ஏறக்குறைய நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி இது: இறை இல்லம் ஒன்றை நிர்மாணிக்கும்படி தனது தூதரான இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும் அவருடைய மகனார் இஸ்மாயீல் (அலை) அவர்களுக்கும் இறைவன் கட்டளையிட்டான். இறைக்கட்டளையை சிரமேற்கொண்டு அவ்விருவரும் கட்டியெழுப்பியதுதான் இந்த ‘கஅபா’ ஆலயம்! இந்த இறைஇல்லம் கல்லைக் கொண்டு கட்டப்பட்டதாகும்!
இந்த இறைஇல்லம் ஆதம் (அலை) அவர்கள் காலந்தொட்டே இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மனிதர்கள் அனைவரையும் இந்த இறையில்லத்தை தரிசிக்க அழைக்குமாறு இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு இறைவன் கட்டளையிட்டான்.
இந்த இறையில்லத்துக்கு வாழ்நாளில் ஒரு முறையேனும் புனிதப் பயணம் செல்வது முஸ்லிம்களுக்கு மார்க்கக் கடமையாக விதிக்கப்பட்டுள்ளது.
இறைக்கட்டளையை சிரமேற்கொண்டு நிறைவேற்றிட அங்கு செல்லும் முஸ்லிம்கள் இப்ராஹீம் (அலை) அவர்களின் அழைப்புக்கு இவ்வாறு பதில் சொல்கிறார்கள்:-
“இறைவா! இதோ வந்து விட்டேன் நான், உன்னுடைய சந்நிதியில்…!”
நூல்: ‘இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்’
ஆசிரியர்: மு.அ. அப்துல் முஸவ்விர் B.Sc.
இஸ்லாமிய நிலையம் – தமிழ் பிரிவு
குவைத்.