் தாரமீ , 8-முஅத்தா மாலிக், 9-முஸ்னத் அஹமத், 10-ஜாமிவு உஸூலுத் திஸ்ஆ , 11-பைஹகீ, 12-ஸஹீஹ் இப்னு ஹிப்பான் , 13-இப்னு குஸைமா மற்றும் 14-زوائد الأحاديث المختارة لضياء الدين المقدسي على الكتب التسعة ) தொகுக்கப்பட்ட நூல் معالم السنة النبوية (மாஆலிமுஸ் சுன்னா அந்நபவிய்யா) இந்த நூல் மொத்தம் 3921 ஹதீஸ்களை கொண்டது இதில் நோன்பு சம்மந்தமான மொத்தம் 99 ஹதீஸ் கொண்ட பாடம். ஹதீஸ்களின் விளக்கவுரை வகுப்பு ராக்கா தஃவா நிலையத்தில் கடந்த 3 வாரங்களாக நடைபெற்றது. இதன் உள்ளடக்கம் (Index) இங்கே வழங்ப்பட்டுள்ளது.
பகுதி 01
தொடர்-01 இடம்பெற்றுள்ள செய்திகள் (வீடியோ பதிவை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்)
- ரமளான் நோன்பு கடமை மற்றும் சிறப்பு
- ரமளான் மாதத்தின் சிறப்பு
- பிறைபார்த்து நோன்பு வையுங்கள் நோன்பை விடுதல்
- ஒவ்வொரு பிரதேசத்திற்கும் பிறை பற்றிய செய்திகள்
- பெருநாளுடைய இரண்டு மாதங்களின் கூலி குறையாது
- ஃபஜ்ர் முதல் நோன்பை ஆரம்பித்தல்
- நோன்பாளி நோன்பை எப்போது திறப்பது
- ஸஹர் செய்வதும், அதனை பிற்படுத்துவதும் மிகவும் விரும்பத்தக்கது
- நோன்பு திறப்பதை அவரசப்படுத்துவது சிறந்தது
- நோன்பாளி மறந்து சாப்பிட்டால் சட்டம் என்ன?
- ரமளானை ஒரு நாள் முந்தி நோன்பு வைக்ககூடாது
- ஒரு நோன்பை தொடர்ந்து (ஸஹரை தாண்டி) பிடிக்க கூடாது
- ஸஹர் வரை ஒரு நோன்பை தொடரலாம்
தொடர்-02 இடம்பெற்றுள்ள செய்திகள் (வீடியோ பதிவை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்)
14. நோன்பாளி மனைவியை முத்தமிடலும், அணைத்தலும்
15. குளிப்பு கடமையான (ஜுனுப்) நிலையில் ஸஹரை அடைந்தால்
16. நோன்பாளி மனைவியுடன் உறவுகொண்டாலோ, காரணமின்றி நோன்பை முறித்தால் சட்டம் என்ன?
17. நோன்பாளி இரத்தம் குத்தி (ஹிஜாமா) எடுத்தல்
18. சிறுவர்கள் நோன்பு வைத்தல்
19. ரமளான் கடமையான நோன்பை களா செய்தல்
20. நோன்பு வைத்த நிலையில் மரணித்தால்
21. தவறுதலாக நோன்பை திறந்துவிட்டால்
22. ஒரு பிரயாணி ரமளான் நோன்பை பிடித்தலும் விடுதலும்
23. நோன்பின் நிய்யத் சம்மந்தமான செய்திகள்
24. சந்தேகத்திற்குரிய (ஷக்-வுடைய) நாளில் நோன்பு வைத்தல் பற்றிய சட்டம்
25. பிறை விஷயத்தில் தவறு ஏற்பட்டால் என்ன செய்வது
26. நோன்பாளி எதைக்கொண்டு நோன்பு திறப்பது?
27. நோன்பு திறக்கும் போது கூறவேண்டிய துஆ
28. யாரிடத்தில் நோன்பு திறக்கின்றோமோ அவருக்கு செய்ய வேண்டிய துஆ
29. தலைப்பிறையை காணும் போது கூற வேண்டிய துஆ
30. நோன்பாளியை நோன்பு திறக்க வைத்தால்..
31. கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் கடமையான நோன்பை விடுதல் பற்றிய சட்டம்
32. ஒருவர் வேண்டுமென்றே வாந்தி எடுத்தால் சட்டம் என்ன?
தொடர்-03 இடம்பெற்றுள்ள செய்திகள் (வீடியோ பதிவை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்)
பகுதி-02: தாரவீஹ் மற்றும் லைத்துல் கத்ர்
- இரவு தொழுகை (தாரவீஹ்) சிறப்பு
- லைத்துல் கத்ர் இரவின் சிறப்பு அதனை அடைந்து கொள்வதின் சிறப்பு
- லைத்துல் கத்ர் இரவில் கேட்கவேண்டிய துஆ
- பெண்களுக்கு, ஆண் இமாமை கொண்டு தராவீஹ் தொழவைத்தல் பற்றிய சட்டம்
- இரவு தொழுகை – தராவீஹ் எத்தனை ரக்அத்கள்
பகுதி-03: இஃதிகாப் பற்றிய சட்டம்
1. ரமளான் கடைசி 10 இரவுகளில் இஃதிகாப் இருத்தல்
2. இஃதிகாப் இருப்பவர் இதேவையில்லாமல் வீட்டில் நுழையக்கூடாது
3. பெண்கள் இஃதிகாப் இருத்தல்
4. இஃதிகாப் இருப்பவர் தேவைக்காக வெளியில் செல்வது பற்றிய சட்டம்
5. ரமளான் கடைசி 10 இரவுகளில் பெரும் முயற்சி செய்தல்
பகுதி-04: ஸுன்னத்தான நோன்புகள்
1. ரமளான் அல்லாத காலத்தில் நோன்பு வைப்பது பற்றிய சட்டம்
2. காலம் முழுவதும், இரு பெருநாட்களில் மற்றும் அய்யாமுல் தஸ்-ரீக் (துல்ஹஜ் 11, 12, 13) போன்ற நாட்களில் நோன்பு வைப்பது பற்றிய சட்டம்
தொடர்-04 இடம்பெற்றுள்ள செய்திகள் (வகுப்பு நடைபெறவில்லை – பின்னர் பதிவேற்றம் செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்)
3. ஜும்ஆ நாளில் மட்டும் நோன்பு பிடித்தல் தடை
4. ஆஷுரா தின நோன்பு
5. ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்பு வைத்தல் மற்றும் ஏனயை நோன்புகள்
6. அல்லாஹ்-வுடைய பாதையில் இருக்கும் போது நோன்பு வைத்தலின் சிறப்பு
7. ஷவ்வால் மாத ஆறு நோன்பின் சிறப்பு
8. முஹர்ரம் மாதத்தின் நோன்பு வைத்தலின் சிறப்பு
9. நபிலான நோன்புகளின் போது பகலில் நிய்யத் வைத்தலும் நோன்பு திறத்தலும்
10. நோன்பாளி விருந்து அழைக்கப்பட்டால் நான் நோன்பாளி என்று சொல்லுதல்
11. துல்-ஹிஜ்ஜா மாத 10 நாள் நோன்பும் அரபா நோன்பும்